புடு மான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Euteleostomi
புடு மான்
புதைப்படிவ காலம்:பிலிசுடோசின் – அண்மை
தெற்கு புடு (P. puda)
உயிரியல் வகைப்பாடு e
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: இரட்டைப்
படைக்குளம்பி
குடும்பம்: மான்
துணைக்குடும்பம்: புதிய உலக
மான்
இனக்குழு: Odocoileini
பேரினம்: Pudu
கிரே, 1852
மாதிரி இனம்
Capra puda
Molina, 1782
Species

Pudu puda (Molina, 1782)[1][2]
Pudu mephistophiles (de Winton, 1896)[3]

தெற்கு புடு வாழும் பகுதி
வடக்கு புடு வாழும் பகுதி
வேறு பெயர்கள்

Pudua Garrod, 1877
Pudella Thomas, 1913

புடு மான்கள் (Pudu, எசுப்பானியம்: pudú ) என்பவை புடு பேரினத்தைச் சேர்ந்த தென் அமெரிக்க மான்களின் இரண்டு இனங்கள் மற்றும் உலகின் மிகச் சிறிய மான்கள் ஆகும். [4] சருகுமான்கள் சிறியவை, என்றாலும் அவை உண்மையில் மான்கள் அல்ல. நடு சிலி மற்றும் தென்மேற்கு அர்ஜென்டினாவின் பழங்குடி மக்களான மாப்புச்சிக்களின் மொழியான மாபுடுங்கன் மொழியிலிருந்து பெறப்பட்ட கடன்சொல் இதுவாகும். [5] புடுவின் இரண்டு இனங்களில் வெனிசுவேலா, கொலம்பியா, எக்குவடோர், பெரு ஆகிய இடங்களில் வாழக்கூடியன வடக்கு புடு ( புடு மெஃபிஸ்டோபில்ஸ் ) என்றும், தெற்கு சிலி மற்றும் தென்மேற்கு அர்கெந்தீனா பகுதிகளில் வாழக்கூடியவை தெற்கு புடு [6] ( புது புடா ; சில சமயங்களில் புது புடு என தவறாக கூறப்படுகிறது [7] ) ஆகும். புடுக்கள் 32 முதல் 44 சென்டிமீட்டர் (13 முதல் 17 அங்குலம்) உயரமும், 85 சென்டிமீட்டர் (33 அங்குலம்) வரை நீளமும் கொண்டவை. [8] தெற்கு புடு மான்கள் அச்சுறுத்தலுக்கு அண்மித்த இனம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. வடக்கு புடு செம்பட்டியலில் தரவு குறைபாடு என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

வகைபிரித்தல்[தொகு]

புடு பேரினமானது 1850 இல் ஆங்கிலேய இயற்கை ஆர்வலர் ஜான் எட்வர்டு கிரே என்பவரால் முதன்முதலில் வகைப்படுத்தப்பட்டது. புடுவா என்பது 1877 இல் ஆல்ஃபிரட் ஹென்றி கரோட் என்பவரால் முன்மொழியப்பட்ட பெயரின் லத்தீன் மயமாக்கப்பட்ட பதிப்பாகும், ஆனால் அது செல்லாது என்று முடிவெடுக்கபட்டது. புது உலக மான் துணைக் குடும்பமான கேப்ரோலினேயில் செர்விடே என்ற மான் குடும்பத்தில் புடுகள் வகைப்படுத்தப்படுகின்றன. "புடு" என்ற பெயர் தென்-நடு சிலியின் லாஸ் லாகோஸ் பிராந்தியத்தைச் சேர்ந்த மாப்புச்சி மக்களின் மொழியிலிருந்து பெறப்பட்டது. [5] ஆந்தீசு மலைத்தொடரின் சரிவுகளில் வசிப்பதால், இவை "சிலி மலை ஆடுகள்" என்றும் அழைக்கப்படுகின்றன. [9]

இவற்றில் இரண்டு இனங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன:

படம் அறிவியல் பெயர் பொது பெயர் பரவல் விளக்கம்
புது புடா தெற்கு புடு சிலி மற்றும் அர்கெந்தீனாவின் தெற்கு அந்தீசு மலைத்தொடர் அதன் சகோதரி இனமான வடக்கு புடுவை விட சற்று பெரியது. தோளி வரையான உயரம் 35 முதல் 45 செமீ (14 முதல் 18 அங்குலம்) இருக்கும். மேலும் 6.4 முதல் 13.4 கிலோ (14 முதல் 30 பவுண்ட்) எடை கொண்டது. [10] தெற்கு புடுவின் கொம்புகள் 5.3 முதல் 9 செமீ (2.1 முதல் 3.5 அங்குலம்) நீளம் வரை வளரும் மற்றும் மலை ஆடு போல, பின்னால் வளைந்திருக்கும். அதன் தோல் அடர் பழுப்பு நிறத்தில் இருக்கும். [11] இது கடல் மட்டத்திலிருந்து 2,000 மீ (6,600 அடி) வரை, அதன் சகோதரி இனத்தை விட குறைந்த உயரத்தில் காணப்படுகிறது.
புது மெஃபிஸ்டோபில்ஸ் வடக்கு புடு தோள் வரை 32 முதல் 35 செமீ (13 முதல் 14 அங்குலம்) உயரமும், 3.3 முதல் 6 கிலோ (7.3 முதல் 13.2 பவுண்டு) எடையும் கொண்ட உலகின் மிகச்சிறிய வகை மான் இனம் இது. வடக்கு புடுவின் கொம்புகள் சுமார் 6 செமீ (2.4 அங்குலம்) நீளம் வரை வளரும், மேலும் பின்னோக்கி வளைந்திருக்கும். அதன் தோல் தெற்கு புடுவின் நிறத்தை விட மங்கியதாக இருக்கும், ஆனால் உடல் நிறத்தை ஒப்பிடும்போது முகம் கருமையாக இருக்கும். [10] இது கடல் மட்டத்திலிருந்து 2,000 முதல் 4,000 மீ (6,600 முதல் 13,100 அடி) வரை, அதன் சகோதரி இனங்களை விட அதிக உயரத்தில் காணப்படுகிறது.

விளக்கம்[தொகு]

புடுமான்கள் உலகின் மிகச் சிறிய மான்கள் ஆகும். தெற்கு புடு வடக்கு புடுவை விட சற்று பெரியதாகும். [4] இதன் கால்கள் குட்டையாகவும், மெல்லியதாகவும் இருக்கும். இதன் உடல் பன்றிபோன்ற தோற்றம் கொண்டது. இதன் உயரம் சராசரியாக 32 முதல் 44 செமீ (13 முதல் 17 அங்குலம்) என தோள் வரை இருக்கும். இதன் உடல் நீளம் 85 செமீ (33 அங்குலம்) இருக்கும். புடுகள் பொதுவாக 12 கிலோ (26 பவுண்டுகள்) வரை எடையுள்ளதாக இருக்கும். [8] ஆனால் புடுவின் அதிகபட்ச பதிவு செய்யப்பட்ட எடை 13.4 கிலோ (30 பவுண்டு) ஆகும். [5] புடுகளுக்கு சிறிய, கருப்பு கண்களும், [4] கருப்பு மூக்கும், 7.5 முதல் 8 செமீ (3.0 முதல் 3.1 அங்குலம்) நீளம் கொண்ட வட்டமான காதுகளைக் கொண்டுள்ளன. இந்த இனங்களில் பால் ஈருருமை என்பது பெண் மான்களுக்கு கொம்புகள் இல்லாததை நிலையையும் உள்ளடக்கியது. பெரும்பாலான மான் வகைகளில் காணப்படுவது போல், இவற்றில் ஆண் மான்களுக்குக் குட்டையான, கூர்முனை கொண்ட கொம்புகள் உள்ளன. இக்கொம்புகள் ஆண்டுதோறும் உதிர்கின்றன. [12] கொம்புகள் 6.5 முதல் 7.5 செமீ (2.6 முதல் 3.0 அங்குலம்) வரை நீளமாக காதுகளுக்கு இடையே நீண்டு சென்றிருக்கும். [8] மேலும் தலையில் பெரிய ப்ரீஆர்பிட்டல் சுரப்பிகள் எனும் கண் சுரப்பிகள் உள்ளன. புடுகளுக்கு சிறிய குளம்புகளும், சுவட்டுநகமும் உள்ளன. இவற்றிற்கு குட்டையான வால் உண்டு, அதை முடி இல்லாமல் அளவிடும் போது 4.0 முதல் 4.5 செமீ (1.6 முதல் 1.8 அங்குலம்) நீளம் கொண்டதாக இருக்கும். உடல் நிறம் பருவம், பாலினம் மற்றும் தனிப்பட்ட மரபணுக்களைப் பொறுத்து மாறுபடும். இவற்றிற்கு உரோமங்கள் நீளமாகவும் விறைப்பாவும் பொதுவாக உடலுக்கு ஒட்டியதாக, சிவப்பு-பழுப்பு முதல் அடர்-பழுப்பு நிறத்தில் இருக்கும். [13] குளிர்காலத்தில் வயதான புடுவின் கழுத்து மற்றும் தோள்கள் அடர் சாம்பல்-பழுப்பு நிறமாக மாறும். [8]

வாழ்விடம் மற்றும் பரவல்[தொகு]

தெற்கு புடுவில் ஆண் மான்; லாஸ் லாகோஸ் பிராந்தியம்

புடு தென் அமெரிக்காவில் உள்ள மிதவெப்ப மண்டல மழைக்காடுகளில் வசிக்கின்றன. அங்கு அடர்ந்துள்ள மரமடிபுதர்கள் மற்றும் மூங்கில் புதர்கள் போன்றவை வேட்டைக்காரர்களிடமிருந்து இவற்றிற்கு பாதுகாப்பை அளிக்கின்றன. [14] தெற்கு சிலி, தென்மேற்கு அர்ஜென்டினா, சிலோ தீவு, வடமேற்கு தென் அமெரிக்கா ஆகியவை இந்த மான்களின் தாயகமாகும். [5] [8] வடக்கு புடு மான்கள், கொலம்பியா, வெனிசுலா, ஈக்வடார் மற்றும் பெருவின் வடக்கு ஆண்டிசில் கடல் மட்டத்திலிருந்து 2,000 முதல் 4,000 மீ (6,600 முதல் 13,100 அடி) உயரத்தில் காணப்படுகின்றன. தெற்கு இனங்கள் தெற்கு ஆண்டிசின் மலைச் சரிவில் கடல் மட்டத்திலிருந்து 2,000 மீ (6,600 அடி) வரையிலான பகுதியில் காணப்படுகின்றன. .

குறிப்புகள்[தொகு]

 1. Molina, Giovanni Ignazio (1782). "Il Pudu, Capra Puda". Saggio sulla storia naturale del Chili. Bologna: S. Tommaso d'Aquino. பக். 308–309. https://www.biodiversitylibrary.org/page/41028103. 
 2. Molina, J. Ignatius (1809). The Geographical, Natural, and Civil History of Chili. Longman. பக். 256. https://archive.org/details/geographicalnat00unkngoog. 
 3. de Winton, W. E. (1896). "On some Mammals from Ecuador". Proceedings of the Zoological Society of London 64 (2): 508–512. doi:10.1111/j.1096-3642.1896.tb03055.x. https://www.biodiversitylibrary.org/page/31032112. 
 4. 4.0 4.1 4.2 "Southern Pudu". Animal Planet. 2009. Retrieved 19 September 2009.
 5. 5.0 5.1 5.2 5.3 Benirschke, Kurt (2004). "Chilean (Southern) Pudu". University of California, San Diego. Retrieved 17 September 2009.
 6. Huffman, Brent (2006). "Southern Pudu". Archived from the original on 2009-04-06. Retrieved 2009-09-17.
 7. Hershkovitz, Philip (1982).
 8. 8.0 8.1 8.2 8.3 8.4 Schürer, Ulrich (1986). "Pudu pudu" (PDF). Convention on International Trade in Endangered Species of Wild Fauna and Flora. Archived from the original (PDF) on 13 அக்டோபர் 2013. Retrieved 17 September 2009.
 9. "Fauna of Patagonia: rainforest fauna – Chile". Elavellano Lodge. Archived from the original on May 15, 2008. Retrieved 19 September 2009.
 10. 10.0 10.1 Geist, Valerius (September 1998). Deer of the World: Their Evolution, Behaviour, and Ecology. Stackpole Books. பக். 119–121. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8117-0496-0. https://books.google.com/books?id=bcWZX-IMEVkC&q=pudu+deer+behavior&pg=PA119. 
 11. "Forest South America". Animal Welfare Institute. Archived from the original on 2009-02-18. Retrieved 20 September 2009.
 12. "Southern Pudu". Bristol Zoo. Archived from the original on 30 May 2009. Retrieved 19 September 2009.
 13. "Annual secretional activity of the skin glands in the Southern pudu (Pudu puda Molina 1782, Cervidae)". Mammalian Biology 73 (5): 392–95. 2007. doi:10.1016/j.mambio.2007.10.006. 
 14. "Southern Pudu". Environment Agency – Abu Dhabi. Arkive – Images of Life on Earth. Archived from the original on 2009-02-02. Retrieved 19 September 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புடு_மான்&oldid=3777648" இலிருந்து மீள்விக்கப்பட்டது