கியூலெத் வினை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கியூலெத் வினை (Quelet reaction) அல்லது பிளாங்கு–கியூலெத் வினை (Blanc–Quelet reaction) என்ற கரிம வேதிப் பிணைப்பு வினையின் போது பீனோலிக் ஈத்தர் அலிப்பாட்டிக் ஆல்டிகைடுடன் வினைபுரிந்து α-குளோரோஆல்கைல் வழிப்பொருட்களை உருவாக்குகிறது.[1] இவ்வினை அதனைக் கண்டுபிடித்த படைப்பாளி ஆர். கியூலெத் என்பவரின் பெயரால் அழைக்கப்படுகிறது. முதன்முதலில் 1932 ஆம் ஆண்டில் இவர் இதைக் கண்டறிந்தார்.[2] மேலும் இவ்வினை பிளாங்கு குளோரோ மெத்திலேற்றம் செயல்முறை வினையை ஒத்திருக்கிறது.

இவ்வினையில் முதன்மையாக பாரா-பதிலீடு பொருட்கள் கிடைக்கின்றன. பாரா தளம் தடுக்கப்பட்டால் ஆர்த்தோ-பதிலீடு பொருட்களையும் தயாரிக்கலாம். வலுவான அமில வினையூக்கியின் உதவியினால் இவ்வினை நிகழ்கிறது. ஈத்தர் செயல்படாமல் இருக்கும்போது ஐதரோ குளோரிக்கமிலம் கலந்த துத்தநாக(II) குளோரைடு வினையூக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது.[3]

Quelet reaction

மேற்கோள்கள்[தொகு]

  1. Wang, Zerong (2009). "517: Quelet Reaction". Comprehensive organic name reactions and reagents. Hoboken, N.J.: John Wiley. பக். 2290–2292. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780470638859. 
  2. R. Quelet (1932). Compt. Rend. 195: 155. 
  3. Denmark], [editor-in-chief, Scott E. (2006). "1:3 Chloromethylation of Aromatic Compounds". Organic reactions. Hoboken, N.J.: Wiley. பக். 63–90. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780471264187. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கியூலெத்_வினை&oldid=2746681" இருந்து மீள்விக்கப்பட்டது