உள்ளடக்கத்துக்குச் செல்

கல்பக்கஞ்சேரி

ஆள்கூறுகள்: 10°56′17″N 75°59′13″E / 10.938°N 75.987°E / 10.938; 75.987
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கல்பக்கஞ்சேரி
சிற்றூர்
கல்பக்கஞ்சேரி
கல்பக்கஞ்சேரி
Map
Location in Malappuram district, Kerala
ஆள்கூறுகள்: 10°56′17″N 75°59′13″E / 10.938°N 75.987°E / 10.938; 75.987
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்மலப்புறம்
ஊராட்சி அவை10 அக்டோபர் 1940; 83 ஆண்டுகள் முன்னர் (1940-10-10)
அரசு
 • வகைகிராம ஊராட்சி
 • நிர்வாகம்கல்பக்கஞ்சேரி கிராம ஊராட்சி
 • Presidentகே. பி. வகிதா
 • Vice presidentஏ. அப்துல் பசீர்
பரப்பளவு
 • மொத்தம்16.25 km2 (6.27 sq mi)
மக்கள்தொகை
 (2011)[1]
 • மொத்தம்33,721
 • அடர்த்தி2,075/km2 (5,370/sq mi)
மொழிகள்
 • Officialமலையாளம்
2011 கணக்கெடுப்பு
 • பாலின விகிதம் (2011)1191 /1000[2]
 • கல்வியறிவு (2011)94.37%[3]
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
676551, 676510
தொலைபேசி குறியீடு0494
வாகனப் பதிவுKL-55
அருகில் உள்ள நகரம்
சட்டமன்றத் தொகுதிதிரூர்
ஊராட்சி ஒன்றியம்குட்டிப்புரம்
இணையதளம்www.lsgkerala.in/kalpakancherypanchayat
ஜி.வி.எச்.எஸ்.எஸ், கல்பக்கஞ்சேரி
பி.ஒய்.கே.ஆர்.எச்., கடுங்காத்துக்குண்டு

கல்பக்கஞ்சேரி (Kalpakanchery) என்பது இந்தியாவின், கேரளத்தின், மலப்புறம் மாவட்டம், திரூர் வட்டத்தில் உள்ள ஒரு வருவாய் கிராமம் மற்றும் ஒரு கிராம ஊராட்சி ஆகும். இந்தக் கிராமம் மலப்புறம் நகரத்திற்கு தென்மேற்கே சுமார் 21 கிலோமீட்டர்கள் (13 mi) தொலைவில் உள்ளது.

கடுங்காத்துக்குண்டு, புத்தனத்தாணி, குருகத்தானி, ரந்ததானி ஆகியவை கல்பக்கஞ்சேரியைச் சுற்றியுள்ள நான்கு முக்கிய ஊர்கள் ஆகும். தேசிய நெடுஞ்சாலை 66 இந்த கிராமத்தின் வழியாக செல்கிறது. இந்த கிராமம் கல்வி நிறுவனங்கள் மற்றும் பிற அலுவலகங்களின் மையமாக உள்ளது. நகரத்தில் பல கல்வி நிறுவனங்கள், சுகாதார நிறுவனங்கள், இரண்டு தொழில் பயிற்சி மையங்கள், கல்பக்கஞ்சேரி காவல் நிலையம், பாஃபாக்கி யாதீம் கானா (அனாதை இல்லம்), அஞ்சல் அலுவலகம், கல்பக்கஞ்சேரி சார் பதிவாளர் அலுவலகம், கல்பக்கஞ்சேரி ஊராட்சி அலுவலகம் ஆகியவை உள்ளன. இந்த கிராமத்தில் புதன்கிழமைகளில் கூடும் வாரச்சந்தையானது மேலங்காடி சந்தை என்று அழைக்கப்படுகிறது. இன்றைய மேலங்காடியில், புத்தனத்தாணிக்கும் கடுங்காத்துக்குண்டுக்கும் இடையே வாராந்திர சந்தை நடைபெற்று வந்தது. நகராட்சி அந்தஸ்து கொண்ட நகரங்களான திரூர், கோட்டக்கல், வளஞ்சேரி ஆகியவை இங்கிருந்து 8 அல்லது 9 கிலோமீட்டர்கள் (5.0 அல்லது 5.6 mi) தொலைவில் அமைந்துள்ளன.

சொற்பிறப்பியல்

[தொகு]

கல்பக்கஞ்சேரி என்ற பெயர் தென்னை மரங்களின் தெரு என்று பொருள்படும். கல்பகம் ( தென்னை மரம் ) மற்றும் சேரி (தெரு) ஆகிய இரண்டு மலையாள சொற்களின் கலவையிலிருந்து இது உருவானதாக நம்பப்படுகிறது.

மக்கள்தொகையியல்

[தொகு]

2011, மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி கல்பகங்சேரியின் மக்கள் தொகை 33,721 ஆகும். இதில் ஆண்களின் எண்ணிக்கை 15,391 என்றும், பெண்களின் எண்ணிக்கை 18,330 என்றும் உள்ளது. கிராமத்தின் கல்வியறிவு விகிதமானது 2011 ஆண்டு கணக்கெடுப்பின் படி 94.37% ஆகும். பெரும்பான்மை மக்கள் பேசும் மொழியாக மலையாளம் உள்ளது.

கல்வி

[தொகு]

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கிராமத்தில் இரண்டு பாலர் பள்ளிகள், 13 தொடக்கப் பள்ளிகள், ஐந்து நடுநிலைப் பள்ளிகள், மூன்று உயர்நிலைப் பள்ளிகள், மூன்று மேல்நிலைப் பள்ளிகள், மூன்று தொழிற்பயிற்சிப் பள்ளிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பள்ளி ஆகியவை உள்ளன. 1958 இல் நிறுவப்பட்ட ஜி.வி.எச்.எஸ்.எஸ் பள்ளி, இப்பகுதியில் உள்ள பழமையான மேல்நிலைப் பள்ளிகளில் ஒன்றாகும். கிராமத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள் பின்வருமாறு:

பெயர் வகை உரிமை
பி.ஒய்.கே.ஏ.எஸ் மகளிர் கல்லூரி, கல்பகஞ்சேரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தனியார்
பாஃபாகி ஐடிஐ கல்லூரி, கடுங்காத்துக்குண்டு தொழில்துறை பயிற்சி நிறுவனம் தனியார்
அமினா ஐடிஐ கல்லூரி, கடுங்கத்துக்குண்டு தொழில்துறை பயிற்சி நிறுவனம் தனியார்
பி.ஒய்.கே பி.எட். பயிற்சிக் கல்லூரி, கடுங்கத்துக்குண்டு தொழில்முறை கல்லூரி தனியார்
ஜி.வி.எச்.எஸ்.எஸ், கல்பகஞ்சேரி மேல்நிலைப் பள்ளி அரசு
எம்.எஸ்.எம்.எச்.எஸ்.எஸ், கல்லிங்கல்பரம்பா மேல்நிலைப் பள்ளி உதவி
பி.ஒய்.கே.ஆர்.எச்.எஸ், கடுங்கத்துக்குண்டு உயர்நிலைப் பள்ளி தனியார்
ஜி.யு.பி.எஸ்., ரந்ததானி துவக்கப் பள்ளி அரசு
ரஹ்மானி தொடக்கப்பள்ளி, ரந்ததானி துவக்கப் பள்ளி தனியார்
நஜாத் பப்ளிக் பள்ளி, ரந்ததானி துவக்கப் பள்ளி தனியார்
ஜி.எம்.எல்.பி.எஸ், பாலேத் துவக்கப் பள்ளி அரசு
ஜி.எம்.எல்.பி.எஸ்., பாராபுரம் துவக்கப் பள்ளி அரசு
GMPLS, பரவண்ணூர் துவக்கப் பள்ளி அரசு
ஏ.எம்.எல்.பி.எஸ்., பரவண்ணூர் துவக்கப் பள்ளி உதவி
ஜி.எம்.எல்.பி.எஸ்., அயிரணி துவக்கப் பள்ளி அரசு
ஏ.எம்.எல்.பி.எஸ்., தோழனூர் மேற்கு துவக்கப் பள்ளி உதவி
ஏ.எம்.எல்.பி.எஸ்., தோழனூர் கிழக்கு துவக்கப் பள்ளி உதவி
ஜி.எல்.பி.எஸ்., கல்பகஞ்சேரி துவக்கப் பள்ளி அரசு
ஜி.எம்.எல்.பி.எஸ்., மஞ்சச்சோலை துவக்கப் பள்ளி அரசு
ஜிஎம்எல்பிஎஸ், கானஞ்சேரி துவக்கப் பள்ளி அரசு

நலவாழ்வு

[தொகு]

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஒரு ஆரம்ப சுகாதார நிலையம், 3 ஆரம்ப சுகாதார துணை நிலையங்கள், ஒரு மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மையம், இரண்டு மருத்துவமனை, ஒரு மருந்தகம், இரண்டு கால்நடை மருத்துவமனைகள், ஒரு குடும்ப நல மையம், இரண்டு அறக்கட்டளை மருத்துவமனைகள், 12 மருந்து கடைகள் உள்ளன. [4]

ரண்டத்தாணிக்கு அருகில் உள்ள தோழனூரில் அரசு ஆயுர்வேத மருத்துவமனை மற்றும் அரசு கால்நடை மருந்தகம் செயல்படுகிறது.

குடிமை நிர்வாகம்

[தொகு]
கல்பகஞ்சேரி கிராம ஊராட்சி அலுவலகம்

இப்பகுதி கல்பக்கஞ்சேரி கிராம ஊராட்சியால் நிர்வகிக்கப்படுகிறது. ஊராட்சி 19 வார்டுகளைக் கொண்டது:

கல்பகஞ்சேரி குட்டிப்புரம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் திரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டது.

வார்டுகள்
வார்டு பெயர்
1 பாராபுரம்
2 வரியாத்
3 ரண்டதானி
4 கீழக்கேபுரம்
5 தரலட்
6 மஞ்சச்சோலை
7 கல்லிங்கல்
8 பரவண்ணூர் சோலை
9 பததேபீடிகா
10 பரவண்ணூர்
11 அயிராணி
12 கடுங்காத்துக்குண்டு
13 கல்பகஞ்சேரி
14 தோட்டாய்
15 கானஞ்சேரி
16 பலேத்
17 வரம்பிங்கல்
18 கல்லிங்கல்பரம்பா
19 குண்டம்சினா

சட்டம் ஒழுங்கு

[தொகு]

கல்பக்கஞ்சேரி காவல் நிலையமானது, கல்பகஞ்சேரி, வளவண்ணூர், பொன்முண்டம், செரியமுண்டம், பெருமண்ணா-கிளாரி, ஆதவநாடு, திருநாவாய் ஆகிய ஏழு கிராமங்களில் அதிகார வரம்பைக் கொண்டுள்ளது. இந்த நிலையம் 1919 இல் நிறுவப்பட்டது. இது திரூர் நீதிமன்றத்தின் கீழ் வருகிறது.

போக்குவரத்து

[தொகு]

குறிப்பிடத்தக்கவர்கள்

[தொகு]

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Directorate of Census Operations, Kerala. District Census Handbook, Malappuram (PDF). Thiruvananthapuram: Directorate of Census Operations, Kerala. p. 172. பார்க்கப்பட்ட நாள் 14 July 2020.
  2. Directorate of Census Operations, Kerala. District Census Handbook, Malappuram (PDF). Thiruvananthapuram: Directorate of Census Operations, Kerala. p. 350. பார்க்கப்பட்ட நாள் 14 July 2020.
  3. Directorate of Census Operations, Kerala. District Census Handbook, Malappuram (PDF). Thiruvananthapuram: Directorate of Census Operations, Kerala. p. 351. பார்க்கப்பட்ட நாள் 14 July 2020.
  4. {{cite book}}: Empty citation (help)

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்பக்கஞ்சேரி&oldid=3882164" இலிருந்து மீள்விக்கப்பட்டது