கலோரிமானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உலகின் முதல் பனிக் கலோரிமானி; 1782-83 இல் அந்தோயினே இலவாசியரும் பியேர் சீமோன் இலாப்பிளாசும் பல வேதிவினைகளால் வெளியிடப்பட்ட வெப்ப ஆற்றலைத் தீர்மானிக்கவும், முன்பு ஜோசப் பிளாக் கண்டறிந்த உள்ளுறை வெப்ப முறையில்[1] வெப்பத்தை அளக்கவும் பயன்படுத்தப்பட்டது.[2] இந்தச் செய்முறைகள் வெப்ப வேதியியல் உருவாக்கத்துக்கு வித்திட்டன.

கலோரிமானி (calorimeter) கனல் அளவி என்பது வேதியியல் வினைகள் அல்லது இயற்பியல் மாற்றங்களின்போது ஏற்படும் வெப்பம் மற்றும் வெப்பக் கொள்ளளவு ஆகியவற்றை அளவிட பயன்படும் கருவியாகும். ஓர் எளிய கனல் அளவி என்பது ஒரு உலைக்கு மேல் தொங்கும் நீர் நிரம்பிய பொன்ம( உலோக) கொள்கலனில் வெப்பநிலை அளவி பொருத்திய அமைப்பாகும். இது வெப்ப இயங்கியல், வேதியியல், உயிர்வேதியியல் பயன்படும் அளக்கும் கருவிகளில் ஒன்றாகும்.

வகைகள்[தொகு]

 1. வேறுபாட்டு அல்கீட்டுக் கலோரிமானி,
 2. சமவெப்பநிலை நுண்கலோரிமானி,
 3. நிறப்பகுப்புக் கலோரிமானி
 4. முடுக்கிய வீதக் கலோரிமானி
 5. வெப்பமாறா கலோரிமானி
 6. வேதிவினைக் கலோரிமானி
 7. சமவெப்பநிலைக் கலோரிமானி
 8. பாம் கலோரிமானி
 9. அழுத்தமாறா கலோரிமானி

மேற்கோள்கள்[தொகு]

 1. Chisholm, Hugh, ed. (1911). "Black, Joseph". Encyclopædia Britannica. 4 (11th ed.). Cambridge University Press.
 2. Buchholz, Andrea C; Schoeller, Dale A. (2004). "Is a Calorie a Calorie?". American Journal of Clinical Nutrition 79 (5): 899S–906S. doi:10.1093/ajcn/79.5.899S. பப்மெட்:15113737. http://www.ajcn.org/cgi/content/full/79/5/899S. பார்த்த நாள்: 2007-03-12. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கலோரிமானி&oldid=3744077" இருந்து மீள்விக்கப்பட்டது