பேச்சு:முதற் பக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

முதற்பக்க வடிவமைப்பு அல்லது வழுக்கள் தொடர்பான உரையாடல் மட்டும் இப்பக்கத்தில் செய்யலாம். முதற்பக்கத்தில் இடம்பெறும் கட்டுரைகள், செய்திகள் தொடர்பான கருத்துகளை அவ்வவற்றின் வார்ப்புருக்களின் பேச்சுப் பக்கங்களில் தெரிவியுங்கள். விக்கிப்பீடியா தொடர்பான உரையாடல்களுக்கு ஆலமரத்தடிக்குச் செல்லவும்.

  • முதல் பக்கம் இற்றைப்படாமல் இருந்தால் இந்த இணைப்பைச் சொடுக்குவதன் மூலம் சரியாகலாம்.
  • முதற்பக்க பராமரிப்பு/ இற்றைப்படுத்துதலில் பங்கு கொள்ள இங்கு செல்லவும்
தொகுப்பு

காப்பகம் (தொகுப்புகள்)


1 2 3 4 5

நீக்கவிடலாமா?[தொகு]

>>கட்டுரைகள்: அகர வரிசை - துறை வரிசை - புதியன - வலைவாசல்கள்<< வரியை நீக்கவிடலாமா? துறை வரிசையை சொடுக்கினால் சொற்பமான பகுப்புகளே காட்டுகிறது. --Mdmahir (பேச்சு) 13:06, 8 செப்டம்பர் 2015 (UTC)

👍 விருப்பம் துறை வரிசையை மட்டும் நீக்கி விடலாமே. --மதனாகரன் (பேச்சு) 13:16, 8 செப்டம்பர் 2015 (UTC)
நீக்குவதாக இருந்தால் துறை வரிசையை மட்டும் நீக்கலாம். பின்பு தாய்ப் பகுப்பை விரிவுபடுத்திவிட்டு மீண்டும் இணைக்கலாம். அல்லது தாய்ப் பகுப்பை விரிவுபடுத்திவிட்டு மு.ப இலிருந்து நீக்குவதைத் தவிர்க்கலாம்:)--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 13:45, 8 செப்டம்பர் 2015 (UTC)

முதல்பக்கம் / முதற் பக்கம் இன்னும் Main Page-ஆகவே இருக்கின்றது :(.
மேலும் Embassy - விக்கிப்பீடியா தூதரகம், font help - எழுத்துரு உதவி ? - ʋɐɾɯnபேச்சு 17:14, 5 நவம்பர் 2015 (UTC)

கவனிக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 20:02, 5 நவம்பர் 2015 (UTC)
@Wwarunn: முதற் பக்கம் சீர்செய்யப்பட்டுள்ளது. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. பிற மொழி விக்கிப்பீடியர்கள் (தமிழ் தெரியாதவர்கள் உட்பட) தொடர்பு கொள்வதற்காகப் பயன்படுவதே தூதரகம். எழுத்துரு தெரியாதவிடத்து உதவுவதற்காகவே எழுத்துரு உதவி உள்ளது. எனவே, Embassy, Font help ஆகியவை ஆங்கிலத்தில் இருப்பதே நன்று. --மதனாகரன் (பேச்சு) 04:17, 6 நவம்பர் 2015 (UTC)
நன்றி @மதனாஹரன்: ஆயினும் விக்சனரி தவிர்த்த பிற விக்கி திட்டங்களில் இன்னும் Main Page என்றே காட்சியளிக்கின்றது - ʋɐɾɯnபேச்சு 14:03, 8 நவம்பர் 2015 (UTC)

துறை வரிசை, வலைவாசல்கள் இணைப்புகளை நீக்கியுள்ளேன். வலைவாசல்களின் முகப்புப் பக்கம் ஏகப்பட்ட சிகப்பு இணைப்புகளுடன் காணப்படுகிறது. சீராக்க வேண்டும். --இரவி (பேச்சு) 08:59, 9 நவம்பர் 2015 (UTC)

//எனவே, Embassy, Font help ஆகியவை ஆங்கிலத்தில் இருப்பதே நன்று.//

இது இருமொழியிலும் இருக்கனும். தமிழ் மட்டும் தெரிந்தவர்கள் என்ன செய்வார்கள்?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:59, 11 நவம்பர் 2015 (UTC)

Embassy தமிழ் தெரியாதவர்களுக்கானது. --AntanO 02:13, 12 நவம்பர் 2015 (UTC)

தகவல் பிழை[தொகு]

1873 - சன்மார்க்க சிந்தனையாளர், வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் (படம்) இறப்பு. என்று முதல் பக்கத்தில் உள்ளது இது தவறான தகவலாகும். இவர் அந்த நாளில் காணாமல் போனார் என்பதே சரியாகும். இத்தகவலை திருத்தவேண்டும் arulghsrArulghsr (பேச்சு) 06:43, 23 சனவரி 2016 (UTC)

திருத்தியிருக்கிறேன். நன்றி.--Kanags \உரையாடுக 06:59, 23 சனவரி 2016 (UTC)

செய்திகளில்[தொகு]

தற்போது புதிய வார்ப்புரு வழியே படத்துடன் பெயரும் காட்டப்படுகின்றது. இதுவரை படத்தில் உள்ளவரைக் குறிக்க அவரது பெயரை தடித்த எழுத்துக்களிலும் (படம்) என்ற குறிப்பினாலும் உணர்த்தி வந்தோம். இந்த வார்ப்புரு பயன்படுத்தினால், அவ்வாறு குறியிடத் தேவையில்லை. எது மேம்பாடானது/ எதனைப் பின்பற்றலாம் ? பெயர் சில நேரங்களில் பெரியதாக இருந்தால் வடிவமைப்பு பாதிக்கப்படக் கூடும். உரையாடி ஒரு முடிவெடுப்போம்.--மணியன் (பேச்சு) 04:41, 3 பெப்ரவரி 2016 (UTC)

செய்திகளில் மட்டுமல்ல, முதல் பக்கத்திலுள்ள அனைத்துப் பகுதிகளிலும், பழைய முறையின் படி தகவலில் தடித்த எழுத்திலும், படத்தில் பெயரில்லாமலும் காட்டப்படுவதே சிறந்த வடிவமைப்பாக எனக்குத் தெரிகிறது.--Kanags \உரையாடுக 07:24, 3 பெப்ரவரி 2016 (UTC)

விக்கிப்பீடியர் இரங்கல்[தொகு]

அண்மையில் சக விக்கிப்பீடியர் பி.எம்.புன்னியாமீன் மறைந்துள்ளார். இவரது விக்கிப்பீடியா அறிமுகம் உள்ளது. முதற்பக்கத்தில் இத்தகைய சமயங்களில் விக்கிப்பீடியா அறிமுகம் என்றுள்ள பத்தியில் தலைப்பை விக்கிப்பீடியாவின் ஆழ்ந்த இரங்கல் எனக் குறிப்பிட்டு இவரது அறிமுகத்தைத் தரலாம் என்பது எனது பரிந்துரை. அறிமுக உரை சற்றே திருத்தப்பட வேண்டியிருக்கும். தலைப்புப் பட்டைகள் கருமை வண்ணத்தில் இருப்பின் பொருத்தமாக இருக்கும். முதற்பக்க வடிவமைப்பாளர்களின் கவனத்திற்கு வைக்கிறேன். இவருடன் தொடங்கி இதனை ஓர் நெறிமுறையாக அமைக்கலாம்.--மணியன் (பேச்சு) 08:39, 11 மார்ச் 2016 (UTC)

ஒப்புதல் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:11, 11 மார்ச் 2016 (UTC)
ஒப்புதல்--Mohamed ijazz (பேச்சு) 09:56, 11 மார்ச் 2016 (UTC)
ஒப்பம். விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/பீ. எம். புன்னியாமீன் பக்கத்தை உரியவாறு திருத்தி உதவ வேண்டுகிறேன். முதற்பக்கத்தில் இரங்கலைத் தெரிவிப்போம்.--இரவி (பேச்சு) 13:52, 11 மார்ச் 2016 (UTC)
@Ravidreams:, அறிமுகப் பக்கத்தை தக்கவாறு திருத்தியுள்ளேன். பிற பயனர்களும் சரிபார்த்திட வேண்டுகின்றேன்.--மணியன் (பேச்சு) 04:42, 12 மார்ச் 2016 (UTC)
@Rsmn:, முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தியுள்ளேன்.--இரவி (பேச்சு) 06:20, 12 மார்ச் 2016 (UTC)

புதிய கட்டுரைகள் பகுதியையைக் காணவில்லை[தொகு]

முதற்பக்கத்தில் புதிய கட்டுரைகளை காணூவதற்கு ஏதுவாக இருந்த புதிய கட்டுரைகள் இணைப்புச் சொல் இல்லாமல் போயுள்ளது. இதை நிரவாகிகள் கவணிக்கவும்.Arulghsr (பேச்சு)

சீரான வடிவமைப்புக்கு ஏற்புடையதாக இல்லாதிருந்ததால் நீக்கப்பட்டுள்ளது. ஆ.வி.யிலும் அவ்வாறே உள்ளது. அண்மைய மாற்றங்கள் பகுதியில் உள்ள புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும் என்பதில் அல்லது சிறப்பு:NewPages என்பதனூடாகக் காணலாம். --AntanO 05:16, 9 திசம்பர் 2016 (UTC)

உங்களுக்குத் தெரியுமா?[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவில், உங்களுக்குத் தெரியுமா? பகுதியில் சங்கிலி விளையாட்டு, யூர்ட் மற்றும் மார்கழி உற்சவம் எனும் கட்டுரைகள் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக உள்ளது. இப்பகுதியில் புதிய கட்டுரைகளை சேர்க்க இயலுமா? --எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 01.02:50, 3 மார்ச் 2017 (UTC)

பரிந்துரைப்பக்கத்தில் குறிப்பிடுங்கள். இற்றைப்படுத்துகிறேன். --AntanO 08:39, 4 மார்ச் 2017 (UTC)
@எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி: இங்கு உங்கள் பரிந்துரைகளை பதிவு செய்யுங்கள். அங்குள்ள பரிந்துரைகளுக்கான தகுதிகள் என்பதில் உள்ளவற்றையும் கருத்திற் கொள்ளுங்கள். --AntanO 09:23, 4 மார்ச் 2017 (UTC)

--முதல் பக்க கட்டுரையான பாமியான் மாகாணம் மற்றும் உங்களுக்குத் தெரியுமா கட்டுரைகளில் வெச்சூர் மாடு, மோனிகா செலசு மற்றும் எம்எம்ஆர் தடுப்பு மருந்து, கடந்த மார்ச் 2017 முதல் மாற்றப்படாமல் உள்ளது. இப்பகுதிகளில் புதிய கட்டுரைகளை சேர்க்க இயலுமா? --எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 19.10, 28 சூன் 2017 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:முதற்_பக்கம்&oldid=2455042" இருந்து மீள்விக்கப்பட்டது