உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/பரிந்துரைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பரிந்துரைகளுக்கான தகுதிகள்
  1. இங்கு பரிந்துரைக்கும் தகவல் தமிழ் விக்கிப்பீடியாவில் ஏதாவது ஒரு கட்டுரையில் இடம் பெற்றிருக்க வேண்டும். குறுங்கட்டுரையாக இருப்பினும் ஏற்றுக் கொள்ளப்படும்.
  2. பரிந்துரைக்கப்படும் தகவல் எந்தத் தலைப்புடன் (துறையுடன்) தொடர்புடையதோ அந்தத் தலைப்பின் (துறையின்) கீழாக இடம் பெறச் செய்ய வேண்டும்.
  3. தமிழ்/தமிழர் சார்ந்த தகவல் ஒன்று ஒவ்வொரு வாரமும் இடம் பெறுவதால் அது குறித்த பரிந்துரைக்கு ஒவ்வொரு வாரமும் முக்கியத்துவமளிக்கப்படுகிறது. பிற தலைப்புகளிலான தகவல்கள் காட்சிப்படுத்தப்படுவதில் சிறிது காலதாமதமாகலாம்.
  4. பரிந்துரைக்கும் தகவல் இதற்கு முன்பாகவே உங்களுக்குத் தெரியுமா? பகுதியில் இடம் பெற்றிருக்கக் கூடாது. எனவே, பரிந்துரைக்கும் தகவல் இதற்கு முன்பு இடம் பெறவில்லை என்பதை உங்களுக்குத் தெரியுமா? காப்பகம் மற்றும் அக்கட்டுரையின் பேச்சுப் பக்கத்தையும் பார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.
  5. பரிந்துரைக்கும் தகவல்கள் மாறுபட்ட செய்திகளைக் கொண்டதாக இருப்பது விரும்பப்படுகிறது. ஒரே செய்தியை அடிப்படையாகக் கொண்டதாக பல்வேறு தகவல்கள் இருக்கும் நிலையில் அதிலிருந்து ஒரு தகவல் மட்டும் காட்சிப்படுத்தப்படும். தொடர்புடைய பிற தகவல்கள் காட்சிப்படுத்தப்படுவதில் அதிகமான காலதாமதம் ஏற்படலாம் அல்லது காட்சிப்படுத்தாமலே விடப்படலாம்.
  6. பரிந்துரைக்கும் தகவலுக்கான மேற்கோள் அக்கட்டுரையில் இடம் பெற்றிருக்க வேண்டும்.
  7. பரிந்துரைக்கும் தகவலுக்கான படம் முக்கியத்துவம் பெற்றிருப்பின் அதற்கான படத்தையும் பரிந்துரையில் இணைக்கலாம்.
  8. தகவல் சுருக்கமாகவும் (1-2 வரிகள்), தெளிவாகவும் இருக்க வேண்டும்.
  9. முறையான வசன அமைப்புத் தேவை (எழுவாய், பயனிலை).

குறிப்பு: தடித்த எழுத்துக்கள் உள்ள தகுதிகள் கட்டாயமனவை.



தமிழர், தமிழ் சார்ந்தவை

[தொகு]

அறிவியல்

[தொகு]

கணிதம்

[தொகு]

தொழினுட்பம்

[தொகு]
  • பொது மக்கள் பயன்பாட்டுக்காக அணு சக்தியைப் பயன்படுத்திய முதல் நாடு உருசியா ஆகும்.

உயிரியல்

[தொகு]
  • உலகில் பறக்கக்கூடிய பறவைகளில் எடை மிகுந்தது கானமயில் ஆகும்.
  • மதுரை வாலாட்டிப்பாம்பு மேற்குத்தொடர்ச்சி மலைகளின் தென்பகுதியில் பழநி மலைத்தொடர் உள்ளிட்ட சில இடங்குகளில் மட்டுமே காணும் உள்ளக விலங்கு.

இயற்பியல்

[தொகு]

வேதியியல்

[தொகு]

பொறியியல் & கட்டிடக் கலை

[தொகு]
  • தானியங்கி எழுதுகோல்: ஒரு மனிதரின் கையொப்பத்தை நகலெடுத்து இடுவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு இயந்திர சாதனமாகும்.

வானியல், அண்டவியல், புவியியல்

[தொகு]
  • ரூப் குண்டம், இமயமலையின் பனி சூழ்ந்த நந்த குந்தி மலை மற்றும் திரிசூலி மலையடிவாரத்திற்கு இடையே அமைந்த மிகச்சிறிய ஏரி ஆகும். இந்த ஏரியைச் சுற்றிலும் பனிமலைகள் சூழ்ந்த இந்த ரூப் குண்டத்தை உள்ளூர் மக்கள் மர்ம ஏரி அல்லது எலும்புக் கூடு ஏரி என்று அழைப்பர்.
  • சியாகி முகாய் என்ற யப்பானியப் பெண் மருத்துவரே வெண்வெளிப் பயணம் மேற்கொண்ட முதல் ஆசியப் பெண் ஆவார்.
  • பந்து மின்னல் - ஒரு ஒளிரும் மின்னல் பந்து ஆகும். இது சில நேரங்களில் இடியுடன் கூடிய மழைக் காலத்திலும் தோன்றும். ஆனால் பொதுவாக இது மின்னலை விட நீண்ட நேரம் நீடிக்கும் தன்மை உடையது.

மருத்துவம்

[தொகு]
  • கல் குழந்தை - ஒரு கரு, பெண்ணின் கர்ப்ப காலத்தில் இறந்துவிடுவதால், ஒரு அயல் பொருள் எதிர்வினையின் ஒரு பகுதியாக, கருவின் வெளிப்புறம் கால்சியம் படிந்து படிப்படியாக கல்லாக மாறுகிறது. இது தாயின் உடலை இறந்த கருவின் திசுக்களிலிருந்து பாதுகாத்து நோய்த் தொற்றிலிருந்து தடுக்கிறது.

மொழியியல்

[தொகு]
  • எம். கே. மேனன் எழுதிய அவகாசிகள் என்ற புதினமே இந்திய மொழிகளில் நீளமான புதினமாகும்.

திரைத்துறை

[தொகு]

சமயம் / மெய்யியல் / தத்துவம்

[தொகு]
  1. வில்லியம் தொபியாஸ் ரிங்கல்தௌபே என்பவர் தென்னிந்தியாவின் முதல் சீர்திருத்தத் திருச்சபை மறைப்பணியாளர் ஆவார்.
  2. நடுத்தலை முடியை மழித்தல், துவக்க கால கிரேக்க-உரோமானிய கத்தோலிக்க பாதிரியார்கள் மற்றும் அருட்சகோதரிகள் தங்களின் சமய பக்தி அல்லது பணிவின் அடையாளமாக உச்சந்தலை நடுவில் உள்ள முடிகளை வட்டமாக மழித்துக் கொள்வர். 1972ஆம் ஆண்டில் திருத்தந்தை தலைமுடியை மழித்தல் என்பது அடிமுறைக்கு அடையாளம் எனக்கருதி நடுத்தலைமுடியை மழித்தலுக்குத் தடை விதித்தார்.
  3. கிஸ்வா என்பது இசுலாமியர்களின் புனித தலமான சவூதி அரேபியா நாட்டின் மெக்கா நகரத்தில் உள்ள பெரிய பள்ளிவாசலில் உள்ள கஃபா மீது ஆண்டுதோறும் போர்த்துவதற்கு பயன்படுத்தப்படும் திரைச்சீலை ஆகும்

விளையாட்டு

[தொகு]

பண்டைய வரலாறு

[தொகு]

வரலாறு, நாடுகள், அரசியல், அமைப்பு

[தொகு]
  • இந்தியாவின் நிலப்பரப்பில் ஆட்சிசெய்த ஒரே கத்தோலிக்க ஆட்சியாளர் பேகம் சம்ரு ஆவார்.

கலைகள், பண்பாடு, தொல்லியல்

[தொகு]

பறப்பியல்

[தொகு]

சமூகம்

[தொகு]
  • நுஜூத் அலி உலகில் மிகச்சிறிய வயதில் (10 வயதில்) மணமுறிவு பெற்ற பெண்

அரசியல்

[தொகு]
  • மக்களை கவரும் கொள்கை என்பது அரசியல் கட்சிகள் தேர்தல் மூலம் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக மக்களைத் தூண்டும் செயலாகும்.

சிஞ்சியாங் தடுப்பு முகாம்கள், இதனை சீனாவின் முறைசாரா முறையிலான சின்ஜியாங் வதை முகாம்கள் என்றும் அழைக்கப்படுகிறது.

பிற

[தொகு]