மோனிக்கா செலசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மோனிகா செலசு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மோனிக்கா செலசு
Monica Seles
Monica Seles 1991.jpg
நாடு  யுகோசுலாவியா (1988–1994)
 அமெரிக்கா (1994–2008)
வசிப்பிடம் சரசோட்டா, புளோரிடா, ஐக்கிய அமெரிக்கா
பிறந்த திகதி திசம்பர் 2, 1973 (1973-12-02) (அகவை 44)
பிறந்த இடம் நோவி சாத், யுகொசுலாவியா
உயரம் 1.78 m (5)
நிறை
தொழில்ரீதியாக விளையாடியது 1989
ஓய்வு பெற்றமை 2008 (last match 2003)
விளையாட்டுகள் இடக்கை
வெற்றிப் பணம் US$ 14,891,762
ஒற்றையர்
சாதனை: 595–122 (82.98%)
பெற்ற பட்டங்கள்: 53
அதி கூடிய தரவரிசை: இல. 1 (மார்ச் 11, 1991)
பெருவெற்றித் தொடர் முடிவுகள்
ஆஸ்திரேலிய ஓப்பன் W (1991, 1992, 1993, 1996)
பிரெஞ்சு ஓப்பன் W (1990, 1991, 1992)
விம்பிள்டன் F (1992)
அமெரிக்க ஓப்பன் W (1991, 1992)
இரட்டையர்
சாதனைகள்: 89–45
பெற்ற பட்டங்கள்: 6
அதிகூடிய தரவரிசை: No. 16 (ஏப்ரல் 22, 1991)
பெருவெற்றித் தொடர் முடிவுகள்
ஆஸ்திரேலிய ஓப்பன் SF (1991, 2001)
பிரெஞ்சு ஓப்பன் 3R (1990)
விம்பிள்டன் QF (1999)
அமெரிக்க ஓப்பன் QF (1999)

தகவல் கடைசியாக இற்றைப்டுத்தப்பட்டது: .

மோனிகா செலசு (பிறப்பு - டிசம்பர் 2, 1973) முன்னாள் யுகோசுலோவியா நாட்டு தொழிற்முறை பெண் டென்னிசு ஆட்டக்காரர். இவர் அங்கேரி இனத்தை சேர்ந்தவர். இவர் யுகோசுலோவியா நாட்டிலுள்ள நோவி சேட் என்னுமிடத்தில் பிறந்து வளர்ந்தார். 1994ஆம் ஆண்டு அமெரிக்க குடியுரிமையை பெற்றார்.[1] யூன் 2007ஆம் ஆண்டு அங்கேரியின் குடியுரிமையையும் பெற்றார். இவர் ஒன்பது முறை கிராண்ட் சிலாம் ஒற்றையர் பட்டத்தை பெற்றுள்ளார். இதில் எட்டு முறை யுகோசுலோவியா குடியுரிமையுடனும் ஒரு முறை அமெரிக்க குடியுரிமையுடனும். பதினாறு வயுது உள்ள போது பிரெஞ்சு ஓப்பன் பட்டத்தை 1990ஆம் ஆண்டு வென்றார்.இது வரை வேறுயாரும் இந்த இளவயதில் பிரெஞ்சு ஒப்பன் பட்டம் பெற்றதில்லை. [2]. அனைத்து கிராண்ட் சிலாம்களையும் தன் இருபது வயதிற்குள் பெற்றார். 1991- 1992 ஆம் ஆண்டுகளில் பெண்களில் முதல் தர வரிசை ஆட்டக்காரரக இருந்தார். ஏப்பரல் 23, 1993 ஆடுகளத்தில் ஒன்பது அங்குல கத்தியால் பின்புறமிருந்து ஒரு ஆளால் குத்தப்பட்டார். [3] அதனால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இவர் டென்னிசு ஆடவில்லை. 1995ஆம் ஆண்டிலிருந்து விளையாட வந்தாலும் 1996ஆம் ஆண்டு ஆத்திரேலிய ஓப்பன் பட்டத்தை நான்காவது முறையாக வென்றாலும் இவரால் தன் பழைய திறனுடன் தொடர்ச்சியாக விளையாடமுடியவில்லை. கடைசி தொழிற்முறை ஆட்டத்தை 2003இல் விளையாடினாலும் 2008 பிப்ரவரியே ஓய்வு பெறுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Monica Seles Biography
  2. "Ask Steven: Rafael Nadal the youngest French Open winner?". இஎசுபிஎன். பார்த்த நாள் மார்ச் 10, 2017.
  3. 1993: Tennis star stabbed
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோனிக்கா_செலசு&oldid=2259604" இருந்து மீள்விக்கப்பட்டது