இன்ஃபுளுவென்சா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இன்ஃபுளுவென்சா
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
EM of influenza virus.jpg
TEM of negatively stained influenza virons, magnified approximately 100,000 times
அ.நோ.வ-10 J10., J11.
அ.நோ.வ-9 487
நோய்களின் தரவுத்தளம் 6791
MedlinePlus 000080
eMedicine med/1170  ped/3006
பாடத் தலைப்பு D007251

இன்ஃபுளுவென்சா (Influenza) எனப்படுவது ஃபுளூ எனப் பொதுவாக அழைக்கப்படும் பறவைகளிலும், பாலூட்டிகளிலும் காணப்படும் ஒருவகைத் தொற்று நோய் ஆகும். இது ஆர்த்தோமிக்சோவிரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஆர்.என்.ஏ தீநுண்மத்தினால் (virus) உண்டாவது. இன்ஃபுளுவென்சா என்பது, "செல்வாக்கு" என்னும் பொருள்கொண்ட ஒரு இத்தாலிய மொழிச் சொல்லாகும். குளிர் காய்ச்சல், தொண்டைக் கமறல் (sore throat), தசைநார் வலி, தீவிரமான தலைவலி, இருமல், உடல்வலுக் குறைவு என்பன மனிதர்களில் இந் நோயின் அறிகுறிகளாகக் காணப்படுகின்றன. மிகக் கடுமையான நிலையில் இந்நோய் நுரையீரல் அழற்சி நோயை ஏற்படுத்தக்கூடியது. சில சமயங்களில் இந் நோயைப் பொதுவான தடிமன் காய்ச்சலுடன் குழம்புவதுண்டு. ஆனால், இன்ஃபுளுவென்சா அதனிலும் மிகவும் கடுமையானது. அத்துடன் வேறுவகைத் தீநுண்மத்தினால் உருவாவது. இந் நோய் சில வேளைகளில், சிறப்பாகச் சிறுவர்களில் குமட்டல், வாந்தி என்பவற்றை உண்டாக்கக் கூடியது.

நோயுற்ற பாலூட்டிகள் இருமும் போதும் தும்மும் போதும் வெளிப்படுகின்ற வளித் தொங்கல்களுடன் வரும் தீநுண்மங்கள் பிற பாலூட்டிகளில் தொற்றிக் கொள்கின்றன. இவ்வாறே இந்நோய் ஒருவரிடமிருந்து இன்னொருக்குத் தொற்றுகிறது. நோயுற்ற பறவைகளின் எச்சங்களில் இருந்தும் தொற்று ஏற்படும். எச்சில், மூக்குச் சளி, மலம், குருதி என்பவற்றூடாகவும் தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

இந் நோயை உண்டாக்கும் தீநுண்மங்கள், மனித உடல் வெப்பநிலையில் ஒரு கிழமை வரையில் தொற்று ஏற்படுத்தக்கூடிய வல்லமை கொண்டனவாக இருக்கின்றன. 0 °செ வெப்பநிலையில் 30 நாட்களும், மேலும் குறைந்த வெப்பநிலைகளில் இன்னும் அதிகநாட்களும் ஆற்றல் கொண்டவையாக இவை உள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இன்ஃபுளுவென்சா&oldid=1964739" இருந்து மீள்விக்கப்பட்டது