உள்ளடக்கத்துக்குச் செல்

தி. வேல்முருகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தி. வேல்முருகன்
T. Velmurugan
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2021
தொகுதிபண்ருட்டி
பதவியில்
2001–2011
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புபுலியூர், கடலூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிதமிழக வாழ்வுரிமைக் கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
பாட்டாளி மக்கள் கட்சி
பணிஅரசியல்வாதி

தி. வேல்முருகன் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியும் தற்போதைய தமிழக சட்டமன்ற உறுப்பினருமாவார். இவர் தனது ஆரம்ப காலத்தில் சார்ந்திருந்த பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் பண்ருட்டி சட்டமன்றத் தொகுதியிலிருந்து 2001 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பிலும் 2006 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பிலும் இரண்டு முறையும் தொடர் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார்.[1][2] அதன் பிறகு 2011 சட்டமன்றத் தேர்தலில் அப்போது புதிதாக பிரிக்கபட்ட நெய்வேலி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட போது அதிமுக வேட்பாளர் எம்.பி.எஸ். சிவசுப்ரமணியனிடம் 8000 வாக்கு வித்யாசத்தில் தோல்வியடைந்தார். அதன் பிறகு பாட்டாளி மக்கள் கட்சியின் இணைப் பொதுச்செயலாளராக விளங்கிய வேல்முருகன் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதற்காக 2011 நவம்பர் 1 அன்று கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.[3][4] அதன் பின்னர் 2012 தை முதல் நாள் தனது தலைமையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி எனும் புதிய கட்சியைத் தொடங்கினார். பின்னர் நடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் அன்றைய ஆளும் முதல்வர் ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர வேல்முருகன் ஈடுபட்டு வந்த போது அதிமுக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுமாறு அதிமுக தலைவி ஜெயலலிதா கூறியதால் அந்த உடன்பாட்டை ஏற்காமல் வேல்முருகன் அவர்கள் மீண்டும் நெய்வேலி சட்டமன்றத் தொகுதியில் தனித்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதன் பிறகு நடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றிருந்த வேல்முருகன் தனது தவாக கட்சி மூலம் முதன் முறையாக திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் பண்ருட்டி சட்டமன்றத் தொகுதியில் இருந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார்.[5]

தேர்தல் முடிவுகள்

[தொகு]
தேர்தல் கட்சி சட்டமன்றத் தொகுதி முடிவுகள் பெற்ற வாக்குகள் %
1996 பா.ம.க. திருவொற்றியூர் தோல்வி 4,559 2.52%
2001 பா.ம.க பண்ருட்டி வெற்றி 45,963 37.67%
2006 பா.ம.க. பண்ருட்டி வெற்றி 54,653 38.18
2011 பா.ம.க நெய்வேலி தோல்வி 61,431 44.72%
2016 த.வா.க நெய்வேலி தோல்வி 30,523 19.17%
2021 த.வா.க பண்ருட்டி வெற்றி 93,801 47.6%

மேற்கோள்கள்

[தொகு]
  1. 2001 Tamil Nadu Election Results, Election Commission of India
  2. "2006 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-06-13. Retrieved 2011-11-01.
  3. பாமகவில் இருந்து வேல்முருகன் நீக்கம்! பரணிடப்பட்டது 2011-11-03 at the வந்தவழி இயந்திரம் இந்நேரம் செய்தித்தளம், பார்க்கப்பட்ட நாள்: நவம்பர் 1, 2011
  4. வேல் முருகன் நீக்கம், ராமதாஸ் விளக்கம்! பரணிடப்பட்டது 2011-11-03 at the வந்தவழி இயந்திரம் இந்நேரம் செய்தித்தளம், பார்க்கப்பட்ட நாள்: நவம்பர் 1, 2011
  5. "16th Assembly Members". Government of Tamil Nadu. Retrieved 2021-05-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தி._வேல்முருகன்&oldid=4387891" இலிருந்து மீள்விக்கப்பட்டது