விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கிப்பீடியா அறிமுகப் பட்டறைகள் 2024

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திட்டத்திற்கான முன்மொழிவு[தொகு]

தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு வணக்கம். தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பது குறித்து பொதுமக்களிடம் கொண்டுசெல்ல வேண்டியதன் அவசியத்தை தொடர்பங்களிப்பாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனைக் கருத்திற்கொண்டு, 6 மாதத்திற்கான இத்திட்டம் முன்மொழிவு செய்யப்படுகிறது. பயனர்களின் கருத்துக்கள் / பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன.

முக்கியக் குறிப்பு: கல்லூரியைப் பரிந்துரைப்பது, கல்லூரியுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு நிகழ்வை நடத்துவது ஆகியவற்றை எப்பயனரும் செய்யலாம். முறையான உரையாடல்கள் நடத்தப்பட்டு, இறுதி முடிவுகள் எடுக்கப்படும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:06, 19 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

@கி.மூர்த்தி, Balu1967, சத்திரத்தான், TNSE Mahalingam VNR, and Sridhar G: வணக்கம். உங்களுக்கு ஏற்கனவே அறிமுகமான ஏதேனும் கல்வி நிலையத்துடன் ஒருங்கிணைந்து, நிகழ்வினை நடத்துவதற்கு உங்களால் இயலுமெனில் இங்கு குறிப்பிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். அதனடிப்படையில் மேற்கொண்டு நாம் திட்டமிட வசதியாக இருக்கும்; நன்றி. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:53, 22 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

கல்லூரிகளுக்கான பயிற்சிகள்[தொகு]

தமிழ் நாடு முழுக்க உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்கள் தமிழ் விக்கிப்பீடியாவுடன் இணைந்து பயிற்சி வகுப்புகள் நடத்த ஆர்வம் கொண்டுள்ளனர். இன்னும் சொல்லப் போனால் அவர்களில் நாக் மதிபீட்டிற்கு அது தேவை என்பதால் நம்மை அவர்கள் பயன்பாட்டிற்குப் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்புள்ளதாகவும் கருதுகிறேன். எனவே நமது தன்னார்வப் பணிகளை ஆக்கப்பூர்வமாகச் செலவிட இத்தகைய கூட்டுமுயற்சிகளில் கவனமாக இருக்க வேண்டுகிறேன். இயன்ற வரை கல்லூரி சார்பாகச் செலவுகளை ஏற்றுக் கொள்ளவோ அல்லது கனிசமான பங்களிப்புகளை உறுதி செய்வதோ போன்று பொறுப்புகளைக் கல்லூரி எடுத்துக் கொள்ள அறிவுறுத்த வேண்டும். கல்வி நிலையங்களைத் தவிர்த்து சமூக அமைப்புகள், இலக்கியக் குழுக்கள் போன்று பரந்துபட்ட பயனர்களுக்கும் பயிற்சிகளைத் திட்டமிடலாம். கண்காட்சிகள் புத்தகத் திருவிழா, மாநாடுகள் போன்ற இடங்களில் பரப்புரைக்கான வாய்ப்புகளையும் அடையாளம் காணலாம். தன்னார்வத்தில் பயிற்சியளிக்கும் பயனர்களாக அல்லாமல் திட்டமிட்டுப் பட்டறைகளைக் கல்லூரிகளில் நடத்தும் போது விளைவுகளை அளவிடுவதற்கான முறைகளையும் இணைத்துக் கொள்ளலாம். விக்கிச் சூழலில் https://outreachdashboard.wmflabs.org/ அளவிட்டுக் காட்டும். -நீச்சல்காரன் (பேச்சு) 11:19, 21 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

@Neechalkaran: உங்களின் கருத்துக்களுக்கு நன்றி. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:51, 21 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]