சுடலைக் குயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சுடலைக் குயில்
Pied Cuckoo (Clamator jacobinus) with a catterpillar W IMG 4009.jpg
கம்பளிப்பூச்சியுடன்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: Cuculiformes
குடும்பம்: Cuculidae
பேரினம்: Clamator
இனம்: C. jacobinus
இருசொற் பெயரீடு
Clamator jacobinus
Boddaert, 1783
ClamatorJacobinusMap.svg
அடர் பச்சை - ஆண்டு முழுவதும் காணப்படும்
மஞ்சள்- வேனில் காலத்தில் மட்டும்
நீலம்- பனிக்காலத்தில்
cream – passage only
வேறு பெயர்கள்

Oxylophus jacobinus
Coccystes melanoleucos
Coccystes hypopinarius

சுடலைக் குயில் அல்லது கொண்டைக் குயில் (Jacobin Cuckoo or Pied CuckooClamator jacobinus) ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் காணப்படும் குயிலினப் பறவை. பருவமழை வருவதை முன்கூட்டியே அறிவிக்கும் வண்ணம் இப்பறவையின் வருகை இருப்பதாக இந்தியாவில் ஒரு நம்பிக்கை உள்ளது. இதில் ஓரளவே உண்மை இருப்பதாக மைகிரண்ட் வாச்சின் ஆய்வின் மூலம் அறியப்படுகிறது [2]. இந்தியப் பழங்கதையியலில் இது சாதகப் பறவை எனவும் அறியப்படுகிறது.

உடல் தோற்ற விளக்கம்/கள அடையாளங்கள்[தொகு]

  • சுடலைக் குயில் 13 inch அல்லது 31 cm – 33 cm நீளமுள்ளது; அதன் மேலுடல் சிறகுத்தொகுதி (தலை, கொண்டை உள்பட) கருப்பாக (சற்றே மினுமினுக்கும் பச்சை நிறங்கலந்து) இருக்கும்.
  • பறத்தலுக்குதவும் சிறகுகள் கரும்பழுப்பாகவும் அதன் ஊடே அகன்ற வெண்பட்டையுடனிருக்கும்; நீண்ட வாலில் (18 cm) வெண்ணிற முனைகள் காணப்படும். அடியுடல் வெண்மையாகவிருக்கும்.
  • அலகு கருப்பாகவும் கால் சற்றே நீலமாகவும் இருக்கும்.[3]

பரவல்[தொகு]

  • ஆப்பிரிக்கா, இந்தியா, இலங்கை, மியன்மார் ஆகிய நாடுகளில் காணப்படுகின்றது. இந்தியாவில் சமவெளிப் பகுதிகளிலும் மலைப்பகுதிகளிலும் (8000 அடி உயரத்திலும் கூட) காணப்படும்.

இந்தியாவில் காணப்படும் இரு உள்ளினங்கள்[தொகு]

  • Clamator jacobinus என்ற உள்ளினமானது பெரும்பாலும் தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் காணப்படுகிறது; இது உள்ளூர்ப் பறவையாகும்.
  • Clamator jacobinus pica என அழைக்கப்படும் உள்ளினம் இந்தியாவின் பிறவிடங்களில் வெயில் காலங்களில் இடம்பெயர்ந்து வலசையாக வரும் பறவையாகும்; இது உள்ளூர் சுடலைக் குயிலை விட சற்று பெரியது. மேலும் இது ஆப்பிரிக்காவிலிருந்து வரலாம் என்று கருதப்படுகிறது[4].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Clamator jacobinus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2012.1. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 16 July 2012.
  2. மைகிரண்ட் வாச்-[1]
  3. Popular Handbook of Indian Birds-Hugh Whistler-4 ed.-Norman Kinnear-1949-p. 324
  4. Popular Handbook of Indian Birds-Hugh Whistler-4 ed.-Norman Kinnear-1949-p. 324
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுடலைக்_குயில்&oldid=1931473" இருந்து மீள்விக்கப்பட்டது