பனாத்வாலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பனாத்வாலா
Banathwala.jpg
தனிநபர் தகவல்
பிறப்பு ஆகத்து 15, 1933(1933-08-15)
மும்பை
இறப்பு சூன் 26, 2008(2008-06-26) (அகவை 74)[1]
மும்பை
அரசியல் கட்சி இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக்
வாழ்க்கை துணைவர்(கள்) ஆயிசா
இருப்பிடம் மும்பை
As of சூன் 26, 2008
Source: [1]

இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக்கின் தலைவர் பனாத்வாலா, 1933-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி மும்பையில் பிறந்தார். மும்பை பல்கலைக்கழகத்தில் எம்.காம். , பி.எட். படிப்பை முடித்து, பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றினார்.

பின்னர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கில் இணைந்த பனாத்வாலா, மும்பை உமர்காடி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும், கேரள மாநிலம் பொன்னானி தொகுதியில் இருந்து 1971 முதல் 1991 வரையிலும், 1996 முதல் 2004 ஆம் ஆண்டு வரையிலும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் 7 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] இவர் மும்பையில் 2008ஆம் ஆண்டு சூன் 26 அன்று காலமானார்.

ஆதாரம்[தொகு]

  1. "Muslim League chief Banatwala dies".
  2. "parliamentofindia". 10 ஏப்ரல் 2015 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பனாத்வாலா&oldid=3279244" இருந்து மீள்விக்கப்பட்டது