அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரி
அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரி | |
---|---|
![]() | |
பிறப்பு | அக்கித்தம் அச்சுதன் மார்ச்சு 18, 1926 குமாரநெல்லூர், பாலக்காடு |
இறப்பு | 15 அக்டோபர் 2020[1] திருச்சூர் | (அகவை 94)
புனைப்பெயர் | அக்கித்தம் |
தொழில் | கவிஞர், சமூகப்பணி |
நாடு | இந்தியர் |
குறிப்பிடத்தக்க படைப்பு(கள்) |
|
குறிப்பிடத்தக்க விருது(கள்) |
|
துணைவர்(கள்) | சிறீதேவி அந்தார்சனம் |
பிள்ளைகள் | 2 மகன்கள், 4 மகள்கள் |
உறவினர்(கள்) |
|
www.akkitham.in |
அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரி (18 மார்ச் 1926 – 15 அக்டோபர் 2020)[2] என்பவர் மலையாளக் கவிஞர் ஆவார். இவர் அக்கித்தம் என்ற பெயரால் அறியப்படுகிறார். சமகால கேரள எழுத்தாளர்களில் கவிதை,கட்டுரை, ஆசிரியர் என பரவலாக அறியப்பட்ட இலக்கிய ஆளுமை இவர். 1950 இல்தான் இவருடைய இலக்கியங்கள் பெரும் கவனத்தை பெற ஆரம்பித்தன. அக்கிதம் என்பது இவரது ஊராகும்.
1952 இல் இவரது கவிதை படைப்புகளுக்காக சன்ஞயன் விருது வழங்கப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின்றெ இதிகாசம் என்ற பெயரில் இவர் எழுதியது புகழ் பெற்ற ஒன்று. அவருடைய கதை, கவிதை, இவருடைய நாடகம், கவிதை, சிறுகதை என மொத்தம் 45 எண்ணிக்கை உடைய ஒரு தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது. பாலி தரிசனம் என்ற நூல் இவருக்கு கேந்த்ரா சாகித்ய அகாதெமி விருதினை 1973 இல் பெற்றுத்தந்தது. சாபெற்றது. அரங்கேற்றம், நிமிஷ சேத்ரம், இடிஞ்சு பொலிஞ்ச லோகம், அம்ரிதகடிகா, அக்கிதன்றின்றெ தெரஞ்செடுத்த கவிதைகள் ஆகியன குறிப்பிடத்தக்கன. 2012இல் வயலார் விருது பெற்றார்.
இவருடைய படைப்புகளில் ”ஸ்ரீமத் பாகவதம்” நூலின் மொழிப்பெயர்ப்பு முக்கியமானதாக கருதப்படுகிறது. இது 14,613 வசனங்களை உள்ளடக்கியது, மேலும் 2400 பக்கங்களில் அச்சிடப்பட்டது.
இலக்கியத்துறை மட்டுமில்லாமல், காலத்திற்கு தகுந்த சில சமூக சீர்திருத்தங்களை கொண்டுவருவதிலும் இவர் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். திரிச்சூரில் யோகேஷேஸ்மா சபையின் உறுப்பினராக இருந்த இவர், கேரளத்தின் நம்புோதிரி பிராமணர்களிடையே சில சமூக சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதில் முக்கிய பங்காற்றினார். திருநவேய, கடவள்ளூர் மற்றும் திருச்சூரில் உள்ள புகழ்பெற்ற வேத ஆய்வு மையங்களுடன் இணைந்து வேதம் சார்ந்த படிப்புகளை ஊக்குவிப்பதற்கான முயற்சிகளிலும் மிகவும் ஈடுப்பாட்டுடன் இருந்தார். பிராமணர் அல்லாதோர்க்கும் வேதங்களின் முக்கியத்துவத்தை பரப்புவதற்கு முயற்சிகளை மேற்கொண்டார். தீண்டாமைக்கு எதிராக தனது அழுத்தமான குரலை பதித்த அக்கிதம், 1947 இல் நடந்த பாலியம் சத்தியாகிரகத்தில்( அகிம்சை போராட்டம்) கலந்து கொண்டு தீண்டாமைக்கு எதிரான தன் அசைக்க முடியாத ஆதரவைத் தந்தார்.
பத்மஸ்ரீ, மாநில அரசின் சாகித்திய அகாதமி விருது, ஆசான் விருது, வள்ளத்தோள் விருது, லலிதாம்பிகை சாகித்திய விருது, ஓடைக்குழல் விருது, வயலார் விருது, நல்லப்பாடு விருது, எழுத்தச்சன் விருது போன்ற பல விருதுகளுக்கு சொந்தமானவர்.
புகழ்பெற்ற ஓவியர் அக்கிதம் நாராயணன் இவரின் இளைய சகோதரர் ஆவார்.
எழுதியவை[தொகு]
- இருபதாம் நூற்றாண்டின்றெ இதிகாசம்
- வெண்ணக்கல்லின்றெ கதை
- பலிதர்சனம்
- மனசாட்சியுடெ பூக்கள்
- நிமிஷ ஷேத்ரம்
- பஞ்சவர்ணக்கிளி
- அரங்கேற்றம்
- மதுவிது
- ஒரு குலை முந்திரிங்ங (குட்டிக்கவிதைகள்)
- பாகவதம்
- நிமிஷ ஷேத்ரம் (1972)
- இடிஞ்ஞு பொளிஞ்ஞ லோகம் (1983)
- அம்ருதகாதிக (1985)
- அக்கித்தத்தின்றெ திரஞ்ஞெடுத்த கவிதைகள் (1986)
- களிக்கொட்டிலில் (1990)
- அக்கித்தம் கவிதைகள்: சம்பூர்ண சமாகாரம்(1946-2001). சுகபுரம்: வள்ளத்தோள் வித்யாபீடம், 2002, பு. 1424.
- அஞ்சு நாடோடிப்பாட்டுகள்
- மானசபூஜை