எடப்பாள்
எடப்பாள் | |
---|---|
கணக்கெடுப்பில் உள்ள ஊர் | |
![]() எடப்பாள் ஊர் | |
ஆள்கூறுகள்: 10°47′01″N 76°00′27″E / 10.7837°N 76.0076°E | |
நாடு | இந்தியா |
மநிலம் | கேரளம் |
மாவட்டம் | மலப்புறம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 22.2 km2 (8.6 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 32,550 |
• அடர்த்தி | 1,500/km2 (3,800/sq mi) |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 679576 |
தொலைபேசி குறியீடு | 0494 |
வாகனப் பதிவு | KL-54 |
எடப்பாள் (Edappal) என்பது இந்தியாவின் கேரளத்தின், மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பொன்னானி வட்டத்தில், பொன்னானி நகருக்கு அருகில் அமைந்துள்ள ஒரு ஊர் ஆகும். திருச்சூர்-கோழிக்கோடு மற்றும் பாலக்காடு-பொன்னானி மாநில சாலைகளின் சந்திப்பில், மலப்புரத்திலிருந்து 45 கி.மீ. தொலைவில் எடப்பாள் உள்ளது. எடப்பாள் வட்டம்குளம் மற்றும் எடப்பால் ஆகிய இரண்டு ஊராட்சிகளில் அமைந்துள்ளது. எடப்பாள் ஊரானது துய்யம், பொல்பக்கரை, அயிலக்காடு, வட்டம்குளம், அன்னகம்பாடு ஆகிய பகுதிகளுடன் எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது. கேரளத்தின் ஆரம்பகால பிராமண குடியிருப்புகளில் ஒன்றான சுகபுரம் ( சௌவாரா என்றும் அழைக்கப்படுகிறது), எடப்பாளில் அமைந்துள்ளது.[1] ஆதவநாட்டின் ஆழ்வாஞ்சேரி தம்பிரகள் (முதலில் மாறஞ்சேரி ), சுகபுரத்தின் ( சௌவர ) நம்பூதிரிகளின் மீது செல்வாக்கு செலுத்தினர், அதே சமயம் கல்பக்கஞ்சேரியின் கல்பகஞ்சேரி தம்பிரகள் பன்னியூர் நம்பூதிரிகள் மீது செல்வாக்கு செலுத்தினர்.[2] 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மலப்புறம் பெருநகரப் பகுதியின் ஒரு பகுதியாக எடப்பாள் உள்ளது.[3] எடப்பாளில் பொன்னானி கோல் சதுப்பு நிலத்தில் அமைந்துள்ளது. மேலும் பொன்னானியின் பையம் காயல் ஏரியால் சூழப்பட்டுள்ளது.
குறிப்பிடத்தக்கவர்கள்
[தொகு]- கலைஞர் நம்பூதிரி
- சுகுமாரன் (நடிகர்)
- அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரி
- பிபி ராமச்சந்திரன்
- செக்கன்னூர் மௌலவி
- இடச்சேரி கோவிந்தன் நாயர்
- தேவதூத் பாடிக்கல் (துடுப்பாட்ட வீரர்)
- பி சுரேந்திரன் (எழுத்தாளர்)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Menon, A. Sreedhara (2007). A Survey of Kerala History. DC Books. ISBN 9788126415786.
- ↑ K. V. Krishna Iyer (1938). Zamorins of Calicut: From the earliest times to AD 1806. Norman Printing Bureau, Kozhikode.
- ↑ "Constituents of Malappuram metropolitan area". kerala.gov.in.