உள்ளடக்கத்துக்குச் செல்

வெப்ப அடக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெப்ப அடக்கம் (Enthalpy) என்பது ஒரு வெப்ப இயக்கவியல் கட்டகத்திலுள்ள மொத்த ஆற்றலின் அளவாகும். இது ஒரு கட்டகத்தை உருவாக்க வேண்டிய ஆற்றலான உள்ளார்ந்த ஆற்றலினையும், அதன் சூழலைக் கிடத்தவும், அதன் கொளுமை (கொள்ளளவு) மற்றும் அழுத்தத்தை நிறுவவும் வேண்டிய ஆற்றல் அளவையும் உள்ளடக்கியது.

இது ஒரு வெப்ப இயக்கவியல் பொந்திகை ஆகும். இது ஒரு நிலைபந்தமும் வியல்ந்த எண்ணுதியும் ஆகும். அனைத்துலக முறை அலகுகளின்படி வெப்ப அடக்கத்தின் அலகு ஜூல், ஆனால் பிரித்தானிய வெப்ப அலகு மற்றும் கலோரி போன்ற வழமையான வேறு அலகுகளும் வரலாறாக பயன்படுத்தப்படுகின்றன.

வேதியியல், உயிரியல் மற்றும் இயற்பியல் தொகுதிகளின் ஆற்றல் இடமாற்ற அளவீடுகளில் வெப்ப அடக்கம் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் இது ஆற்றல் இடமாற்றத்தின் கணக்கீடுகளை எளிமைப்படுத்துகிறது. ஏனெனில் வெப்ப அடக்கத்தின் மாற்றம், தொகுதியின் விரிவாக்கத்தால் சூழலுக்கு மாற்றப்படும் ஆற்றலையும் கணக்கில் கொள்கிறது.

தொகுதியின் மொத்த வெப்ப அடக்கம், H, நேராக அளவிடமுடியாத ஒன்றாகும். எனவே வெப்ப அடக்கத்தின் மாற்றம், ΔH, பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. வெப்ப அடக்கத்தின் மாற்றம் (ΔH) நேர்மறையானதாக இருப்பின் அது வெப்பங்கொள் வினையாகும், எதிர்மறையாக இருப்பின் அது வெப்ப உமிழ் வினையாகும். வெப்ப அடக்கத்தின் மாற்றமானது (ΔH), ஒரு தொகுதியின் மீது செய்யப்பட்ட எந்திரவியலல்லாத வேலை மற்றும் சேர்க்கப்பட்ட வெப்பம் ஆகியவற்றின் கூட்டுத்தொகையாகும்.

நிலையான அழுத்தத்தில் செய்யப்படும் பகுதிநிலைச் செயலாக்கத்தில், வெப்ப அடக்க மாற்றமானது (ΔH) தொகுதியின் உள்ளடக்க ஆற்றலின் மாற்றம் மற்றும் சூழல்மீது அத்தொகுதி செய்த வேலை ஆகியவற்றின் கூட்டுத்தொகையாகும்.[1] அதாவது அதுபோன்ற நிலைகளில் வெப்ப அடக்க மாற்றம் (ΔH) ஒரு வேதிவினையில் வெப்ப உறிஞ்சல் (அல்லது வெப்ப உமிழ்ச்சி) ஆகும். வேதிப்பொருட்களின் வெப்ப அடக்கம் செந்தர நிலையை எடுத்துக் கொள்கின்றன; அதாவது 1 வளிமண்டல அழுத்தத்தில் மிகச்சரியாக 25 °C ஆகும்.

மொத்த வெப்பம்[தொகு]

மொத்த வெப்பம் (Total heat) என்பது ஒரு கிராம் நிறையுடைய ஒரு திண்ம நிலையிலுள்ள பொருளை முழுவதும் அதன் ஆவிநிலைக்கு மாற்றத் தேவைப்படும் மொத்த வெப்பமாகும். உதாரணத்திற்கு ஒரு கிராம் பனிக்கட்டியினை எடுத்துக் கொள்வோம். இதனை சுழிநிலையிலுள்ள நீராக மாற்ற 80 கலோரி வெப்பம் தேவைப்படுகிறது. மேலும் இதனை 100 டிகிரி வெப்பநிலையிலுள்ள நீராக மாற்ற 100 கலோரி வெப்பம் வேண்டப்படுகிறது. 100 டிகிரி வெப்பநிலையிலுள்ள நீரை நீராவியாக்க 540 கலோரி வெப்பமும் தேவைப்படுகிறது.ஆக மொத்தம் 80 + 100 +540 = 720 கலோரி வெப்பம் தேவை. இது 720*4.2 =3024 சூல் அளவிற்குச் சமமாகும்.

குறிப்புதவிகள்[தொகு]

  1. G.J. Van Wylen and R.E. Sonntag (1985), Fundamentals of Classical Thermodynamics, Section 5.5 (3rd edition), John Wiley & Sons Inc. New York, NY. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-82933-1

உசாத்துணைகள்[தொகு]

  • Haase, R. In Physical Chemistry: An Advanced Treatise; Jost, W., Ed.; Academic: New York, 1971; p 29.
  • Gibbs, J. W. In The Collected Works of J. Willard Gibbs, Vol. I; Yale University Press: New Haven, CT, reprinted 1948; p 88.
  • Laidler, K. The World of Physical Chemistry; Oxford University Press: Oxford, 1995; p 110.
  • C.Kittel, H.Kroemer In Thermal Physics; S.R Furphy and Company, New York, 1980; p246
  • DeHoff, R. Thermodynamics in Materials Science: 2nd ed.; Taylor and Francis Group, New York, 2006.
  • A dictionary of science ELBS

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெப்ப_அடக்கம்&oldid=3417723" இலிருந்து மீள்விக்கப்பட்டது