விம்பிள்டன் கோப்பை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
விம்பிள்டன் வரிப்பந்தாட்டப் போட்டிகள்
Wimbledon logo.png
பெருவெற்றி (கிராண்ட் சிலாம்)
இடம் விம்பிள்டன்
ஐக்கிய இராச்சியத்தின் கொடி ஐக்கிய இராச்சியம்
கூடும் இடம் அனைத்து இங்கிலாந்து புல்தரை வரிப்பந்தாட்டக் கழகம்
தரை புற்றரை / வெளி
ஆண்கள் தேர்வு 128S / 128Q / 64D
பெண்கள் தேர்வு 128S / 96Q / 64D
பரிசுப் பணம் £11,282,710
அதிகாரபூர்வ இணையத்தளம்
பெருவெற்றி (கிராண்ட் சிலாம்) தொடர்கள்
விம்பிள்டன் ஒற்றையர் ஆட்ட வெற்றிச் சின்னங்கள்: ஆண்களுக்கான கோப்பை(கீழே), பெண்களுக்கான கேடயம் (மேலே) படத்தில் பார்க்கலாம்
புகழ்பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் முதல் திடல் (கோர்ட்-1)

விம்பிள்டன் பெருவெற்றி வரிப்பந்தாட்டப் போட்டிகள் டென்னிசு வரலாற்றின் மிகப் பழைமையான போட்டியாகும். வரிப்பந்தாட்டப் போட்டிகளில் அதிக மரியாதைக்குரியதாகும். ஆண்டுதோறும் சூன் மாதக்கடைசியில் தொடங்கி சூலையில் முடிவடைகிறது. ஆண்டின் மூன்றாவது கிராண்ட் சிலாம்/பெருவெற்றிப் போட்டித் தொடராகும். ஒவ்வோராண்டும் ஆஸ்திரேலிய ஓப்பன், பிரெஞ்சு ஓப்பன், விம்பிள்டன், அமெரிக்க ஓப்பன் ஆகிய டென்னிஸ் கிராண்ட் சிலாம் போட்டிகள் நடைபெறுகின்றன. ஆண்டி முர்ரே மற்றும் மரியான் பர்தோலி ஆகியோர் 2013-க்கான விம்பிள்டன் வாகையர்களாவர்.

விம்பிள்டன் போட்டிகளில் பலவித பாரம்பரியமான வழக்கங்கள் கடைபிடிக்கப்படுகின்றன. போட்டியாளர்களுக்கு ஆடைக்கட்டுப்பாடு உண்டு, வெள்ளை நிற ஆடைகள் மட்டுமே அணிய அனுமதிக்கப்படுவர். மேலும், ஆட்டக்களங்களை சுற்றியுள்ள இடங்கள் விளம்பரங்களுக்காக பயன்படுத்தப்படுவதில்லை. 2009-ஆம் ஆண்டில் முக்கியமான மத்திய ஆட்டக்களத்தில் பின்னிழுக்கக்கூடிய கூரை கட்டப்பட்டது, இது மழை பெய்வதால் ஆட்டங்கள் தடைபடுவதைக் குறைக்கிறது.

படத்தொகுப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விம்பிள்டன்_கோப்பை&oldid=1454713" இருந்து மீள்விக்கப்பட்டது