அடர் சுருட்டை வால் குரங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Sapajus|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
அடர் சுருட்டை வால் குரங்கு
Tufted capuchin[1]
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Sapajus
இனம்:
இருசொற் பெயரீடு
Sapajus apella
(லின்னேயஸ், 1758)
Subspecies

Sapajus apella macrocephalus

பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தால் பயன்படுத்தப்படும் வகைபிரிக்கபட்டுள்ள புவியியல் எல்லை
மேக்ரோசெபாலஸ் கிளையினங்களின் புவியியல் எல்லை
வேறு பெயர்கள்
  • Cebus apella Linnaeus, 1758
  • Simia apella Linnaeus, 1758
  • Simia fatuellus Linnaeus, 1766

அடர் சுருட்டை வால் குரங்கு, பழுப்பு சுருட்டைவால் குரங்கு, கருந்தலை சுருட்டைவால் குரங்கு (ufted capuchin also known as brown capuchin, black-capped capuchin, or pin monkey) என்பது தென் அமெரிக்கா மற்றும் கரிபியன் தீவுகளான டிரினிடாட் மற்றும் மார்கரிட்டாவரை காணப்புடும் ஒரு புதிய உலக முதனி ஆகும். பாரம்பரிய வரையறைகளின்படி, இது தென் நடு அமெரிக்காவின் மிகவும் பரவலான விலங்கினங்களில் ஒன்றாகும். கருப்பு-கோடுள்ள கபுச்சின், கருப்பு கபுச்சின், பொன் நிற-வயிறு கபுச்சின் ஆகியவற்றை ஒரு புதிய பேரினத்தில் தனித்தனி இனங்களாகக் கருத அண்மையில் பரிந்துரைக்கப்பட்டது. இதன் மூலம் அமேசான் படுகை மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் வாழும் அடர் சுருட்டை வால் குரங்குகளை திறம்பட வகைபடுத்தபட்டுள்ளது. இருப்பினும், பெரிய தலையுடைய கபுச்சின் ( S. a. macrocephalus ), முன்னர் ஒரு தனித்துவமான இனமாக வரையறுக்கப்பட்டது. இது அடர் சுருட்டை வால் குரங்கின் கிளையினமாக மறுவகைப்படுத்தப்பட்டது. இதனால் அடர் சுருட்டை வால் குரங்கின் வரம்பானது கிழக்கே பெரு மற்றும் எக்குவடோர் வரையும், தெற்கே பொலிவியா வரையும் விரிவுபடுத்துகிறது.[3]

அடர் சுருட்டை வால் குரங்கு ஒரு அனைத்துண்ணி விலங்காகும். இது பெரும்பாலும் பழங்கள், முதுகெலும்பில்லாத விலங்குகள் போன்றவற்றை உண்கிறது. இருப்பினும் இது சில நேரங்களில் சிறிய முதுகெலும்பிகளை (எ.கா. பல்லிகள், பறவை குஞ்சுகள்) மற்றும் பிற தாவர பாகங்களை உண்ணும். இவை, வெப்பமண்டல மற்றும் மித வெப்பமண்டல காடுகள், வறண்ட காடுகள், இரண்டாம் நிலை மழைக்காடுகள் உட்பட பல்வேறு வகையான பகுதிகளில் காணப்படுகின்றன.

மற்ற சுருட்டைவால் குரங்குகளைப் போலவே, இது ஒரு சமூக விலங்கு ஆகும். இதன் சமூகமானது ஆதிக்கம் செலுத்தும் ஆணால் வழிநடத்தப்படுகிறது. இதில் ஒரு குழுவானது 8 முதல் 15 நபர்களைக் கொண்டதாக இருக்கும். இவை 45 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடியன.

கருவிகள் பயன்படுத்துதல்[தொகு]

இவை அறிவாற்றல் மிக்க குரங்குகளாக கருதப்படுகின்றன. அடர் சுருட்டை வால் குரங்குகள் கருவிகளைப் பயன்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது. இவை தண்ணீரைப் பிடிக்க கொள்கலன்களைப் பயன்படுத்துவதையும், குச்சிகளை கருவிகளாக பயன்படுத்துவதையும் (கொட்டைகளைத் தோண்டுவதற்கு, பாகில் முக்குவதற்கு, எறும்புகளைப் பிடிப்பதற்கு, உணவை பெறுவதற்கு), சாறு உறிஞ்சுவதற்கு கடற்பாசிகளைப் பயன்படுத்துவதையும்,[4] கொட்டைகளை உடைக்க கற்களை சுத்தியலாக பயன்படுத்துவதையும் அவதானிக்க முடிந்தது.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Colin Groves (16 நவம்பர் 2005). Wilson, D. E., and Reeder, D. M. (eds). ed. Mammal Species of the World (3rd edition ). Johns Hopkins University Press. பக். 137. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-801-88221-4. http://www.bucknell.edu/msw3/browse.asp?id=12100263. 
  2. Boubli, J.P., Stevenson, P.R., Palacios, E., de la Torre, S., Ravetta, A.L., Messias, M.R., Carvalho, A.S. & Mittermeier, R.A. 2021. Sapajus apella (amended version of 2020 assessment). The IUCN Red List of Threatened Species 2021: e.T172351505A192594550. https://dx.doi.org/10.2305/IUCN.UK.2021-1.RLTS.T172351505A192594550.en. Downloaded on 26 August 2021.
  3. Lima, Marcela G. M.; Silva-Júnior, José de Sousa e; Černý, David; Buckner, Janet C.; Aleixo, Alexandre; Chang, Jonathan; Zheng, Jimmy; Alfaro, Michael E. et al. (2018-07-01). "A phylogenomic perspective on the robust capuchin monkey (Sapajus) radiation: First evidence for extensive population admixture across South America" (in en). Molecular Phylogenetics and Evolution 124: 137–150. doi:10.1016/j.ympev.2018.02.023. பன்னாட்டுத் தர தொடர் எண்:1055-7903. பப்மெட்:29545109. https://www.sciencedirect.com/science/article/pii/S1055790317304736. 
  4. Westergaard, G.C. (1995). "The subsistence technology of capuchins". International Journal of Primatology 16 (1): 899–906. doi:10.1007/BF02736075. 
  5. Ottoni, E.; Dogo de Resende, B.; Izar, P. (2005). "Watching the best nutcrackers: what capuchin monkeys (Cebus apella) know about others' tool-using skills". Animal Cognition 8 (4): 215–219. doi:10.1007/s10071-004-0245-8. பப்மெட்:15719240.