பொன்னானி
Appearance
பொன்னானி என்னும் ஊர் கேரளத்தின் மலப்புறம் மாவட்டத்தில் உள்ளது. இது அரபிக்கடலை ஒட்டியுள்ள துறைமுக நகரமாகும். “எரித்ரியன் கடலில் பெரிப்ளல்” என்று பொருள்படும் கிரேக்க நூலில், இவ்வூரை “திண்டிஸ்” எனக் குறிப்பிட்டுள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.[1]. இந்த நகராட்சி ஐம்பது வார்டுகளைக் கொண்டது. இது 199.42 ச. கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது.
பெயர்க் காரணம்
[தொகு]- பொன்னன் என்ற அரசர் வாழ்ந்ததால் பொன்னானி என்ற பெயர் பெற்றதாகக் கருதுகின்றனர்.
- பொன் வாணி என்ற ஆறு பாய்ந்த இடம் என்பதால் இப்பெயர் பெற்றது என்று வேறு சிலரும் கருதுகின்றனர்.
- அரபு, பாரசீக நாடுகளுடன் வணிகத்தை மேற்கொண்ட பகுதி என்பதால் பொன் நாணயங்கள் நிரம்பிய இடம் என்ற பொருளில் இப்பெயர் பெற்றிருக்கலாம் என்று வேறு சிலரும் கருதுகின்றனர்.
- ஆழ்வாஞ்சேரி தம்பிரான்களின் ஆட்சிக் காலத்தில், பொன்னை ஏற்றிய யானைகளை கோயில்களுக்கு அளித்ததால் பொன் யானை என்ற பெயரே பொன்னானி என்று மருவியதாகவும் சிலர் கருதுகின்றனர். [2]
சான்றுகள்
[தொகு]- ↑ The maritime trade of ancient Tamils in plant products[தொடர்பிழந்த இணைப்பு]. Accessed on 31 ஆகஸ்ட் 2009.
- ↑ தம்பிராக்களுடெ தம்பிராக்கள்- சி. ராதாகிருஷ்ணன். மலையாள மனோரமா நாளேடு 2011 பிப்ரவரி 19
வெளி இணைப்புகள்
[தொகு]- பொன்னானி நகராட்சி - கேரள அரசு பரணிடப்பட்டது 2009-04-12 at the வந்தவழி இயந்திரம்