வள்ளிக்குன்னு ஊராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வள்ளிக்குன்னு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இதுவும் வள்ளிக்குன்னம் ஊராட்சியும் வேறுவேறானவை.

வள்ளிக்குன்னு (வள்ளிக்குன்று) ஊராட்சி கேரளத்தின் மலப்புறம் மாவட்டத்தில் உள்ளது. அரியல்லூர், வள்ளிக்குன்னு ஆகிய ஊர்கள் இந்த ஊராட்சிக்கு உட்பட்டன. வடக்கில் கடலுண்டியும், கிழக்கில் சேலேம்பிராவும், தேஞ்ஞிப்பலமும், மூன்னியூரும், தெற்கில் பரப்பனங்காடியும் உள்ளன. மேற்கில் அரபிக்கடல் பரந்து விரிந்திருக்கிறது. இது 25.14 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. இங்கு 35,517 மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் 88.41 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர்.

போக்குவரத்து[தொகு]

ஷொர்ணூர் - மங்களூர் ரயில் இந்த ஊரின் வழியாக செல்கிறது. கோழிக்கோட்டில் தொடங்கி கோட்டக்கடவு வழியாக பரப்பனங்காடியிக்கு போகும் பேருந்துகளும் வள்ளிக்குன்னில் நிற்கின்றன.

வார்டுகள்[தொகு]

  • கடலுண்டி நகரம் வடக்கு
  • கீழயில்
  • நவஜீவன்
  • பாலாதிருத்தி
  • ஆனயாறங்காடி
  • மடத்தில் புறாயி
  • கிழக்கேமலை
  • ஒலிப்ரம்
  • பருத்திக்காடு
  • பொட்டன்குழி
  • கச்சேரிக்குன்னு
  • கருமரக்காடு
  • கொடக்காடு கிழக்கு
  • கொடக்காடு தெற்கு
  • கொடக்காடு மேற்கு
  • அரியல்லூர் கிழக்கு
  • மாதவானந்தம்
  • அரியல்லூர் தெற்கு
  • அரியல்லூர் கடற்கரை
  • அரியல்லூர் வடக்கு
  • ஆனங்காடி தெற்கு
  • ஆனங்காடி
  • கடலுண்டி நகரம் தெற்கு

மேலும் பார்க்க[தொகு]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வள்ளிக்குன்னு_ஊராட்சி&oldid=3257452" இலிருந்து மீள்விக்கப்பட்டது