முதலாவது வெப்ப இயக்கவியல் விதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெப்ப இயக்கவியலில், முதலாவது வெப்ப இயக்கவியல் விதி என்பது, இதனிலும் முழுமையான இயற்பியல் விதியான ஆற்றல் காப்பு விதியின் ஒரு வெளிப்பாடு ஆகும். இவ்விதி பின்வருமாறு கூறுகின்றது:

விளக்கம்[தொகு]

அடிப்படையில், ஒரு வெப்ப இயக்கவியல் முறைமை ஆற்றலைச் சேமிக்க அல்லது கொண்டிருக்க முடியும் என்றும், இந்த ஆற்றல் காக்கப்படுகிறது (conserved) என்றும் கூறுகிறது முதலாவது வெப்ப இயக்கவியல் விதி. இங்கே வெப்பம், பொதுவாக ஒரு உயர் வெப்பநிலையிலுள்ள மூலத்திலிருந்து முறைமைக்குக் கொடுக்கப்படுகின்ற அல்லது குறைந்த வெப்பநிலையிலுள்ள இன்னொன்றுக்கு இழக்கப்படுகின்ற ஆற்றலாகும். அத்துடன், ஒரு முறைமை தனது சூழலில் பொறிமுறை வேலையைச் செய்யும் போதும் ஆற்றலை இழக்கிறது அல்லது மறுதலையாக, சூழலால் இம் முறைமை மீது வேலை செய்யப்படும்போது அது ஆற்றலைப் பெறுகிறது. முதலாவது விதி, இந்த ஆற்றல் காக்கப்படுவதாகக் கூறுகிறது. இவ் விதியைக் கணித அடிப்படையில் பின்வரும் சமன்பாட்டால் குறிக்கலாம்.

இங்கே என்பது முறைமையிம் உள்ளாற்றலில் ஏற்படும் சிறு மாற்றம். என்பது முறைமைக்குக் கொடுக்கப்பட்ட சிறிய அளவு வெப்பம். என்பது முறைமையினால் செய்யப்பட்ட சிறிய அளவு வேலை.