பிரெஞ்சு ஓப்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரோலாண்ட் கேரோசு
பெருவெற்றி (கிராண்ட் சிலாம்)
இடம்பாரிஸ்(16வது நிர்வாகப்பிரிவு]])
 பிரான்சு
கூடும் இடம்இல் தெ பூதோ (Île de Puteaux) (அனைத்து ஒற்றை ஆண்டுகளில் 1891 இலிருந்து 1907 வரை)
பிரெஞ்சு பந்தய மைதானம் (Racing Club de France) (அனைத்து இரட்டை ஆண்டுகளிலும் 1892-1908, பிறகு 1910-1924, 1926 )
போர்தோவில் பிரிம்ரோசு சிற்றூர் தடகள சங்கம் (Société Athlétique de la Villa Primrose in Bordeaux) (1909)
பிரெஞ்சு விளையாட்டரங்கம் (Stade Français) (1925, 1927)
ரோலாண்ட் கேரோசு விளையாட்டரங்கு (1928–நடப்பு)
தரைமண்- ஒற்றை ஆண்டுகள் (1891–1907) களிமண்- இரட்டை ஆண்டுகள் (1891-1907) களிமண் (1908–நடப்பு) (வெளிப்புறம்)
ஆண்கள் தேர்வு128S / 128Q / 64D (2009)
பெண்கள் தேர்வு128S / 96Q / 64D (2009)
பரிசுப் பணம் 16,150,460 (2009)[1]
அதிகாரபூர்வ இணையத்தளம்
பெருவெற்றி (கிராண்ட் சிலாம்) தொடர்கள்

பிரெஞ்சு ஓப்பன்(பிரெஞ்சு:Les Internationaux de France de Roland Garros அல்லதுTournoi de Roland-Garros) என்று பரவலாக அறியப்படும் பிரெஞ்சு திறந்த சுற்று டென்னிசுப் போட்டிகள் பிரான்சின் தலைநகர் பாரிசில் ரோலாண்ட் கேரோசு விளையாட்டரங்கில் ஆண்டுதோறும் மே மாத இறுதி மற்றும் சூன் மாத துவக்கத்தில் இரு வாரங்கள் நடத்தப்படுகிறது. டென்னிசு விளையாட்டின் பெருவெற்றித் தொடர்கள் (கிராண்ட் சிலாம்) என அறியப்படும் நான்கு போட்டிகளில் ஆண்டின் இரண்டாவது போட்டியாக இது உள்ளது. களிமண் தரையில் நடைபெறும் உலகின் டென்னிசு போட்டிகளில் இது முதன்மையாக விளங்குகிறது. பெருவெற்றித் தொடர் போட்டிகளில் ரோலாண்டு கரோசில் மட்டுமே இன்றும் களிமண் தரையில் டென்னிசுப் போட்டிகள் நடக்கின்றன.

ரோலாண்ட் கேரோசு விளையாட்டரங்கு.

டென்னிசு போட்டிகளில் குறிப்பிடத்தக்க நிகழ்வாகத் திகழும் இப்போட்டி[2] உலகின் பல நாடுகளிலும் பார்வையாளர்களை காணொளி மூலம் கவர்ந்திழுக்கிறது.[3][4] களிமண் தரையின் மென்மையால் மெதுவான விளையாட்டுத் தன்மையாலும் ஐந்து தொகுப்பு ஆண்கள் ஒற்றையர் போட்டியில் கடைசி தொகுப்பில் ஆட்டங்கள் சமநிலைமுறிவின்றி(tiebreak) ஆடப்படுவதாலும் இப்போட்டிகள் உலகின் உடற்திறனை சோதிக்கும் போட்டியாகக் கருதப்படுகிறது.[5][6]

2005, 2060, 2007, 2008, 2010, 2011, 2012, 2013, 2014, 2017, 2018, 2019, 2020 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளுக்கான ஆண்கள் ஒற்றையர் போட்டியில் வென்று (14 முறை) சாதனையாளராக ரஃபயெல் நதால் விளங்குகிறார்.


நிகழ்வு வெற்றியாளர் எதிராளி புள்ளிகள்
2022 ஆண்கள் ஒற்றையர் எசுப்பானியா ரஃபேல் நடால் நோர்வே காசுபர் ரூட் 6–3, 6–3, 6–0
2022 பெண்கள் ஒற்றையர்] போலந்து இகா சுவட்டிக் ஐக்கிய அமெரிக்கா கோகோ காப் 6–3, 6–7(2–7), 6–1, 6-3
2022 ஆண்கள் இரட்டையர் எல் சல்வடோர் மார்சிலோ ஆர்வேலோ'
நெதர்லாந்து
யூ-யூலியன் ரோசர்
குரோவாசியா இவான் டுசிவிக்
ஐக்கிய அமெரிக்கா ஆசுட்டின் கார்சிக்
6–7(4–7), 7–6(7–5), 6–3
2022 பெண்கள் இரட்டையர் பிரான்சு கிறிசுட்டினா மலாமெலோவிக்
பிரான்சு கரோலினா கார்சியா
ஐக்கிய அமெரிக்கா கோகோ காப்
ஐக்கிய அமெரிக்கா செசிகா பெகுலா
2–6, 6–3, 6–2
2022 கலப்பு இரட்டையர் சப்பான் இனா சிபகரா
நெதர்லாந்து வெசுலி கூல்கப்
நோர்வே உல்ரிக்கே இய்கேரி
பெல்ஜியம் சோர்டன் வெலிகென்
7–6(7–5), 6–2

மேற்கோள்கள்[தொகு]

  1. "Roland Garros - The 2009 French Open - Official Site by IBM". http://www.rolandgarros.com. பார்த்த நாள்: 2009-06-05. 
  2. Clarey, Christopher (2001-06-30). "Change Seems Essential to Escape Extinction : Wimbledon: World's Most-Loved Dinosaur". International Herald Tribune இம் மூலத்தில் இருந்து 2008-01-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080127133850/http://www.iht.com/articles/2001/06/30/a20_16.php. பார்த்த நாள்: 2007-07-20. 
  3. "Day 15 - Press conference with tournament's management". rolandgarros.com. 2007-06-10 இம் மூலத்தில் இருந்து 2007-07-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070715083209/http://2007.rolandgarros.com/en_FR/news/interviews/2007-06-10/200706101181479459046.html. பார்த்த நாள்: 2007-08-10. 
  4. "Roland Garros: a venue open all year long. Television Coverage". ftt.fr இம் மூலத்தில் இருந்து 2008-04-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080420193149/http://www.fft.fr/rolandgarros/default_en.asp?id=2293. பார்த்த நாள்: 2007-08-09. 
  5. Clarey, Christopher (2006-05-26). "In a year of change at Roland Garros, the winners may stay the same". International Herald Tribune இம் மூலத்தில் இருந்து 2008-01-31 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080131044817/http://www.iht.com/articles/2006/05/26/news/preview.php. பார்த்த நாள்: 2007-08-08. 
  6. "French Open - Countdown: Borg's view on RG". Eurosport. 2008-05-22. http://eurosport.yahoo.com/22052008/58/french-open-countdown-borg-s-view-rg.html. பார்த்த நாள்: 2008-05-22. [தொடர்பிழந்த இணைப்பு]

வெளியிணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரெஞ்சு_ஓப்பன்&oldid=3575605" இருந்து மீள்விக்கப்பட்டது