உள்ளடக்கத்துக்குச் செல்

சாம்பல் உப்புக் கொத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாம்பல் உப்புக் கொத்தி
Adult in breeding plumage
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
சரத்ரிடே
பேரினம்:
இனம்:
P. squatarola
இருசொற் பெயரீடு
Pluvialis squatarola
(லின்னேயஸ், 1758)
ஆங்கில மொழி: Geographical distribution of Grey Plover.
  Breeding
  Migration
  Nonbreeding
வேறு பெயர்கள்

Tringa squatarola Linnaeus, 1758

பிப்ரவரி 2016 இல் இந்தியாவின் மகாராட்டிரத்தில் உள்ள அர்னாலா, விராரில் சாம்பல் உப்புக் கொத்தி

சாம்பல் உப்புக்கொத்தி (Grey plover) என்பது ஆர்க்டிக் பகுதிகளில் இனப்பெருக்கம் செய்வதும், உலகத்தின் எல்லாப் பகுதிகளுக்கும் தொடர்புடைய ஒரு உப்புக்கொத்தி ஆகும். இது நீண்ட தூரம் வலசை போகும் இனமாகும். இனப்பெருக்கம் செய்யாத காலத்தில் கிட்டத்தட்ட உலகம் முழுவதும் கடலோரங்களில் காணப்படுகிறது.

வகைபிரித்தல்[தொகு]

1758 ஆம் ஆண்டில் சுவீடிய இயற்கை ஆர்வலர் கரோலஸ் லின்னேயஸ் தனது சிஸ்டமா நேச்சுரேயின் பத்தாவது பதிப்பில் டிரிங்கா ஸ்குவாடரோலா என்ற இருசொல் பெயரில் சாம்பல் உப்புக் கொத்தியை விவரித்தார். இது இப்போது 1760 இல் பிரெஞ்சு ஓனிதாலஜிஸ்ட் மாதுரின் ஜாக் பிரிஸனால் அறிமுகப்படுத்தப்பட்ட ப்ளூவியாலிஸ் பேரினத்தைச் சேர்ந்த மற்ற மூன்று உப்புக் கொத்திகளுடன் வைக்கப்பட்டுள்ளது.[2] பேரினத்தின் பெயர் இலத்தீன் மற்றும் ப்ளூவியா,வில் " மழை " என்ற சொல் தொடர்பானது. மழை வரும்போது இவை திரளும் என்ற நம்பக்கை இருந்தது குறிப்படத்தக்கது. ஸ்க்வாடரோலா என்று குறிப்பிட்ட இனத்தின் பெயர் ஸ்கடரோலாவின் இலத்தீன் மயமாக்கப்பட்ட சொல்லாகும். இது ஒருவித உப்புக்கொத்தியின் வெனிஸ் பெயராகும்.

இந்த இனத்திற்குப் பயன்படுத்தப்படும் ஆங்கிலப் பொதுப் பெயர் உலகின் பல்வேறு பகுதிகளில் வேறுபடுகிறது. இது பொதுவாக பழைய உலகில் "கிரே ப்ளோவர்" என்றும், புதிய உலகில் "பிளாக்-பில்லிடு பிளவர்" என்றும் அழைக்கப்படுகிறது.[3]

இதில் மூன்று துணையினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன:[2]

  • P. s. squatarola (லின்னேயஸ், 1758) - வடக்கு யூரேசியா மற்றும் அலாஸ்காவில் இனப்பெருக்கும் செய்பவை; மேற்கு, தெற்கு ஐரோப்பா, ஆப்பிரிக்கா, தெற்கு, கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா மேற்கு அமெரிக்காவில் இனப்பெருக்கம் செய்யாமல் வந்து செல்பவை
  • P. s. tomkovichi ஏங்கல்மோயர் & ரோசெலார், 1998 - ரேங்கல் தீவில் (வடகிழக்கு சைபீரியா) இனப்பெருக்கம் செய்பவை
  • P. s. cynosurae (தாயர் & பேங்ஸ், 1914) - வடக்கு கனடாவில் இனப்பெருக்கம் செய்கின்றன; கடலோர வடக்கு மற்றும் தென் அமெரிக்கா முழுவதும் இனப்பெருக்கம் செய்யாமல் வந்து செல்பவை

விளக்கம்[தொகு]

சாம்பல் உப்புக் கொத்தி 27–30 cm (11–12 அங்) நீளமும், 71–83 cm (28–33 அங்) இறக்கைகளுடன் அகலமும், 190–280 g (6.7–9.9 oz) எடையும் ( 345 g (12.2 oz) வரை வலசை பேவதற்காக உடல் தயாராதலில்). வசந்த காலத்திலும் கோடைகாலத்திலும் (ஏப்ரல் பிற்பகுதியில் அல்லது மே முதல் ஆகத்து வரை), பெரிய பறவைகளின் பின்புறம் மற்றும் இறக்கைகள் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் காணப்படும். முகமும், கழுத்தும் வெள்ளை பட்டையுடன் கருப்பு; அவற்றின் கருப்பு நெஞ்சு மற்றும் வயிறில் ஒரு வெள்ளை கறை இருக்கும். வால் கருப்பு நிற கோட்டுடன் வெண்மையாக இருக்கும். அலகும், கால்களும் கருப்பு. இவை ஆகத்து நடுப்பகுதியில் இருந்து செப்டம்பர் தொடக்கத்தில் குளிர்கால உடல் நிறத்துக்கு மாறி ஏப்ரல் வரை அந்த நிறத்தில் தொடர்கின்றன. குளிர்காலத்தில் வலசை வரும்போது இதன் தோற்றம்; நெற்றி கரும்புள்ளிகளோடு கூடிய வெண்மை நிறத்தில் இருக்கும். தலையின் பக்கங்களும் கழுத்தும் பழுப்பு நிறக் கோடுகளோடு கூடிய வெண்மை நிறத்தில் இருக்கும். பின் முதுகு, வாலடி இறகுகள், வால் ஆகியன வெண்மையாக பழுப்பு குறுக்குப் பட்டைகளோடு காணப்படும். உடலின் மற்ற மேல் பகுதிகள் ஆழ்ந்த புழுப்பாக வெளிர் பழுப்புச் சாம்பல் நிறக் கோடுகளுடன் காணப்படும். மார்புப் பக்கங்களும் பழுப்புக் கோடுகளோடும் பழுப்புப் புள்ளிகளோடும் காணப்படும். வயிறும் வாலடியும் தூய வெண்மையாக இருக்கும்.[4][5]

இனப்பெருக்கமும் வலசையும்[தொகு]

இவற்றின் இனப்பெருக்க வாழ்விடம் ஆர்க்டிக் தீவுகள் மற்றும் அலாஸ்கா, கனடா மற்றும் உருசியாவின் வடக்கு கடற்கரை முழுவதும் உள்ள கடலோரப் பகுதிகள் ஆகும். இவை நன்கு பார்வையில் படத்தக்கதான உலர்ந்த திறந்த வெளி தூந்திரவெளியில் தரையில் கூடு கட்டுகின்றன; கூடு ஆழமற்ற சரளைப் பள்ளம் ஆகும். சூன் துவக்கத்தில் நான்கு முட்டைகள் (சில நேரங்களில் மூன்று மட்டுமே) இடுகின்றன. 26-27 நாட்கள் அடைகாக்கும் காலம் ஆகும். குஞ்சுகள் 35-45 நாட்களில் பறக்கும் திறனைப் பெறும்.[4][5]

குளிர்காலத்தில் இவை உலகெங்கிலும் உள்ள கடலோரப் பகுதிகளுக்கு வலசை போகின்றன. புதிய உலகில் இவை தென்மேற்கு பிரிட்டிசு கொலம்பியா மற்றும் மாசசூசெட்சிலிருந்து தெற்கே அர்கெந்தீனா மற்றும் சிலி வரையிலும், மேற்கு பழைய உலகில் அயர்லாந்து மற்றும் தென்மேற்கு நோர்வேயிலிருந்து தெற்கே கடலோர ஆப்பிரிக்கா முழுவதும் தென்னாப்பிரிக்கா வரையிலும், கிழக்கு பழைய உலகில், தெற்கு யப்பானில் இருந்து தெற்கே கடலோர தெற்கே, கடலோர ஆசியா மற்றும் ஆத்திரேலியா முழுவதும், சில பறவைகள் நியூசிலாந்தையும் அடைகின்றன. ஆத்திரேலியாவிற்கு வலசை செல்பவற்றில் பெரும்பாலானவை பெண் பறவைகளே. இவை ஆசியா, ஐரோப்பா, வட அமெரிக்கா மீது பொதுவாக தொடர்ந்து பறக்கின்றன. ஆனால் பெரும்பாலும் கண்டங்களின் உட்பகுதிகளின் தரைப் பகுதிகளில் அரிதாக அலைந்து திரிகின்றன, கடுமையான வானிலையால் கீழே தள்ளப்பட்டால் அல்லது கடற்கரை போன்றவற்றில் உணவு உண்ண மட்டுமே எப்போதாவது தரையிறங்கும். அமெரிக்கப் பேரேரிகள் போன்ற மிகப் பெரிய ஏரிகளின் கரைகளுக்கு, இது பொதுவாக வலசை வருகிறது.[4][5][6]

நடத்தையும் சூழலியலும்[தொகு]

இனப்பெருக்கம்[தொகு]

இளம் பறவைகள் இரண்டு வயது வரை இனப்பெருக்கம் செய்யாது. அவை பொதுவாக இரண்டாவது கோடை வரை குளிர்கால உடலமைப்பில் இருக்கும்.[4][5]

உணவு[தொகு]

இவை கடற்கரைகள் மற்றும் ஒத அடுக்கு போன்றவற்றில் பொதுவாக பார்வையால் உணவைத் தேடுகின்றன. இவற்றின் உணவில் சிறிய மெல்லுடலிகள், புழுக்கள், ஓடுடைய கணுக்காலிகள் பூச்சிகள் போன்றவை உள்ளன. இவை மற்ற ப்ளூவியாலிஸ் இனங்களை விட குறைவாகவே கூட்டமாக காணப்படுகின்றன. அடர்த்தியான கூட்டமாக திரளாமல், கடற்கரைகளில் பரவலாக பரவி, நல்ல இடைவெளியில் உணவு தேடுகின்றன.[4][5]

நிலை[தொகு]

பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் சாம்பல் உப்புக் கொத்திகளை " தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் " என்ற பட்டியலில் சேர்த்துள்ளது.[1] ஆப்பிரிக்க-யூரேசிய வலசை போகும் நீர்ப்பறவைகளின் பாதுகாப்பு ஒப்பந்தம் பொருந்தக்கூடிய பறவை இனங்களில் இவையும் உள்ளன.[7]

காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 BirdLife International (2019). "Pluvialis squatarola". IUCN Red List of Threatened Species 2019: e.T22693749A154513104. doi:10.2305/IUCN.UK.2019-3.RLTS.T22693749A154513104.en. https://www.iucnredlist.org/species/22693749/154513104. பார்த்த நாள்: 11 November 2021. 
  2. 2.0 2.1 Gill, Frank; Donsker, David; Rasmussen, Pamela, eds. (July 2021). "Sandpipers, snipes, coursers". IOC World Bird List Version 11.2. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 20 November 2021.
  3. Poole, A. F.; Pyle, P.; Patten, M. A.; Paulson, D. R. "Black Bellied Plover". Birds of the World. Cornell Lab of Ornithology. பார்க்கப்பட்ட நாள் 23 September 2020.
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 Hayman, P.; Marchant, J.; Prater, T. (1986). Shorebirds. Croom Helm. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7099-2034-2.
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 Snow, D.W.; Perrins, C.M. (1998). The Birds of the Western Palearctic (Concise ed.). Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-854099-X.
  6. Dickinson, M.B.; et al., eds. (1999). Field Guide to the Birds of North America. National Geographic. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7922-7451-2.
  7. "Species". Agreement on the Conservation of African-Eurasian Migratory Waterbirds (AEWA). பார்க்கப்பட்ட நாள் 14 November 2021.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Pluvialis squatarola
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாம்பல்_உப்புக்_கொத்தி&oldid=3929720" இலிருந்து மீள்விக்கப்பட்டது