முலைக்காம்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முலைக்காம்பு
மனிதப் பெண்ணின் முலை, முலைக்காம்பு, முலைக்காம்புத் தோல்.
விளக்கங்கள்
உறுப்பின் பகுதிமார்பகம்
அடையாளங்காட்டிகள்
இலத்தீன்papilla mammaria
MeSHD009558
TA98A16.0.02.004
TA27105
FMA67771
உடற்கூற்றியல்

முலைக்காம்பு (Nipple) பெண்ணினப் பாலூட்டிகளின் முலைகள் அல்லது பால்மடிகளில் முலைப்பாலை தன் சேய்களுக்கு வழங்க அமைந்துள்ள கட்டமைப்பு ஆகும். மனிதரல்லாத இனங்களில் இது பெரும்பாலும் மடிக்காம்பு (teat) எனப்படுகின்றது. மருத்துவத்தில் இது பாப்பில்லா எனப்படுகின்றது.[1] ஆங்கிலச் சொல்லான நிப்பிள் குழந்தைகளுக்கு புட்டிப்பால் கொடுக்கப்படும்போது பொருத்தப்படும் இரப்பர் உறிஞ்சிகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றது. மனிதர்களின் ஆண்,பெண் இருபாலருக்கும் முலைக்காம்புகள் உள்ளன. பல பண்பாடுகளில் பெண் முலைக்காம்புகள் பாலின வேட்கைத் தூண்டுதல்களாக பார்க்கப்படுகின்றன.[2] எனவே பொதுவிடங்களில் முலைக்காம்புகளை வெளியே தெரியுமாறு உடையணிதல் தடை செய்யப்பட்டுள்ளது;[3][4] சிலவற்றில் அநாகரிகமாக கருதப்படுகின்றது.

மேற்சான்றுகள்[தொகு]

பொது நூல் பட்டியல்[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முலைக்காம்பு&oldid=3794329" இருந்து மீள்விக்கப்பட்டது