விக்கிப்பீடியா பேச்சு:ஆலமரத்தடி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

reference desk[தொகு]

  • பொதுவாக todo வார்ப்புருக்களை பேச்சு பக்கத்திலே இட வேண்டும்.
  • கருத்துக்களை இங்கு பதியுங்கள்
  • Parameters also available like backgroundcolor=yellow, width=400px, align= left etc

நான் குறிப்பாயம் என்ற சொல்லை பயன்படுத்தலாம் என எண்ணுகிறேன். உதவிக்காக காத்திருக்கிறேன்: இசையினி

ரவி! Reference desk என்பதன் தமிழ் பதம் குறிப்புதவி பகுதி என்று அமைவது சரியாக இருக்குமென்று நினைக்கின்றேன்.(காரணம்) நூல் நிலையங்களில் கவனித்தது நினைவுக்கு வருகிறது. ச.இராக்கேசு.

இந்த விக்கிமீடியாவை தமிழில் செய்தவருக்கு என் வாழ்த்துக்கள்.. நானும் ஒரு சப்ஜெக்டில் ஒரு பைல் செய்யலாமா? தயவு செய்து அதனை உப்லோட் பண்ணவும்... பிரியோசனமாக இருக்கும் என்பதனை அறியதருகிறேன்.. நன்றி சி.தினேஷ்

சொற்கள் சீர்தரப்படுத்தல் அறிவிப்பு[தொகு]

நற்கீரன், photograph என்பதற்கு பெரும்பாலும், புகைப்படம், நிழற்படம் என்று வழக்கத்தில் உள்ளது உண்மை. இது புகைவண்டி என்னும் சொல்வழக்கம் போல் அவ்வளவாக பொருந்தாத சொல்/சொற்கள். photograph என்பதற்குச் சரியான சொல் ஒளிப்படம். 1970-80களில் டெல்லியில் இருந்து யாரோ ஒருவர் ஒளிப்படக் கருவி (காமிரா) பற்றி ஒரு நூலே எழுதியுள்ளார். இந்நூலைப்பற்றிய செய்திகள் வேறு எதுவும் என்னிடம் இல்லை. இந்நூலைப் பற்றிய நல்ல திறனாய்வு ஒன்றை கிட்டதட்ட 22 ஆண்டுகளுக்கு முன் படித்ததைக் கொண்டே இதனை எழுதுகிறேன். ஒளிப்படம் என்னும் சொல் calque (வேறு ஒரு மொழிச்சொல்லின் நேரடி மொழிபெயர்ப்பு) போல் தெரிந்தாலும், பொருத்தமான சொல். ஒரு கருத்தைச் சொல்லாக வடித்துச் சொல்லும் பொழுது பலமொழிகளில் ஒற்றுமை இருப்பது இயற்கையே. எல்லாம் calque என்று வகைப்படுத்துவது முறையாகாது. இது ஒருவகையான linguistic colonialism. சில சொற்கள் calque தான். தொலைபேசி என்பதை சிலர் calque என்பர், உண்மையில் அது தவறு. பேசி என்பது phone என்பதற்கு நேரடியான மொழி பெயர்ப்பு இல்லை. phone என்றால் ஒலி. இதேபோல தொலைக்காட்சியும் calque அல்ல. ஒரு சொல் calque ஆக இருந்தாலும் ஒருசிறிதும் தவறு இல்லை. தமிழில் நமக்கு பொருள் விளங்கவேண்டும். அறிவூற பொருள் விளங்க வேண்டும். அம்மட்டே.--செல்வா 13:15, 8 ஆகஸ்ட் 2007 (UTC)

ஒளிப்படம் நன்றாகவே இருக்கின்றது. அதையே பயன்படுத்தலாம். --Natkeeran 01:19, 9 ஆகஸ்ட் 2007 (UTC)

ஹாசன்[தொகு]

நண்பர்களே, என்னால் இயன்ற வரை ஹாசனை பற்றிய கட்டுரையை எழுதி முடித்துவிட்டேன். இதை நீங்கள் சரி பார்த்து, ஏதேனும் கருத்துக்கள்/செய்திகள் விடுபட்டிருந்தால் அதை இக்கட்டுரையுடன் சேர்க்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.நன்ற! --Rnarendr 15:54, 3 ஜனவரி 2008 (UTC)

== இந்திய காலநிலை பற்றிய சில கேள்வி ==http://ta.wikipedia.org/w/index.php?title=Wikipedia_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF&action=edit&section=4 தொகுப்பு: Wikipedia பேச்சு:ஆலமரத்தடி (பகுதி) - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

நான் இப்பொழுது இந்திய காலநிலை பற்றிய கட்டுரையை எழுதுகிறேன். அதில் சில ஆங்கில வார்த்தைகளான (Moderate Climate, Equitorial climate, Temperate climate, Western disturbances, monsoon, surface wind, upper air current)தமிழாக்கம் வேண்டும். மேலும் இக்கட்டுரையை பற்றி விவாதம் எவ்வாறு நடத்துவது. --Rnarendr 18:58, 3 ஜனவரி 2008 (UTC)--செல்வா 19:59, 3 ஜனவரி 2008 (UTC)

  • Equitorial climate = நிலநடுக்கோட்டு வானிலை (நிலநடுவரை வானிலை)
  • Moderate climate = நடுத்தர தட்பவெப்ப நிலை.
  • Western disturbance = மேலை மழை, பனிப் புயல். சுருக்கமாக மேற்குப் புயல் என்ரும் சொல்லலாம்.
  • temperate climate = நடுத்தர வானிலை
  • surface wind = மேற்பரப்புக் காற்று ??
  • upper air current = உயர்மட்டக் காற்றோட்டம்.

பொதுவாக உங்களுக்குத் தெரிந்த தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்தி எழுதுங்கள். பிறைக்குறிகளுக்குள் ஆங்கிலச் சொல்லை இணைத்து விடுங்கள். யாரேனும் வந்து திருத்துவார்கள். பேச்சு:இந்திய காலநிலை என்னும் பக்கத்திலேயே உங்கள் கேள்விகளையும், நீங்கள் செய்யாது விட்டவைகளையும் குறிப்பிடலாம். வேறு யாரேனும் வந்தோ, அல்லது நீங்களே பின்னர் வந்தோ திருத்திக்கொள்ளலாம். --செல்வா 19:59, 3 ஜனவரி 2008 (UTC)

மலையூட்டு மழை Orographic Rainfall[தொகு]

Orographic (Orographic Rainfall) என்பதன் தமிழ் வார்த்தை என்ன?

Oros என்னும் கிரேக்க மொழிச் சொல்லுக்கு மலை (mountain) என்று பொருள். Orographic என்பது நிலப்பரப்பில் ஏற்ற இறக்கங்களின் சராசரி என்னும் பொருளில் சில இடங்களில் ஆள்வர் (கீழே பார்க்கவும்). இங்கு Orographic Rainfall என்று வரும்பொழுது. மலைவிளைவு மழை (மழையளவு) ஆகும். இதனை மலைவிளைவால் நிகழும் மழையளவு (அல்லது மலையூட்டு மழை) எனலாம். மலை விளைவால் காற்றோட்டம், ஈரப்பதம் முதலியன எவ்வாறு மாறுபடுகின்றது என்பதை பிரிதொரு கட்டுரையில் குறிக்கலாம். எனவே மலைவிளைவு என்பதை தனிக்கட்டுரையாக்கலாம். மலைகளின் தோற்றம், வளர்ச்சி பற்றியும் ஒரு துறை (முன்னர் orology என்பார்கள், இப்பொழுது orolgraphy என்கின்றனர் போலும்) உண்டு, அதனை மலையியல் எனலாம். --செல்வா 03:15, 6 ஜனவரி 2008 (UTC)

மலையமைப்பைச் சார்ந்து பொழிகின்ற மழை என்று படித்த நியாபகம். --V4vijayakumar 12:43, 8 மே 2008 (UTC)[பதிலளி]

பழைய தொகுப்புகள்[தொகு]

Wikipedia:ஆலமரத்தடி என்னும் பக்கத்தை விக்கிப்பீடியா:ஆலமரத்தடி என்று மாற்றியபின் தொகுப்புகள் தொடர்பு அறுந்து போனது என்று நினைக்கிறேன். தொகுப்புகளை எப்படி மாற்றுவது? அல்லது இப்படி மாற்றுவதே தவறோ?--செல்வா 23:10, 27 மே 2008 (UTC)[பதிலளி]

செல்வா, பழைய தொகுப்புகள் எல்லாம் Wikipedia என்ற பெயர் வெளியிலேயே இருப்பதால் தொடுப்புகள் முறிந்துள்ளன. அந்தத் தொகுப்புப் பக்கங்களையும் ஒவ்வொன்றாக நகர்த்த வேண்டும். ஆனால், இப்போதைக்கு எல்லா பக்கங்களும் wikipedia என்ற ஆங்கிலப் பெயரில் இருக்கட்டுமே. வழுவைத் திருத்தம்போது எல்லாவற்றையும் தானியக்கமாக விக்கிப்பீடியா பெயர்வெளிக்கு நகர்த்துவோம். இப்படி நாமாக நகர்த்துவதால், கட்டுரைப் பெயர்வெளிகளில் இந்தப் பக்கங்களும் கணக்கில் வரும்--ரவி 23:55, 27 மே 2008 (UTC)[பதிலளி]
சரி, ரவி.--செல்வா 23:59, 27 மே 2008 (UTC)[பதிலளி]

"Catchment Area,Glacier lake, Glacier cave, Firn" என்பதன் தமிழ் வார்த்தை என்ன.--Rnarendr 14:53, 17 நவம்பர் 2008 (UTC)

ஆலமரத்தடியில் பழைய தொகுப்புகளைத் தொகுப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள். தயவு செய்து குறைந்தது கடைசி ஒரு வாரத்து இடுகைகளை பழைய தொகுப்புகளில் சேர்க்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். அ-து, கடைசி ஒரு வார இடுகைகளை விட்டு விட்டு ஏனையவற்றை பழைய தொகுப்பாக்கலாம். நன்றி.--Kanags \பேச்சு 11:53, 11 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]

சேர்ந்தெடுப்பு வேண்டுகோள்[தொகு]

என்ற துணைத்தலைப்பில் 12 நபருள்ள பட்டியலுக்கு நானும் ஒப்புதலை ஒப்புதல் தந்தவர்கள் பகுதியில் அளித்திருந்தேன். (01:26UTC, 19 பெப்ரவரி 2010) அன்று நானும் ஒப்புதல் அளித்தேன். இப்போது ஒப்புதலளித்தவர் பட்டியலில் என்பெயரில்லை ஏன்? அதற்கான வரலாற்றுச் சான்றுஅப்பக்கத்திற்கான வரலாற்றுப்பதிவேடுத* உழவன் 06:44, 22 பெப்ரவரி 2010 (UTC)

தகவலுழவன், உங்கள் கருத்துக்கள் எப்படியோ தவறுதலாக அழிக்கப்பட்டு விட்டன. அவற்றை மீண்டும் அந்தந்த இடத்தில் சேர்த்துள்ளேன். நன்றி.--Kanags \உரையாடு 07:13, 22 பெப்ரவரி 2010 (UTC)
  • மிக்க நன்றி. இதனைத் தாங்கள் கற்றுக் கொடுத்த, வரலாறு ஒப்பீடுகளால் உணர முடிந்தது.த* உழவன் 06:50, 24 பெப்ரவரி 2010 (UTC)

விக்கிப்பீடியா அறிமுகப்பட்டறை தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக நடத்தும் திட்டம்[தொகு]

விக்கிப்பீடியா அறிமுகப்பட்டறை தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக நடத்தும் திட்டம் உள்ளதா? --ஸ்ரீதர் /பேசுக 23:29, 13 சனவரி 2012 (UTC)[பதிலளி]

அவ்வாறான திட்டம் எதுவும் இல்லை ஸ்ரீதர். பயனர்கள் நேரமும் இடமும் கூடி அமைந்தால் ஆங்காங்கே நடத்தி வருகிறோம். திட்டமிட்டு நடத்துமளவுக்கு நம்மிடம் ஆள்பலம் கிடையாது.--சோடாபாட்டில்உரையாடுக 04:24, 14 சனவரி 2012 (UTC)[பதிலளி]
வணக்கம் . நான் கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் பேராசிரியர் முனைவர் கார்த்திக். எங்கள் கல்லூரியில் விக்கிப்பீடியா தொடர்பான பயிர்சிப் பட்டறைகள் நடத்த நான் உதவுகிறேன். கல்லூரியில் கணித்தமிழ்ப்பேரவை ஒருங்கிணைப்பாளராக நான் இருப்பது உங்களுக்கு ஆள்பலம் அளிக்க உதவலாம். கார்தமிழ் (பேச்சு) 09:12, 2 மார்ச் 2022 (UTC)
மகிழ்ச்சி. திட்டமிடுங்கள். நாள், நேரம் முடிவானால் அதற்கேற்றபடி விக்கிப்பீடியர்கள் வருகை தந்து உதவுவார்கள். அன்புடன்--கி.மூர்த்தி (பேச்சு) 10:41, 2 மார்ச் 2022 (UTC)

பெயர் மாற்றம்[தொகு]

ஆலமரத்தடி என்பது சிற்றூர்களில் நடைபெறும் வம்புமேடை போல பொருள்தரும் மயக்கம் உள்ளது. இங்கு நடைபெறும் உரையாடல்களின் தன்மைக்கேற்ப இதனை அரட்டை அரங்கம் அல்லது பட்டிமன்றம் என்று பெயர்மாற்றினால் என்ன ?--மணியன் 03:00, 8 பெப்ரவரி 2012 (UTC)

விளங்கவில்லை. இது பகிடியான பரிந்துரையா ?? --Natkeeran 03:33, 8 பெப்ரவரி 2012 (UTC)
ஆலமரத்தடியில் ஊர்மக்கள் கூடிப்பேசித் தங்கள் ஊரைப்பற்றிய முடிவுகளை எடுப்பார்கள். அந்தப் பொருளிலேயே அதைத் தேர்ந்தெடுத்தோம். ஏன் அரட்டை அரங்கம் என மாற்ற வேண்டும் எனப் புரியவில்லை, மணியன். விளக்குங்கள். -- சுந்தர் \பேச்சு 03:37, 8 பெப்ரவரி 2012 (UTC)
நக்கீரன்/சுந்தர், மன்னிக்கவும். சட்டென்று எழுந்த ஒரு பகிடியான பரிந்துரைதான். யாரையேனும் புண்படுத்தியிருந்தால் இதனை நீக்கலாம். --மணியன் 08:02, 8 பெப்ரவரி 2012 (UTC)
என்னைப் பொருத்தவரை புண்படுத்தவில்லை மணியன். இருந்தாலும் நாம் முக்கிய விசயங்களில் நேரடியாகக் கருத்தை மட்டும் முன்வைப்பது நல்லது எனக் கருதுகிறேன். பகிடியைச் சில வேளைகளில் தவறாகப் புரிந்து கொள்ள வாய்ப்புண்டு. மற்றபடி சுவை கூட்டுவதற்காகப் பகிடி செய்தால் கட்டாயம் வரவேற்கிறேன். நமக்கும் கொஞ்சம் மாறுதலாக இருக்கும். :) -- சுந்தர் \பேச்சு 15:45, 8 பெப்ரவரி 2012 (UTC)

தமிழ்க்கணினிப் பயிலரங்கில் விக்கிப்பீடியா அமர்வு[தொகு]

இது குறித்த விபரங்கள் இங்கு உள்ளன.--Kanags \உரையாடுக 04:24, 20 ஏப்ரல் 2012 (UTC)

தவறுக்கு வருந்துகின்றேன்[தொகு]

புதிய கைத்தொலைபேசியில் தமிழ் விக்கியைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது, தவறுதலாக ஆலமரத்தடியில் செல்வா செய்த மாற்றத்தை முன்னிலைப்படுத்தி விட்டேன். மன்னியுங்கள். தற்போது மீளமை செய்துள்ளேன். அனைத்தும் சரியாக இருப்பதாக எண்ணுகின்றேன். தயவு செய்து ஒரு தடவை சரி பாருங்கள். நன்றி.--கலை (பேச்சு) 17:46, 27 சூலை 2012 (UTC)[பதிலளி]

கலை, இப்பொழுது சரியாகவே உள்ளன. கவலற்க. --செல்வா (பேச்சு) 18:32, 27 சூலை 2012 (UTC)[பதிலளி]

தேடு - தவறான இணைப்பு[தொகு]

அறிமுகத்தில் உள்ள தேடு இணைப்பு தவறானது. --Natkeeran (பேச்சு) 13:22, 24 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

சரிசெய்துள்ளேன். --மதனாகரன் (பேச்சு) 05:05, 25 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

நிரலில் எதோ வழு உள்ளது, "." நீக்கி விட்டுப் பார்க்கவும்[தொகு]

--Natkeeran (பேச்சு) 14:28, 28 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

பெயரிடாமல் கருத்திட்டது குறித்து[தொகு]

தமிழ் இணைய மாநாடு செய்தி கொடுத்தவர் யார் என்ற தகவல் இல்லை. உத்தமம் அல்லது அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றால் அதிகாரமளிக்கப்பட்டவர் அளித்த செய்தியா? என்பதும் தெரியவில்லை. இந்தச் செய்தியை அளித்தவர் விக்கிப்பீடியாவின் பயனராக இருந்தால், பயனர் பெயர் அளித்திருக்கலாம். கையொப்பத்தைப் பதிவு செய்திருக்கலாம். இந்நிலையில் செய்தியளித்தவர் யாரென்றே தெரியாத நிலையில் அழைப்புக்கு நன்றி. முனைவர் மு.இளங்கோவன் அவர்களே! என்று தகவலுழவன் கருத்து தெரிவித்திருக்கிறார். இந்தச் செய்தியை அளித்தவர் முனைவர் மு.இளங்கோவன் என்பது சரி எனில் அவரது பெயரையாவது சேர்த்திருக்கலாம்.மு. இளங்கோவன் செய்தியை உறுதிப்படுத்தப் பயனராகக் கையொப்பத்தைப் பதிவு செய்யலாமே...?--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 09:32, 12 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

உட்பிரிவுகளுடையே இணைப்பு[தொகு]

+ விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (அறிவிப்புகள்)‎ என்ற பகுதியைப் போல, உட்பிரிவுகளை(ஆலமரத்தடியின் கிளைகளை) நேரடியாக விக்கிப்பீடியா ஆலமரத்தடியின் பக்கத்தில் இருந்தே வருவதற்கான வழிமுறைகளை அமைக்க ஆலோசனைத் தருக!--≈ உழவன் ( கூறுக ) 01:51, 13 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

ஆலமரத்தடி காப்பகம்[தொகு]

ஆலமரத்தடி 97.98 ஆம் காப்பு பெட்டகங்களில் இணைப்பு வழு உள்ளது. இரண்டும் ஒன்றாஇயே காட்டுகின்றன.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 07:40, 20 சூன் 2014 (UTC)[பதிலளி]

சீர்செய்து விட்டேன்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 07:44, 20 சூன் 2014 (UTC)[பதிலளி]

Narayanan V T ஆங்கிலத்தில் Dead Sea என்ற வார்த்தைக்கு தமிழில் "சாக்கடல்" என்று கட்டுரையில் காணப்படுகிறது. இது சரியா என்பது என் சந்தேகம். Dead என்பதற்கு சரியான பெயரெச்சம் "சா" ? இல்லை என்பது எனது கருத்து.

Narayanan V T , உங்கள் கருத்தை பேச்சு:சாக்கடல் பக்கத்தில் இட்டுள்ளேன். அங்கு, உரையாடலைத் தொடர வேண்டுகிறேன்.--இரவி (பேச்சு) 10:13, 23 மார்ச் 2015 (UTC)

தவறான பகுப்பு[தொகு]

ஆலமரத்தடி பக்கம் ஈரோடு மாவட்டத்திலுள்ள கிராமங்கள் பகுப்பில் யாராலோ தவறாகச் சேர்க்கப்பட்டுள்ளது. நீக்க வேண்டும். பகுப்பு மறைக்கப்பட்டிருப்பதால் என்னால் நீக்க முடியவில்லை. தெரிந்தவர்கள் நீக்கவும்.--நந்தகுமார் (பேச்சு) 18:14, 3 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று--AntanO 18:45, 3 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
நன்றி!--நந்தகுமார் (பேச்சு) 04:55, 4 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

ஆலமரத்தடி கிளி என்றால் என்ன?[தொகு]

இதன் தோற்றம், முக்கியத்துவம், எப்படி பயன்படுத்த வேண்டும்.?--உழவன் (உரை) 01:13, 14 மே 2016 (UTC)[பதிலளி]

தற்போதுள்ள ஆலம் பழங்கள் சிறப்பாகப் பொருந்துகிறது. அறிவிப்பு, தொழினுட்பம் போன்ற ஆலமரத்தின் பழங்களை அவ்வப்போது சுவைப்பேன். வணக்கம்.-- உழவன் (உரை) 04:59, 4 சூன் 2016 (UTC)[பதிலளி]

நீதிமன்றத்தில் தமிழ்[தொகு]

நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அதற்காக, சொற்களஞ்சியம் தனியாக தேவைப்படுகிறது. உதவுங்கள்! --A.R.V. Ravi (பேச்சு) 10:57, 28 நவம்பர் 2020 (UTC)[பதிலளி]

வணக்கம் ஐயா. எத்தகைய உதவி செய்ய வேண்டும்? கார்தமிழ் (பேச்சு) 15:12, 22 மார்ச் 2022 (UTC)

உதவி விளக்கம் தேவை.தனியார் நிறுவனக் கட்டுரைகள் ஏன்?[தொகு]

வணக்கம். ஆங்கில விக்கியில் KFC swiggy போன்ற தனியார் நிறுவனக் கட்டுரைகள் காணக்கிடைக்கின்றன. தமிழ் விக்கிப்பீடியாவில் தனியார் நிறுவனக் கட்டுரை எழுத வேண்டாம் என்று கூறுவது போல உணர்கிறேன். விளக்கம் தாருங்கள் யாரேனும். கார்தமிழ் (பேச்சு) 15:16, 22 மார்ச் 2022 (UTC)

விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று இதைக் கவனியுங்கள். -- சா அருணாசலம் (பேச்சு) 16:55, 22 மார்ச் 2022 (UTC)

விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை இதையும் கவனியுங்கள். --சா அருணாசலம் (பேச்சு) 17:08, 22 மார்ச் 2022 (UTC)

பயனர் வயது[தொகு]

விக்கிப்பீடியாவில் பங்களிக்க பயனரின் குறைந்தபட்ச வயது குறித்து அறிய விரும்புகிறேன். நன்றி. சத்திரத்தான் (பேச்சு) 04:30, 14 சனவரி 2023 (UTC)[பதிலளி]

There are no age restrictions for editing Wikipedia or writing new articles AntanO (பேச்சு) 08:01, 14 சனவரி 2023 (UTC)[பதிலளி]
நன்றி. --சத்திரத்தான் (பேச்சு) 12:38, 14 சனவரி 2023 (UTC)[பதிலளி]

எழுத்துருவை மாற்றுவது எப்படி ?[தொகு]

விக்கிப்பீடியாவின் தமிழ் எழுத்துரு படிப்பதற்கு உகந்ததாக இல்லை. இதை மாற்றுவது எப்படி? 103.3.164.72 03:29, 1 மார்ச் 2023 (UTC)

இரா. காமராசு ஒளிப்படம் இணைப்பு தொடர்பாக[தொகு]

வணக்கம். இரா.காமராசு (https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE._%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81) அவர்களின் ஒளிப்படத்தை இன்று நான் நேரில் எடுத்து பொதுவகத்தில் பதிந்து, பின்னர் அவருடைய பக்கத்தில் இணைக்க முயன்றபோது நடிகர் முரளி நடித்த திரைப்படத்தின் ஒளிப்படம் அதில் வருகிறது. அந்த ஒளிப்படத்திற்கும் இதே கோப்பு எண் இருந்துள்ளதாக நினைக்கிறேன். இரா.காமராசு அவர்களின் ஒளிப்படத்தை (https://commons.wikimedia.org/wiki/File:Kamarasu.jpg) அவருடைய பக்கத்தில் இணைக்க உதவ வேண்டுகிறேன். நன்றி. பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 08:04, 28 ஏப்ரல் 2023 (UTC)

சேலம் புத்தகக் கண்காட்சியில் விக்கிமீடியா குறித்த உரை[தொகு]

இன்று (02.12.2023) மாலை 6 மணியளவில் சேலம் புத்தகக் கண்காட்சியில், "இணையவழித் தமிழ் மேம்பாடு" என்னுந்தலைப்பில் உரையாற்ற உள்ளேன். இவ்வுரையில் விக்கி மீடியாவின் திட்டங்களில் தமிழின் மேம்பாடு குறித்துப்பேசவுள்ளேன், வாய்ப்புள்ளோர் வாருங்கள்.--Thamizhpparithi Maari (பேச்சு) 10:40, 2 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]