கருவுறலும் ஈனுதலும்
Appearance
உயிரியலிலும் மாந்த மருத்துவத்திலும் கருவுறலும் ஈனலும் (gravidity and parity) என்ற இந்த இரண்டு சொற்களும் பெண்ணொருவருக்கு எத்தனை முறை கருவுற்றார் (gravidity) என்பதையும் எத்தனை முறை நிலைத்த கரு ஆயுட்காலம் எட்டிய கருத்தரித்தல்களையும் (parity) குறிக்கின்றன.[1] இந்தச் சொற்கள் இணைந்தே வழங்கப்படுகின்றன; சிலநேரங்களில் பெண்ணின் மகப்பேறு வரலாறு குறித்த கூடுதல் தகவல்களைத் தரக்கூடிய சொற்களும் சேர்க்கப்படுகின்றன.[2] இந்தச் சொற்களைப் பயன்படுத்தும்போது:
- கருவுறல் (Gravida) பெண் கருவுற்ற எண்ணிக்கையைக் குறிக்கும்; இதில் எத்தனை முழுமையடைந்தன என்பதை பொருட்படுத்தாது. தற்போதையக் கருவுறலும் கணக்கில் கொள்ளப்படும்.
- ஈனல் (Parity), அல்லது "பாரா" 20-வாரங்களுக்கு மேலானப் (ஐக்கிய இராச்சியத்தில் >24) பிறப்புக்களின் எண்ணிக்கையைக் குறிக்கும் (இதில் நிலைத்த மற்றும் நிலையற்ற சாப்பிள்ளையும் அடங்கும்) இரட்டை, மூன்று போன்று பல்லெண்ணிக்கை கருத்தருத்தல்கள் ஒன்று என்றே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
- கருக்கலைப்பு (Abortus) எக்காரணம் கொண்டும் கருக்கலைந்த எண்ணிக்கையைக் குறிக்கும்; இதில் தூண்டப்பட்ட கருக்கலைப்புகளும் கருச்சிதைவுகளும் சேர்க்கப்படுகின்றன. சில நேரங்களில் எந்தக் கருவும் இழக்கப்படவில்லை எனில் இச்சொல் பயன்படுத்தப்படாது. சாப்பிள்ளைகள் இந்தக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ Borton, Chloe (November 12, 2009). "Gravidity and Parity Definitions (and their Implications in Risk Assessment)". Patient.info. பார்க்கப்பட்ட நாள் June 26, 2013.
- ↑ Creinin, MD; Simhan, HN (Mar 2009). "Can we communicate gravidity and parity better?". Obstetrics and gynecology 113 (3): 709–11. doi:10.1097/AOG.0b013e3181988f8f. பப்மெட்:19300338. https://archive.org/details/sim_obstetrics-and-gynecology_2009-03_113_3/page/709.