மயோர்க்கா
![]() மயோர்க்காவின் கொடி | |
புவியியல் | |
---|---|
அமைவிடம் | நடுநிலக் கடல் |
ஆள்கூறுகள் | 39°37′N 2°59′E / 39.617°N 2.983°E |
தீவுக்கூட்டம் | பலேரிக் தீவுகள் |
மொத்தத் தீவுகள் | 5 |
முக்கிய தீவுகள் | பலேயரிக் தீவுகள் |
பரப்பளவு | 3,640.11 km2 (1,405.45 sq mi) |
உயர்ந்த ஏற்றம் | 1,436 m (4,711 ft) |
உயர்ந்த புள்ளி | பூயூக் மலை |
நிர்வாகம் | |
எசுப்பானியா | |
மாகாணம் | பலேரிக் தீவுகள் |
மக்கள் | |
Demonym | மஜோர்கன் |
மக்கள்தொகை | 920,605[1] |
அடர்த்தி | 252.91 /km2 (655.03 /sq mi) |
மயோர்க்கா (Majorca அல்லது Mallorca, எசுப்பானியம்: Mallorca [maˈʎorka])[2] நடுநிலக் கடலில் அமைந்துள்ளதோர் தீவாகும். இது எசுப்பானியாவின் பலேரிக் தீவுக்கூட்டத்தின் மிகப் பெரிய தீவாக உள்ளது.
இத்தீவின் தலைநகரமான பால்மா, தன்னாட்சியுடைய பலேரிக் சமுதாயத்திற்கும் தலைநகராக விளங்குகிறது. தவிரவும் காபரெரா தீவுக்கூட்டங்களும் மயார்க்காவுடன் நிர்வாகத்திற்காக சேர்க்கப்பட்டுள்ளன. மயோர்க்காவின் நாட்டுப்பண்ணாக லா பாலங்குரா விளங்குகிறது.
மினோர்க்கா, இபிசா, போர்மென்டெரா போன்ற மற்ற பலேரிக் தீவுகளைப் போலவே இத்தீவும் விடுமுறை மனமகிழ் தலமாக விளங்குகிறது; ஜெர்மனி, அயர்லாந்து, போலந்து, நெதர்லாந்து, எசுக்காண்டினாவிய நாடுகள் மற்றும் ஐக்கிய இராச்சியத்திலிருந்து சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இத்தீவின் பெயர் இலத்தீன் மொழியின் இன்சுலா மேஜர், "பெரியத் தீவு" என்பதிலிருந்து பெறப்பட்டுள்ளது; பின்னர் மயோரிக்கா, "பெரியதான ஒன்று" எதிர் மற்ற சிறிய தீவான மினோர்க்கா, "சிறியதான ஒன்று".
காட்சிக்கூடம்
[தொகு]-
லா சேவு, பால்மா கதீட்ரல்
-
பெல்வெர் கோட்டை
-
கூபர் மற்றும் கோர்கு பிளூ ஏரிகள், செர்ரா டெ டிராமுன்டானா
-
பூச் மேஜர், மயார்க்காவிலேயே உயரமான சிகரம்
-
வல்டெமோசா
-
சா கலோப்ரா, எசுகோர்க்கா
-
போர்மென்டர் பகுதி
-
பொலென்சா விரிகுடாவில் சூரியோதயம், பொலென்சா துறைமுகம்
-
சேசு சாலைன்சின் தொப்பி
-
காலா அகுல்லா
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ Instituto Nacional de Estadística, Madrid, 2021.
- ↑ Keenan, Steve (சூலை 6, 2009). "Mallorca v Majorca which is correct". The Times (London). http://www.timesonline.co.uk/tol/travel/your_say/article6651149.ece.
வெளி இணைப்புகள்
[தொகு]- Majorca's Moorish Memories - எரிக் டெ மாரே