ரஃபேல் நடால்
2015இல் நடால் | ||||||||||||||
முழுப் பெயர் | இரஃபேல் நடால் பரேரா | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
நாடு | எசுப்பானியா | |||||||||||||
வாழ்விடம் | மனகோர், மயோர்க்கா, எசுப்பானியா | |||||||||||||
பிறப்பு | 3 சூன் 1986 மனகோர், மயோர்க்கா, எசுப்பானியா | |||||||||||||
உயரம் | 1.85 m (6 அடி 1 அங்) (6 அடி 1 அங்)[1] | |||||||||||||
தொழில் ஆரம்பம் | 2001 | |||||||||||||
விளையாட்டுகள் | இடக்கை | |||||||||||||
பயிற்சியாளர் | டோனி நடால் (2005–2017) பிரான்சிசுக்கோ ரோயிக் (2005–) கார்லோசு மொயா (2016–) மார்க் லோப்பசு (2021–)[2] | |||||||||||||
பரிசுப் பணம் | US$127,121,385 [3]
| |||||||||||||
இணையதளம் | rafaelnadal.com | |||||||||||||
ஒற்றையர் போட்டிகள் | ||||||||||||||
சாதனைகள் | 1038–209 (83.24%) | |||||||||||||
பட்டங்கள் | 90 | |||||||||||||
அதிகூடிய தரவரிசை | இல. 1]] (18 ஆகத்து 2008) | |||||||||||||
தற்போதைய தரவரிசை | இல. 4 (06 சூன் 2022)[1] | |||||||||||||
பெருவெற்றித் தொடர் ஒற்றையர் முடிவுகள் | ||||||||||||||
ஆத்திரேலிய ஓப்பன் | வெ (2009, 2022) | |||||||||||||
பிரெஞ்சு ஓப்பன் | வெ (2005, 2006, 2007, 2008, 2010, 2011, 2012, 2013, 2014, 2017, 2018, 2019, 2020, 2022) | |||||||||||||
விம்பிள்டன் | வெ (2008, 2010) | |||||||||||||
அமெரிக்க ஓப்பன் | வெ (2010, 2013, 2017, 2019) | |||||||||||||
ஏனைய தொடர்கள் | ||||||||||||||
Tour Finals | இறுதி (2010, 2013) | |||||||||||||
ஒலிம்பிக் போட்டிகள் | (2008) | |||||||||||||
இரட்டையர் போட்டிகள் | ||||||||||||||
சாதனைகள் | 138–74 (65.09% ATP தொடர், கிராண்ட் சிலாம், டேவிசுக் கோப்பை) | |||||||||||||
பட்டங்கள் | 11 | |||||||||||||
அதியுயர் தரவரிசை | இல. 26 (8 ஆகத்து 2005) | |||||||||||||
தற்போதைய தரவரிசை | இல. 1156 (31 சனவரி 2022)[1] | |||||||||||||
பெருவெற்றித் தொடர் இரட்டையர் முடிவுகள் | ||||||||||||||
ஆத்திரேலிய ஓப்பன் | 3R (2004, 2005) | |||||||||||||
விம்பிள்டன் | 2R (2005) | |||||||||||||
அமெரிக்க ஓப்பன் | அரையிறுதி (2004) | |||||||||||||
ஏனைய இரட்டையர் தொடர்கள் | ||||||||||||||
ஒலிம்பிக் போட்டிகள் | (2016) | |||||||||||||
அணிப் போட்டிகள் | ||||||||||||||
டேவிசுக் கோப்பை | வெ (2004, 2008, 2009, 2011, 2019) | |||||||||||||
பதக்கத் தகவல்கள்
| ||||||||||||||
இற்றைப்படுத்தப்பட்டது: 31 சனவரி 2022. |
இரஃபேல் "ரஃபா" நடால் பெரேரா (Rafael "Rafa" Nadal Parera; பிறப்பு: 3 சூன் 1986)[4] என்பவர் தொழில்முறை டென்னிசு வீரர் ஆவார். டென்னிசு தொழில்முறை விளையாட்டுக்காரர்கள் சங்கத்தின் புள்ளிவிவரத்தின் படி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இவர் தரவரிசையில் நான்காவது இடத்தில் உள்ளார்[5]. களிமண் ஆடுகளங்களில் பல வெற்றிகளைப் பெற்றதினால் இவர் "கிங் ஆஃப் கிளே" என அழைக்கப்படுகிறார்.[6] அனைத்து விதமான ஆடுகளங்களிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலமாக டென்னிசு வரலாற்றில் சிறப்பான வீரராக அறியப்படுகிறார்[7]. 2022 சனவரியில் ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்றுப் போட்டியில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளதன்[8] மூலம் அதிக பெருவெற்றித் தொடர்களை வென்றுள்ள ஆடவர் என்ற பெருமையை அடைகிறார்[9] .
நடால் 22 முறை பெருவெற்றித் தொடர் (டென்னிசு) போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார்.[4] இவருக்கும் ரோஜர் ஃபெடரருக்கும் புகழ்பெற்ற டென்னிஸ் எதிரிடை இருந்து வந்தது. ரோஜர் ஃபெடரர் உடன் 33 போட்டிகளை விளையாடி நடால் 23 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். 2008 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.[10] நடால் 14 முறை பிரெஞ்சு ஓப்பன் விருது , 4 முறை யூ.எசு. ஓப்பன் விருது, இரு முறை விம்பிள்டன் கோப்பை விருது, இரு முறை ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று விருதினையும் பெற்றுள்ளார். இவர் உறுப்பினராக இருந்த சமயத்தில் எசுப்பானியா ஆண்கள் பிரிவு அணி, நான்கு முறைகளில் 2004, 2008, 2009 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் டேவிசுக் கோப்பை போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. டென்னிசு வரலாற்றில் பெருவெற்றித் தொடர் (டென்னிசு) போட்டியில் பட்டம் வென்ற ஏழாவது வீரர் எனும் பெருமையைப் பெற்றார். தனது 24 வயதில் இந்த சாதனையைப் படைத்தார்.
நடால் பெருவெற்றித் தொடர் (டென்னிசு) எனப்படும் பெருஞ் சிறப்புமிக்க போட்டியில் விம்பிள்டன் (இரு முறை வெற்றி), ஆஸ்திரேலிய ஓப்பன் (ஒரு முறை), ரோலான் கேரோஸ் (முன்னர் பிரெஞ்சு ஓப்பன் - 14 முறை), யூ.எஸ். ஓப்பன் (இரு முறை வெற்றி) ஆக மொத்தம் பதினான்கு கிராண்ட் சிலாம் போட்டிகளை வென்றுள்ளார். அன்ட்ரே அகாசிக்கு அடுத்தபடியாக ஒற்றையர் பிரிவில் பெருவெற்றித் தொடரில் கோப்பை வெல்லும் இரண்டாவது ஆண் வீரரானார். 2011 ஆம் ஆன்டிற்கான உலகின் சிறந்த விளையாட்டு வீரராகத் தேர்வானார்.[11]
ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]இரபேல் நடால் மனகோர்,பலேரிக் தீவுகள், எசுப்பானியாவில் சூன் 3, 1986 இல் பிறந்தார். இவரின் தந்தை செபாஸ்டியன் நடால் ஒரு தொழில் முனைவோர். இவருக்குச் சொந்தமாக ஒரு காப்பீடு நிறுவனம் உள்ளது. மேலும் கண்ணாடி மற்றும் சாளர நிறுவனம் வைத்துள்ளார்.[12] சா புந்தா எனும் உணவகத்தையும் நடத்தி வருகிறார். இவரின் தாய் அனா மரியா பரேரா குடும்பத் தலைவி. இவருக்கு மரியா இசபெல்லா எனும் இளைய சகோதரி உள்ளார். இவரின் மாமா மைக்கேல் ஏஞ்சல் நடால் ஒரு முன்னாள் தொழில்முறை கால்பந்தாட்ட வீரர் ஆவார்.[12] இவர் பார்சிலோனா கால்பந்துக் கழகத்திற்காகவும், தேசிய எசுப்பானிய அணிக்காகவும் விளையாடி உள்ளார்.[13] நடால் ரியல் மாட்ரிட் கால்பந்துக் கழகத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.[14] இவரின் மற்றொரு மாமாவான டோனி நடால் தான் இவருக்கு இயற்கையிலேயே டென்னிசு விளையாடும் திறன் இருப்பதைக் கண்டறிந்து இவரின் மூன்றாவது வயதிலேயே இவரை டென்னிசு விளையாடச் செய்தார்.[15]
தனது எட்டாம் வயதில் ,12 வயதிற்கு உட்பட்டோருக்கான உள்ளூர் டென்னிசு வாகையாளர் போட்டியில் வெற்றி பெற்றார். அந்தச் சமயத்தில் சிறந்த கால்பந்து வீரராகவும் திகழ்ந்துள்ளார்.[16] இதன் பின்பு தோனி நடால், இவருக்கு அளித்த பயிற்சியினை தீவிரப்படுத்தினார். இவருக்கு இயற்கையாகவே இருக்கும் இடக்கைப் பழக்கத்தினால் டென்னிசு மைதானத்தில் இடதுகை கொண்டு விளையாடுமாறு அறிவுறுத்தினார். வரிப்பந்தாட்டத்தில் வெளியே களப்புறம் நோக்கி அடிக்கும் போது நடால் இரண்டு கையையும் பயன்படுத்துவதைக் கவனித்தார்.[16]
கிராண்ட் சிலாம் போட்டிகளில் காலநிரல்
[தொகு]பெருவெற்றித் தொடர் இறுதிப் போட்டிகள்:
[தொகு]முடிவு | ஆண்டு | சுற்று | தரை | எதிராளி | புள்ளி |
---|---|---|---|---|---|
வெற்றி | 2005 | பிரெஞ்சு ஓப்பன் | களிமண் | மரியானோ புவெர்த்தா | 6–7(6–8), 6–3, 6–1, 7–5 |
வெற்றி | 2006 | பிரெஞ்சு ஓப்பன் (2) | களிமண் | ரொஜர் பெடரர் | 1–6, 6–1, 6–4, 7–6(7–4) |
தோல்வி | 2006 | விம்பிள்டன் | புற்றரை | ரொஜர் பெடரர் | 0–6, 6–7(5–7), 7–6(7–2), 3–6 |
வெற்றி | 2007 | பிரெஞ்சு ஓப்பன் (3) | களிமண் | ரொஜர் பெடரர் | 6–3, 4–6, 6–3, 6–4 |
தோல்வி | 2007 | விம்பிள்டன் | புற்றரை | ரொஜர் பெடரர் | 6–7(7–9), 6–4, 6–7(3–7), 6–2, 2–6 |
வெற்றி | 2008 | பிரெஞ்சு ஓப்பன் (4) | களிமண் | ரொஜர் பெடரர் | 6–1, 6–3, 6–0 |
வெற்றி | 2008 | விம்பிள்டன் | புற்றரை | ரொஜர் பெடரர் | 6–4, 6–4, 6–7(5–7), 6–7(8–10), 9–7 |
வெற்றி | 2009 | ஆத்திரேலிய ஓப்பன் | கடின | ரொஜர் பெடரர் | 7–5, 3–6, 7–6(7–3), 3–6, 6–2 |
வெற்றி | 2010 | பிரெஞ்சு ஓப்பன் (5) | களிமண் | ராபின் சோடர்லிங்கு | 6–4, 6–2, 6–4 |
வெற்றி | 2010 | விம்பிள்டன் (2) | புற்றரை | தொமாசு பெர்டிச்சு | 6–3, 7–5, 6–4 |
வெற்றி | 2010 | அமெரிக்க ஓப்பன் | கடின | நோவாக் ஜோக்கொவிச் | 6–4, 5–7, 6–4, 6–2 |
வெற்றி | 2011 | பிரெஞ்சு ஓப்பன் (6) | களிமண் | ரொஜர் பெடரர் | 7–5, 7–6(7–3), 5–7, 6–1 |
தோல்வி | 2011 | விம்பிள்டன் | புற்றரை | நோவாக் ஜோக்கொவிச் | 4–6, 1–6, 6–1, 3–6 |
தோல்வி | 2011 | அமெரிக்க ஓப்பன் | கடின | நோவாக் ஜோக்கொவிச் | 2–6, 4–6, 7–6(7–3), 1–6 |
தோல்வி | 2012 | ஆத்திரேலிய ஓப்பன் | கடின | நோவாக் ஜோக்கொவிச் | 7–5, 4–6, 2–6, 7–6(7–5), 5–7 |
வெற்றி | 2012 | பிரெஞ்சு ஓப்பன் (7) | களிமண் | நோவாக் ஜோக்கொவிச் | 6–4, 6–3, 2–6, 7–5 |
வெற்றி | 2013 | பிரெஞ்சு ஓப்பன் (8) | களிமண் | டேவிட் ஃபெரர் | 6–3, 6–2, 6–3 |
வெற்றி | 2013 | அமெரிக்க ஓப்பன் (2) | கடின | நோவாக் ஜோக்கொவிச் | 6–2, 3–6, 6–4, 6–1 |
தோல்வி | 2014 | ஆத்திரேலிய ஓப்பன் | கடின | ஸ்டானிசுலஸ் வாவ்ரின்கா | 3–6, 2–6, 6–3, 3–6 |
வெற்றி | 2014 | பிரெஞ்சு ஓப்பன் (9) | களிமண் | நோவாக் ஜோக்கொவிச் | 3–6, 7–5, 6–2, 6–4 |
தோல்வி | 2017 | ஆத்திரேலிய ஓப்பன் | கடின | ரொஜர் பெடரர் | 4–6, 6–3, 1–6, 6–3, 3–6 |
வெற்றி | 2017 | பிரெஞ்சு ஓப்பன் (10) | களிமண் | இசுத்தான் வாவ்ரிங்கா | 6–2, 6–3, 6–1 |
வெற்றி | 2017 | அமெரிக்க ஓப்பன் (3) | கடின | கெவின் ஆன்டர்சன் | 6–3, 6–3, 6–4 |
வெற்றி | 2018 | பிரெஞ்சு ஓப்பன் (11) | களிமண் | தொமினிக் தீம் | 6–4, 6–3, 6–2 |
வெற்றி | 2019 | ஆத்திரேலிய ஓப்பன் | கடின | நோவாக் ஜோக்கொவிச் | 3–6, 2–6, 3–6 |
வெற்றி | 2019 | பிரெஞ்சு ஓப்பன் (12) | களிமண் | தொமினிக் தீம் | 6–3, 5–7, 6–1, 6–1 |
வெற்றி | 2019 | அமெரிக்க ஓப்பன் (4) | கடின | டேனியல் மித்விதிவ் | 7–5, 6–3, 5–7, 4–6, 6–4 |
வெற்றி | 2020 | பிரெஞ்சு ஓப்பன் (13) | களிமண் | நோவாக் ஜோக்கொவிச் | 6–0, 6–2, 7–5 |
வெற்றி | 2022 | ஆத்திரேலிய ஓப்பன் (2) | கடின | டேனியல் மித்விதிவ் | 2–6, 6–7(5–7), 6–4, 6–4, 7–5 |
வெற்றி | 2022 | பிரெஞ்சு ஓப்பன் | களிமண் | காஸ்பர் ரூட் | 6-3, 6-3, 6-0 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "Rafael Nadal". ATP Tour. பார்க்கப்பட்ட நாள் 13 September 2021.
- ↑ "Marc Lopez joins Rafael Nadal's coaching team".
- ↑ "ATP Prize Money Leaders" (PDF).
- ↑ 4.0 4.1 "Rafael Nadal", Biography (in அமெரிக்க ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2018-04-18
- ↑ "ATP Rankings". atptour.com. பார்க்கப்பட்ட நாள் 6 சூன் 2022.
- ↑ "Why is Rafael Nadal known as 'The King of Clay? - Quora", www.quora.com (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2018-04-18
- ↑ "Andre Agassi tabs Nadal No. 1". ESPN. பார்க்கப்பட்ட நாள் 8 May 2014.
- ↑ "Rafael Nadal wins record-breaking 21st Grand Slam with five-set victory". cbssports.com. பார்க்கப்பட்ட நாள் 31 சனவரி 2022.
- ↑ "Male tennis players with the most Grand Slam tournament titles won as of January 2022". statista.com. பார்க்கப்பட்ட நாள் 31 சனவரி 2022.
- ↑ "நடால் தான் கிங்: பிரெஞ்ச் ஓபனில் மீண்டும் மகுடம்". யாகூ செய்திகள்/ தினமலர். 9 சூன் 2014. பார்க்கப்பட்ட நாள் 9 சூன் 2014.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Awards 2011". Laureus World Sports Awards. http://www.laureus.com/awards/2011. பார்த்த நாள்: 13 August 2014.
- ↑ 12.0 12.1 Levine, Daniel S. (2017-01-28), "Rafael Nadal's Family: 5 Fast Facts You Need to Know", Heavy.com (in அமெரிக்க ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2018-04-18
{{citation}}
: no-break space character in|title=
at position 48 (help) - ↑ Clarey, Christopher (6 June 2005). "Rafael Nadal, Barely 19, He's Got Game, Looks and Remarkably Good Manners". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/2005/06/06/sports/tennis/06nadal.html. பார்த்த நாள்: 5 April 2010.
- ↑ "Sportsround meets Rafael Nadal". BBC Sports. 11 November 2006. http://news.bbc.co.uk/cbbcnews/hi/newsid_6130000/newsid_6135900/6135996.stm. பார்த்த நாள்: 6 April 2010.
- ↑ Rajaraman, Aarthi (1 சூன் 2008). "At Home with Humble yet Ambitious Nadal". Inside Tennis. Archived from the original on 9 சூன் 2010. பார்க்கப்பட்ட நாள் 5 ஏப்பிரல் 2010.
- ↑ 16.0 16.1 Kervin, Alison (23 April 2006). "The Big Interview: Rafael Nadal". The Sunday Times (London). http://www.timesonline.co.uk/tol/sport/article708386.ece. பார்த்த நாள்: 5 April 2010.