வெச்சூர் மாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெச்சூர் பசு

வெச்சூர் மாடு (மலையாளம்: വെച്ചൂര്‍ പശു ) என்பது கேரளத்தின் கோட்டையம் மாவட்டத்தில் உள்ள வெச்சூர் என்ற ஊரின் பெயரால் அழைக்கப்படுகிறது. இவை சராசரியாக 87 செமீ உயரத்துடனும், 124 செ.மீ. சராசரி நீளமுடனும் இருக்கும். இது உலகின் சிறிய மாடாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பித்துள்ளது.[1] மேலும் இது குறைந்த உணவில் நிறைய பால் கறக்க‍க்கூடியது. [2] வெச்சூர் மாடுகள் விலங்கு வளர்ப்பு பேராசிரியரான சோசம்மா லைப் மற்றும் அவரது மாணவர்கள் கொண்ட குழு இணைந்து செய்த பணியின் காரணமாக இந்த மாடுகள் மரபியலாக அழிவிலிருந்து காக்கப்பட்டன. [3] இவர்களால் 1989 ஆம் ஆண்டில், ஒரு பாதுகாப்பு அலகு தொடங்கப்பட்டது. 1998 இல் பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பு விவசாயிகளின் பங்களிப்புடன் அமைக்கப்பட்டது. [4] வெச்சூர் மாடுகள் 1960 வரை கேரளத்தில் பிரபலமாக இருந்தன, ஆனால் இந்த மாடுகள் கலப்பினத்துக்கு ஆளானதால் அரிய மாடுகளாயின. [5] 2000 ஆம் ஆண்டில், வெச்சூர் மாடு உள்நாட்டு விலங்கு வேறுபாட்டுக்கான எப்சிஓ வின் உலக கண்காணிப்பு பட்டியலில், உடனடியாக அழியக்கூடிய விலங்கு பட்டியலில் இடம் பெற்றிருந்த‍து. ஒரு இன விலங்கில் ஆண் பெண் விலங்குகளின் எண்ணிக்கை மிகவும் குறையும்போது இந்த பட்டியலில் சேர்க்கப்படும் . [6] இந்த மாடுகள் சுமார் 200 மாடுகள் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இவற்றில் கிட்டத்தட்ட 100 மாடுகள் கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் இருக்கும். இந்த மாடுகளின் சராசரி உயரம் 90 செ மீ ஆகவும், சராசரி எடை 130 கிலோவாகவும் இருக்கும். ஒரு நாளைக்கு மூன்று லிட்டர் பால் கறக்கக்கூடியது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Shortest cow (height)". Guinness World Records. பார்க்கப்பட்ட நாள் June 21, 2014.
  2. Krishnakumar, R. (9 April 1999). "A cow and controversy", Frontline (magazine).
  3. Animal genetics Resource Bulletin 1997 (FAO)
  4. Proceedings of the National Conference on Native Livestock Breeds and their Sustainable Use 2010.
  5. Prabu, M. J. (2005-12-01). "Vechur cattle: ideal for household rearing". The Hindu. Archived from the original on 2007-08-23. பார்க்கப்பட்ட நாள் January 6, 2012. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  6. Sainath, P. (January 5, 2012). "Holy cow! Small is beautiful". The Hindu. http://www.thehindu.com/opinion/columns/sainath/article2775282.ece. 

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Vechur Cattle
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெச்சூர்_மாடு&oldid=3572254" இலிருந்து மீள்விக்கப்பட்டது