சுத்தியல்
Appearance
சுத்தியல் பொருட்களை அடிப்பதற்குப் பயன்படும் ஒரு கருவி ஆகும். இதன் முதன்மையான பயன்கள், ஆணி அடித்தல், ஒரு பொருளின் பகுதிகளைப் பொருத்துதல், பொருட்களை உடைத்தல் போன்றவையாகும். பெரிய சுத்தியல் சம்மட்டி எனப்படும்.
சுத்தியலைக் கைகளாலோ இயந்திரங்களாலோ இயக்கலாம். இது மனிதன் பயன்படுத்திய பழங்கருவிகளில் ஒன்று ஆகும். சுத்தியல்கள் ஆயுதங்களாகவும் பயன்படுகின்றன.