மாப்புச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாபுச்சி
Mapuche
அரௌகானிய தத்துவவாதிகளின் சபை, 1904
மொத்த மக்கள்தொகை
c. 1,950,000
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
சிலி1,745,147 (2017)[1]
அர்ஜெண்டினா205,009 (2010)[2]
மொழி(கள்)
சமயங்கள்
கத்தோலிக்க திருச்சபை, இவாங்கலிகாலிசம், பாரம்பரியம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
  • மையக் குழுக்கள்: போரோவனோ, குங்கோ, உலிச்சி, இலாப்குயிஞ்சு, மொலுச்சே, பிக்குஞ்சே, பிரோமாகே
  • அரௌகானிய குழுக்கள்: பெகுஞ்சே, பியுல்சே, இரேன்குயில், தெகூல்சே

மாப்புச்சி (Mapuche[3]) எனப்படுபவர்கள் இன்றைய படகோனியாவின் பகுதிகள் உட்பட, இன்றைய தென்-மத்திய சிலி, தென்மேற்கு அர்கெந்தீனாவின் பழங்குடி இனக்குழுவாகும். மாப்புச்சி என்ற சொல் ஒரு பொதுவான சமூக, சமய, பொருளாதாரக் கட்டமைப்பைப் பகிர்ந்து கொண்ட பல்வேறு குழுக்களைக் கொண்ட பரந்த அளவிலான இனத்தைக் குறிக்கிறது, அதே போல் மாப்புடுங்குன் மொழி பேசுபவர்களைப் போன்ற பொதுவான மொழியியல் பாரம்பரியத்தையும் கொண்டுள்ளது. இக்குழுவினரின் செல்வாக்கு ஒரு காலத்தில் அகோன்காகுவா பள்ளத்தாக்கிலிருந்து சிலோ தீவுக்கூட்டம் வரையும், பின்னர் கிழக்கு நோக்கி படகோனியாவின் ஒரு பகுதியை உள்ளடக்கிய புயல்மாப்பு வரை பரவியிருந்தது. இன்று இந்த இனக்குழு சிலியில் உள்ள பழங்குடி மக்களில் 80% க்கும் அதிகமாகவும், மொத்த சிலி மக்கள்தொகையில் சுமார் 9% ஆகவும் உள்ளது. மாப்புச்சிகள் குறிப்பாக அரொக்கானியா என்ற வரலாற்றுக் காலப்பகுதியில் குவிந்துள்ளனர். பலர் பொருளாதார வாய்ப்புகளுக்காக கிராமப்புறங்களில் இருந்து சான்டியாகோ புவெனசு ஐரிசு ஆகிய நகரங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "2017census". Censo2017.cl. Archived from the original on 2019-01-25. பார்க்கப்பட்ட நாள் 2019-03-01.
  2. "Censo Nacional de Población, Hogares y Viviendas 2010: Resultados definitivos: Serie B No 2: Tomo 1" (PDF). INDEC. p. 281. Archived from the original (PDF) on 8 December 2015. பார்க்கப்பட்ட நாள் 5 December 2015.
  3. "Mapuche". (Online). ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம்.  (Subscription or participating institution membership required.)

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
மாப்புச்சி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாப்புச்சி&oldid=3530448" இலிருந்து மீள்விக்கப்பட்டது