வாலாபி


வாலாபி என்பது கங்காரு போன்ற விலங்கு ஆகும். இது கங்காருவை விட வடிவத்திலும், எடையிலும் சிறியவையாகும்.[1] இது ஆஸ்திரேலியா மற்றும் நியூ கினியாவைச் சேர்ந்த ஒரு சிறிய அல்லது நடுத்தர அளவிலான கங்காரு போன்ற விலங்கு ஆகும்.தற்போது இவைகள் நியூசிலாந்து நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.[2] இவைகளின் தலை மற்றும் உடல் நீளம் 45 முதல் 105 செமீ (18 முதல் 41 அங்குலம்) மற்றும் வால் 33 முதல் 75 செமீ (13 முதல் 30 அங்குலம்) நீளம் கொண்டது. அறியப்பட்ட 19 வகையான வாலாபி இனங்களில் பாறை-வாலாபிகள் (பெட்ரோகேல் இனங்கள்) பாறைகளுக்கு இடையில் வாழ்கின்றன. பொதுவாக தண்ணீருக்கு அருகில் வாழும் இந்த இனத்தில் இரண்டு இனங்கள் ஆபத்தான நிலையில் உள்ளது. வாலாபிக்கள் முயல்களின் அசைவுகளையும் சில பழக்கங்களையும் கொண்டுள்ளது. ஆணி-வால் வாலாபியில் மூன்று இனங்கள் உள்ளது. இதன் வால் நுனியில் கொம்பு போன்ற அடர்த்தியான தூரிகை போன்ற அமைப்பு உள்ளது.
இதன் துணை இனமான குவாக்கா விலங்கு மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ளது. பிரஷ் வாலாபி இனங்களில் ஒன்றான குள்ள வாலாபி (நோட்டமக்ரோபஸ் டோர்கோப்சுலஸ்), நியூ கினியாவை பூர்வீகமாகக் கொண்டது, அறியப்பட்ட மிகச்சிறிய வாலாபியின் நீளம் மூக்கிலிருந்து வால் இறுதி வரை சுமார் 46 செமீ (18 அங்குலம்) மற்றும் எடை சுமார் 1.6 கிலோ (3.5 பவுண்ட்) கொண்டது. [3] வாலாபியின் இறைச்சி மற்றும் ரோமங்களுக்காக வேட்டையாடப்படுகிறது.
பொது விளக்கம்[தொகு]
பெரும்பாலான வாலாபி இனங்களின் உறுப்பினர்கள் சிறியயவைகளாக இருப்பினும், சில வகை வாலாபிகள் சுமார் இரண்டு மீட்டர் நீளம் வரை வளரும் (தலை முதல் வால் வரை).[3] அவற்றின் சக்திவாய்ந்த பின்னங்கால்கள் அதிக வேகத்தில் ஓடுவதற்கும், அதிக உயரங்களை தாண்டுவதற்கும் மட்டுமல்லாமல், சாத்தியமான வேட்டையாடுபவர்களைத் தடுப்பதற்காக வலுவான உதை வழங்குவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.[4] தம்மர் வாலாபி (நோட்டமக்ரோபஸ் யூஜெனி) வகை கணுக்கால் நீட்டிப்பு தசைநாண்களில் மீள் சேமிப்பைக் கொண்டுள்ளது. இவ்விலங்குகளின் வளர்சிதை மாற்ற விகிதம் 30-50% அதிகமாக இருக்கும்.[5] தம்மர் வாலாபி (மேக்ரோபஸ்-யூஜெனி) இரண்டு நீண்ட தசை-தசைநார் அலகுகளுக்கு வசந்தகால தசைநார் ஆற்றல் சேமிப்பு மற்றும் பொருளாதார தசை சக்தி உருவாக்கம் ஆகியவற்றின் வடிவமைப்பு முக்கியத்துவம் கண்டறியப்பட்டுள்ளது.[6] வாலாபிக்கு ஒரு சக்திவாய்ந்த வால் உள்ளது, இது பெரும்பாலும் சமநிலை மற்றும் ஆதரவுக்காக பயன்படுத்தப்படுகிறது. இவைகளின் அடர்ந்த முடிகள் கொண்ட தோகுக்காகவும், இறைச்சிக்காகவும் வேட்டையாடப்படுகிறது. இவைகளின் உணவு புல், காய் கறிகள், இலைகள் மற்றும் பசுந்தலைகள் ஆகும்.
இனங்கள்[தொகு]

- ஏகில் வாலாபி
- கருப்புப் பட்டை வாலாபி
- பர்மா வாலாபி
- செங்கழுத்து வாலாபி
- தாமர் வாலாபி
- டூலாட்சி வாலாபி
- மேற்கு தூரிகை வாலாபி
- விப்டெயில் வாலாபி
- சதுப்பு நில வாலாபி
- பாறை வாழ் வாலாபிக்கள்
இதனையும் காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "The Kangaroo". australianwildlife.com.au இம் மூலத்தில் இருந்து 25 ஜனவரி 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140125064953/http://australianwildlife.com.au/kangaroo.htm.
- ↑ (DOC), corporatename = New Zealand Department of Conservation. "Wallabies" (in en). https://www.doc.govt.nz/parks-and-recreation/things-to-do/hunting/what-to-hunt/wallabies/.
- ↑ "Wallaby". Encyclopædia Britannica.
- ↑ Biewener, A. A.; Baudinette, R. V. (September 1995). "In vivo muscle force and elastic energy storage during steady-speed hopping of tammar wallabies (Macropus eugenii)". Journal of Experimental Biology 198 (9): 1829–1841. doi:10.1242/jeb.198.9.1829. http://e.guigon.free.fr/rsc/article/BiewenerBaudinette95.pdf. பார்த்த நாள்: 2021-10-08.
- ↑ Biewener, A. A.; Baudinette, R. V. (September 1995). "In vivo muscle force and elastic energy storage during steady-speed hopping of tammar wallabies (Macropus eugenii)". Journal of Experimental Biology 198 (9): 1829–1841. doi:10.1242/jeb.198.9.1829. http://e.guigon.free.fr/rsc/article/BiewenerBaudinette95.pdf. பார்த்த நாள்: 2021-10-08.
- ↑ Biewener, A. A.; McGowan, C. Card, G. M. Baudinette, R. V. (January 2004). "Dynamics of leg muscle function in tammar wallabies (M. eugenii) during level versus incline hopping". Journal of Experimental Biology 207 (2): 211–223. doi:10.1242/Jeb.00764. பப்மெட்:14668306. http://authors.library.caltech.edu/25265/1/BIEjeb04.pdf.