மூன்று இராச்சியங்கள் (சீனா)
| பண்டைய | |||||||
| மூன்று இறையாண்மையுள்ள ஆட்சியாளர்களும், ஐந்து பேரரசர்களும் | |||||||
| சியா அரசமரபு 2100–1600 கிமு | |||||||
| சாங் அரசமரபு 1600–1046 கிமு | |||||||
| சவு அரசமரபு 1045–256 பொ. ஊ. மு. | |||||||
| மேற்கு சவு | |||||||
| கிழக்கு சவு | |||||||
| இலையுதிர் காலமும், வசந்த காலமும் | |||||||
| போரிடும் நாடுகள் காலம் | |||||||
| பேரரசு | |||||||
| சின் அரசமரபு 221 கிமு–206 கிமு | |||||||
| ஆன் அரசமரபு 206 பொ. ஊ. மு.–220 பொ. ஊ. | |||||||
| மேற்கு ஆன் | |||||||
| ஜின் அரசமரபு | |||||||
| கிழக்கு ஆன் | |||||||
| மூன்று இராச்சியங்கள் 220–280 | |||||||
| வேயி, சூ & வூ | |||||||
| யின் அரசமரபு 265–420 | |||||||
| மேற்கு யின் | 16 இராச்சியங்கள் 304–439 | ||||||
| கிழக்கு யின் | |||||||
| வடக்கு மற்றும் தெற்கு அரசமரபுகள் 420–589 | |||||||
| சுயி அரசமரபு 581–618 | |||||||
| தாங் அரசமரபு 618–907 | |||||||
| ( இரண்டாம் சவு 690–705 ) | |||||||
| 5 அரசமரபுகளும், 10 அரசுகளும் 907–960 |
லியாவோ 907–1125 | ||||||
| சொங் அரசமரபு 960–1279 |
|||||||
| வடக்கு சொங் | மேற்கு சியா 1038–1227 | ||||||
| தெற்கு சொங் | சின் 1115–1234 |
||||||
| மங்கோலிய யுவான் அரசமரபு 1271–1368 | |||||||
| மிங் அரசமரபு 1368–1644 | |||||||
| சிங் அரசமரபு 1644–1911 | |||||||
| தற்காலம் | |||||||
| முதல் சீனக் குடியரசு 1912–1928 | |||||||
| சீனாவின் தேசியவாத அரசு1925–1948 | |||||||
| சீன மக்கள் குடியரசு 1949–தற்போது வரை |
சீனக் குடியரசு (தாய்வான்) 1912–தற்போது வரை | ||||||
|
தொடர்புடைய கட்டுரைகள்
சட்ட வரலாறு | |||||||
மூன்று இராச்சியங்கள் (The Three Kingdoms) என்பது கிபி 220 இருந்து 280 வரையான சீனாவின் வரலாற்றுக் காலப் பகுதி ஆகும். ஆன் அரசமரபின் வீழ்ச்சியுடன் தொடங்கும் மூன்று இராச்சியங்களின் காலப் பகுதி, இக் காலப் பகுதியின் கடைசி வு இராச்சியம் jin அரசமரால் கைப்பற்றப்படும் வரையான காலப் பகுதி ஆகும். சில வரலாற்று ஆசிரியர்கள் இந்தக் காலப் பகுதியின் தொடக்கத்தை 180 நிகழ்ந்த மஞ்சள் தலைப்பாய் புரட்சியில் இருந்து வரையறை செய்வர்.[1][2][3]
இந்தக் காலப் பகுதியில் இன்றைய சீனாவின் பெரும் பகுதி மூன்று இராச்சியங்களாக இருந்தது. வேய் (Wei, 魏),, சூ (Shu, 蜀), வூ (Wu 吳) என்பவை அவை ஆகும். சீனாவில் மிகவும் கடுமையான போர்கள் நடந்த காலங்களில் இதுவும் ஒன்றாகும்.
இந்தச் சிறு காலப் பகுதி சீன, யப்பானிய, கொரிய, வியட்நாமிய இலக்கியத்தில் ஒரு முக்கிய இடம் வகிக்கிறது. இவற்றுள் மிகவும் அறியப்பட்ட நூல் மூன்று இராச்சியங்களின் கதை (Romance of the Three Kingdoms) ஆகும்.
இந்தக் காலப் பகுதியில் முக்கிய தொழில்நுட்ப முன்னேற்றங்கள் நடந்தன. சூகே லியாங் மர எருமையை உருவாக்கினார். தொடர் சதுர-வில் என்ற ஆயுதத்தை செப்பமாக்கினார். மா-யுன் பல கண்டுபிடிப்புகளைச் செய்தார். இவர் நீர் ஆற்றலில் இயங்கும் பொம்மைகளை உருவாக்கினார். நீர்ப்பாய்ச்சலுக்கு சதுர மேடைச் சங்கிலி பம்பியைக் கண்டுபிடித்தார். இவர் மிக முன்னேற்றகரமான தென்சுட்டுத் தேர் என்பதையும் உருவாக்கினார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Dreyer, Edward L. 2009. “Military Aspects of the War of the Eight Princes, 300–307.” In Military Culture in Imperial China, edited by Nicola Di Cosmo. Cambridge: Harvard University Press. 112–142. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-674-03109-8.
- ↑ Hans Bielenstein. Chinese historical demography A.D. 2-1982. Östasiatiska museet. p 17
- ↑ Breverton, Terry (2013). Breverton's Encyclopedia of Inventions (Unabridged ed.). Quercus. ISBN 978-1-623-65234-0.
