செர்னோபில் அணு உலை விபத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
விபத்துக்குப் பின் எடுக்கப்பட்ட 4 ஆவது அணு உலையின் படம்.

செர்னோபில் அணு உலை விபத்து என்பது 1986 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் நாள் அன்றைய சோவியத் ஒன்றியத்தின் உக்ரேனிலுள்ள பிப்யாட் என்னும் இடத்துக்கு அருகில் அமைந்திருந்த செர்னோபில் அணு உலையில் ஏற்பட்ட விபத்தைக் குறிக்கும்.

இங்கு நான்கு அணு உலைகள் இருந்தன. அவற்றில் ஒன்றின் நீர் குளிர்வு சாதனம் செயல்படாததன் காரணமாக, வெப்பம் அதிகரித்து, அணு உலையின் மையம் உருக ஆரம்பித்தது. 1986, ஏப்ரல் 26 அன்று அதிகாலை 1.23 மணியளவில் நேர்ந்த இந்த சம்பவம் தொடர்ந்து மூன்று மணி நேர வெப்பத்தின் காரணமாக , உருகுதலோடு, உலையில் உள்ள பிளாக்குகளைத் தீப்பற்ற செய்து வெடிக்கவும் வைத்தது. அதனால் சுமார் 20 வகையான கதிர் வீச்சுப் பொருள்கள் காற்று மண்டலத்தில் புகுந்தன. காற்று மண்டலத்தில் புகுந்த இக்கதிர் வீச்சுப் பொருள்கள் அங்கிருந்த நிலத்தில் விழுந்து சிதறின. இந்த கதிரியக்க வீழ் பொருள்கள் பத்து ஹிரோஷிமாக் குண்டுகளுக்கு சமமானதாக கருத்தப்படுகின்றது.

விளைவுகள்[தொகு]

இது உலகின் மிக மோசமான அணு உலை விபத்து எனச் சொல்லப்படுகின்றது. அனைத்துலக அணு ஆற்றல் நிகழ்வு அளவீட்டில் 7 ஆவது நிலையை எட்டிய ஒரே விபத்தான இதன் விளைவாக மோசமான கதிரியக்கம் சூழலுக்குள் வெளியேறியது. இந்நிகழ்வின் போது ஏற்பட்ட வெடிப்பினால் 30 பேர் இறந்தனர். எனினும் இவ்விபத்தினால் ஏற்பட்ட பின்விளைவுகளினால் இறந்தவர் தொகை அதிகமாகும். 2000 நபர்கள் இறந்தனர். இரத்தக்குழாய் வெடித்து அதிக அளவு இரத்தப்போக்கு, உறுப்புச் சிதைவு, முடி கொட்டுதல், கண்புரை, இரத்தத்தில் இயல்புக்கு மாறான நிலைகள், தோல்புற்று நோய், சீழ்பிடித்து ரணமாதல், கதிர்வீச்சு நோய் முதலிய நோய்கள் உருவாகின. இதன் காரணமாகா காற்று நீர் ஆகியவற்றில் கதிரியக்க மாசு படிந்து தாவரங்களையும், விலங்குகளையும் பாதித்தது. உயிரிகள் துன்புற்றன.

உலை வெடிப்புக்கு காரணம்[தொகு]

செம்மையாக வடிவமைக்கப்படாத அணு உலை, பணியாளர்களின் கவனக்குறைவு, விபத்துக்கான எச்சரிக்கைக் கருவிகள் முன்கூட்டி எச்சரித்த போதும், கடமையில் காட்டிய மெத்தனம்.

இதையும் பார்க்க[தொகு]

2011 செண்டாய் நிலநடுக்கமும் ஆழிப்பேரலையும்