சியோங்னு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
க்ஷியோங்னு
கி. மு. 3ஆம் நூற்றாண்டு–கி. பி. 1ஆம் நூற்றாண்டு
கி. மு. 133 - கி. பி. 89ஆம் கால ஆன்-சியோங்னு போருக்கு முந்தைய சியோங்னுவின் நிலப்பகுதிகள், கி. மு. 2ஆம் நூற்றாண்டு: மங்கோலியா, கிழக்குக் கசக்கஸ்தான், கிழக்குக் கிர்கிசுத்தான், தெற்குச் சைபீரியா, மற்றும் மேற்கு மஞ்சூரியா, சிஞ்சியாங், உள் மங்கோலியா மற்றும் கான்சு உள்ளிட்ட வட சீனாவின் பகுதிகள்.[1][2][3]
வரலாறு 
• Established
கி. மு. 3ஆம் நூற்றாண்டு
• Disestablished
கி. பி. 1ஆம் நூற்றாண்டு
முந்தையது
பின்னையது
உயேசி
ஓர்டோஸ் கலாச்சாரம்
சகர்கள்
ஆன் அரசமரபு
சியான்பே அரசு
ரூரன் ககானரசு
தொச்சாரியர்கள்
முதலாம் துருக்கியக் ககானரசு
க்ஷியோங்னு
சீன மொழி 匈奴

சியோங்னு [ɕjʊ́ŋ.nǔ] (சீனம்: 匈奴வேட்-கில்சு: ஹ்ஸியுங்-னு) என்பவர்கள் பண்டைய சீன ஆதாரங்களின் படி கிழக்கு ஆசிய புல்வெளியில் கி. மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து, கி. பி. 1 ஆம் நூற்றாண்டு வரை இருந்த நாடோடி மக்களின் பழங்குடியின கூட்டமைப்பு[6] ஆகும். கி. மு. 209 க்கு பிறகு சியோங்னு பேரரசை அவர்களது உச்ச தலைவர் மொடு சன்யு நிறுவியதாக சீன ஆதாரங்கள் கூறுகின்றன.[7]

கி. மு. இரண்டாம் நூற்றாண்டின் போது அவர்களது முந்தைய பிரபுக்களான உயேசி, நடு ஆசியாவிலிருந்து இடம் பெயர்ந்த பிறகு வட கிழக்கு ஆசியாவின் புல்வெளிகளில், பிற்காலத்தில் மங்கோலியா என்று அழைக்கப்பட்ட பகுதியில் சியோங்னு முக்கிய சக்தியாக உருவாயினர். தற்போதைய சைபீரியா, உள் மங்கோலியா, கன்சு மற்றும் சிஞ்சியாங் ஆகியவற்றின் பகுதிகளிலும் சியோங்னு செயல்பாட்டில் இருந்தனர். அண்டை நாடுகளான தென் கிழக்கில் இருந்த சீன அரசமரபுகளுடன் இவர்களது உறவு முறையானது சிக்கலானதாக இருந்தது. சண்டை மற்றும் அமைதியான காலங்கள் மாறி மாறி வந்தன. இவர்களுக்கு இடையில் கப்பம் கட்டுதல், வணிகம் மற்றும் திருமண ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன.

16 ராஜ்யங்களின் சகாப்தத்தின் போது இவர்கள் ஐந்து காட்டுமிராண்டிகளில் ஒருவராகக் கருதப்பட்டனர். 5 காட்டுமிராண்டிகளின் எழுச்சி என்று அழைக்கப்பட்ட சீன ஆட்சிக்கு எதிரான எழுச்சியில் இவர்கள் பங்கேற்றனர்.

சியோங்னுவை மேற்காசிய புல்வெளிகளின் பிற்கால குழுக்களுடன் அடையாளப்படுத்தும் முயற்சிகள் இன்றும் சர்ச்சைக்குரியதாகவே உள்ளன. இவர்களுக்கு மேற்கில் சிதியர்கள் மற்றும் சர்மதியர்கள் இருந்தனர். சியோங்னுவின் மைய இன அடையாளமானது பல்வேறுபட்ட கருதுகோள்களின் பாடமாக உள்ளது. ஏனெனில் முக்கியமாக பட்டங்கள் மற்றும் தனிநபர் பெயர்கள் போன்ற ஒரு சில வார்த்தைகள் மட்டுமே சீன ஆதாரங்களில் பாதுகாக்கப்பட்டுள்ளன. சியோங்னு என்ற பெயர் ஹூனர்கள் அல்லது ஹுனா மக்களுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது.[8] இது ஒரு சிலரால் மறுக்கப்பட்டாலும் இவ்வாறு கருதப்படுகிறது.[9][10] பிற மொழியியல் தொடர்புகள் - அவையும் சர்ச்சைக்குரியதாகவே உள்ளன - ஈரானிய அறிஞர்கள் உள்ளிட்டோரால் பரிந்துரைக்கப்படுகின்றன[11][12][13] மங்கோலிய,[14] துருக்கிய,[15][16] உரலிக்,[17] எனிசை,[9][18][19] திபெத்தோ-பருமிய[20] அல்லது பல இன மொழிகள்.[21]

உசாத்துணை[தொகு]

 1. Coatsworth, John; Cole, Juan; Hanagan, Michael P.; Perdue, Peter C.; Tilly, Charles; Tilly, Louise (16 March 2015). Global Connections: Volume 1, To 1500: Politics, Exchange, and Social Life in World History. Cambridge University Press. பக். 138. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-316-29777-3. https://books.google.com/books?id=w5vlBgAAQBAJ&pg=PA138. 
 2. Atlas of World History. Oxford University Press. 2002. பக். 51. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-521921-0. https://books.google.com/books?id=ffZy5tDjaUkC&pg=PA51. 
 3. Fauve, Jeroen (2021). The European Handbook of Central Asian Studies. பக். 403. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-8382-1518-1. https://books.google.com/books?id=KPBIEAAAQBAJ&pg=PA406. 
 4. Zheng Zhang (Chinese: 鄭張), Shang-fang (Chinese: 尚芳). 匈 – 字 – 上古音系 – 韻典網. ytenx.org [韻典網]. Rearranged by BYVoid. Italic or bold markup not allowed in: |website= (உதவி)
 5. Zheng Zhang (Chinese: 鄭張), Shang-fang (Chinese: 尚芳). 奴 – 字 – 上古音系 – 韻典網. ytenx.org [韻典網]. Rearranged by BYVoid. Italic or bold markup not allowed in: |website= (உதவி)
 6. "Xiongnu People". britannica.com. Encyclopædia Britannica. 11 மார்ச் 2020 அன்று மூலம் பரணிடப்பட்டது. 25 July 2015 அன்று பார்க்கப்பட்டது.
 7. di Cosmo 2004: 186
 8. Grousset, Rene (1970). The Empire of the Steppes. Rutgers University Press. பக். 19, 26–27. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8135-1304-1. https://archive.org/details/empireofsteppes00grou. 
 9. 9.0 9.1 Beckwith 2009, ப. 51–52, 404–405
 10. Vaissière 2006
 11. Harmatta 1994, ப. 488: "அவர்களது தேசிய பழங்குடி இனங்கள் மற்றும் அரசர்கள் (ஷன்-யீ) ஈரானிய பெயர்களை கொண்டுள்ளனர். சீனர்களால் குறிப்பிடப்பட்டுள்ள சியோங்னு வார்த்தைகள் அனைத்தும் ஈரானிய மொழியான சகா மொழியிலிருந்து விளக்கப்படக் கூடியவை ஆகும். எனவே பெரும்பாலான சியோங்னு பழங்குடி இனங்கள் கிழக்கு ஈரானிய மொழியை பேசின என்பது தெளிவாகிறது."
 12. Bailey 1985, ப. 21–45
 13. Jankowski 2006, ப. 26–27
 14. Tumen D., "Anthropology of Archaeological Populations from Northeast Asia [1] பரணிடப்பட்டது 2013-07-29 at the வந்தவழி இயந்திரம் page 25, 27
 15. Hucker 1975: 136
 16. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; :0 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 17. Di Cosmo, 2004, pg 166
 18. Adas 2001: 88
 19. Vovin, Alexander. "Did the Xiongnu speak a Yeniseian language?". Central Asiatic Journal 44/1 (2000), pp. 87–104.
 20. 高晶一, Jingyi Gao (2017). Central Asiatic Journal 60 (1–2): 51–58. doi:10.13173/centasiaj.60.1-2.0051. 
 21. Geng 2005
"https://ta.wikipedia.org/w/index.php?title=சியோங்னு&oldid=3583131" இருந்து மீள்விக்கப்பட்டது