மைக்கேல் பரடே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மைக்கேல் பாரடே இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மைக்கேல் பரடே
பிறப்பு செப்டம்பர் 22, 1791(1791-09-22)
நியுயிங்டன் பட்ஸ், வர்செஸ்டர், இங்கிலாந்து
இறப்பு 25 ஆகத்து 1867(1867-08-25) (அகவை 75)
ஹாம்ப்டன் கோர்ட், மிடில்செக்ஸ், இங்கிலாந்து
வாழிடம் இங்கிலாந்து
தேசியம் பிரிட்டானியர்
துறை இயற்பியல் மற்றும் வேதியியல்
பணியிடங்கள் ராயல் கல்லூரி
அறியப்படுவது பாரடேவின் தூண்டல் விதி
மின்னிரசாயனவியல்
பாரடே விளைவு
பாரடே கூண்டு
பாரடே மாறிலி
பாரடே கோப்பை
மின்னாற்பகுப்பின் பாரடே விதிகள்
பாரடே முரண்பாடு
பாரடே-திறன் விளைவு
பாரடே அலை
விசைக்கோடுகள்
தாக்கம் 
செலுத்தியோர்
ஹம்ப்ரி டேவி
வில்லியம் தாமஸ் பிராண்டே
விருதுகள் ராயல் பதக்கம் (1835 & 1846)
காப்லே பதக்கம் (1832 & 1838)
ரம்ஃபோடு பதக்கம் (1846)
கையொப்பம்

மைக்கேல் பரடே (Michael Faraday, செப்டெம்பர் 22, 1791ஆகஸ்டு 25, 1867)), பிரித்தானியாவைச் சேர்ந்த ஒரு வேதியியலாளரும், இயற்பியலாளரும் ஆவார். இவர் மின்காந்தவியல், மின்வேதியியல் ஆகிய துறைகளுக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். இக்காலச் சோதனைச்சாலைகளில் சூடாக்குவதற்கான ஒரு கருவுயாக உலகளாவிய முறையில் பயன்படுகின்ற பன்சன் சுடரடுப்பின் ஆரம்ப வடிவத்தைக் கண்டுபிடித்தவரும் இவரே.

மைக்கேல் பரடே, உலக வரலாற்றில் மிகச் சிறந்த அறிவியலாளர்களுள் ஒருவராகக் கருதப்படுகின்றார். சில அறிவியல் வரலாற்று ஆய்வாளர்கள், அறிவியன் வரலாற்றின் மிகச் சிறந்த சோதனையாளராக இவரைக் குறிப்பிடுகின்றனர். இவருடைய முயற்சிகளின் காரணமாகவே மின்சாரம் பொதுவான பயன்பாட்டுக்கு உகந்த ஒன்றாக உருவானது எனலாம்.

ஆரம்பகாலம்[தொகு]

இவர் தெற்கு லண்டனிலுள்ள, இன்றைய எலிபண்ட் அண்ட் காசில் (Elephant and Castle) என்னுமிடத்துக்கு அருகாமையிலுள்ள நியுயிங்டன் பட்ஸ் (Newington Butts) என்னுமிடத்தில் பிறந்தார். இவருடைய குடும்பம் மிகவும் ஏழ்மைப் பட்ட நிலையில் இருந்தது. இவர் தந்தையான ஜேம்ஸ் பரடே ஒரு கொல்லர். பரடே தனது கல்வியைத் தானே பார்த்துக்கொள்ள வேண்டியதாயிற்று. தனது 14 ஆவது வயதில் புத்தகம் கட்டுபவரும், விற்பவருமாகிய ஜோர்ஜ் ரீபோ (George Riebau) என்பவருக்குக் கீழ் தொழில் பயிலுனராகச் சேர்ந்தார். அவருடன் இருந்த ஏழு வருடங்களில், பல புத்தகங்களைப் படிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. இதன் மூலம் அறிவியலிலும், குறிப்பாக மின்னியலிலும் அவருக்கு ஆர்வம் வளர்ந்தது.

மைக்கேல் பரடே

இருபதாவது வயதில், புகழ் பெற்ற வேதியியலாளரும், இயற்பியலாளருமாகிய ஹம்ப்ரி டேவி அவர்களுடைய விரிவுரைகளைக் கேட்கும் சந்தர்ப்பங்கள் கிடைத்தன. இவ்விரிவுரைகளில் தான் எழுதிய குறிப்புக்களை டேவிக்கு, பரடே அனுப்பினார். சந்தர்ப்பம் வரும்போது பரடேயைக் கவனிப்பதாகக் கூறிய டேவி, அவரைப் புத்தகம் கட்டும் தொழிலைத் தொடர்ந்தும் கைக்கொள்ளும்படி அறிவுறுத்தினார். சிறிது காலத்தில் ஒரு வேதியியற் சோதனை ஒன்றின்போது இடம்பெற்ற விபத்தில் கண்பார்வை இழந்த டேவி, மைக்கேல் பரடேயைத் தனது உதவியாளராகச் சேர்த்துக்கொண்டார். பின்னர் ரோயல் சொசைட்டியில் அப்போதிருந்த சோதனைச்சாலை உதவியாளர் வேலையிலிருந்து நிறுத்தப்பட்டபோது, அந்த வேலையை டேவி, பரடேக்குப் பெற்றுக்கொடுத்தார்.

அக்காலத்து வகுப்பு அடிப்படையிலான சமுதாயத்தில், பரடே ஒரு கனவானாகக் கருதப்படவில்லை. 1813 தொடக்கம் 1815 வரையிலான காலப்பகுதியில் டேவி ஐரோப்பாக் கண்டத்தில் ஒரு நீண்ட பயணத்தில் ஈடுபட்டிருந்தார். பரடேயும், டேவியின் அறிவியல் உதவியாளராக அப்பயணத்தில் பங்கு கொண்டிருந்தார். டேவியின் மனைவியான ஜேன் அப்ரீஸ் (Jane Apreece), பரடேயை சமமாகக் கணிக்க மறுத்து, அவரை ஒரு வேலைக்காரருக்கு ஈடாகவே மதித்து வந்தார். இதனால் பெருந் துன்பமடைந்த பரடே அறிவியல் துறையிலிருந்து முற்றாகவே விலகிக்கொள்ள எண்ணினார். எனினும் மிக விரைவிலேயே பரடே, டேவியிலும் புகழ் பெற்றவர் ஆனார்.

ஐக்கிய இராச்சியத்தின் நாணயத்தாள் ஒன்றில் மைக்கேல் பரடேயின் உருவம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்கேல்_பரடே&oldid=2224434" இருந்து மீள்விக்கப்பட்டது