களிமண் ஆடுகளம்
Appearance

களிமண் ஆடுகளம்(clay court) நான்கு வித டென்னிசு ஆடுகளங்களில் ஒன்றாகும். இது உடைக்கப்பட்ட களிமண் கற்கள், செங்கற்கள் ஆகியவற்றால் உருவாக்கப்படுகிறது. பச்சை, கார்-ட்ரூ (அமெரிக்க வகை) களிமண் ஆடுகளங்ளை விட சிவப்பு-களிமண் ஆடுகளங்களில் பந்து மெதுவாக செல்லும். பிரெஞ்சு ஓப்பன் களிமண் ஆடுகளங்களில் விளையாடப்படுவதால், கிராண்ட் சிலாம் போட்டிகளிலே தனிச்சிறப்பு பெற்று விளங்குகிறது.
உலகின் மற்ற இடங்களை விட ஐரோப்பிய கண்டம் மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகளில் அதிக அளவில் களிமண் ஆடுகளங்கள் அமைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. மற்ற எந்த வகை ஆடுகளங்களையும் விட மிகக் குறைந்த செலவில் கட்டி முடிக்க முடியும் எனினும் பராமரிப்பு செலவுகள் மற்றவற்றை விட மிக அதிகம்.