ஆசாத் மூப்பன்
ஆசாத் மூப்பன் Azad Moopen | |
---|---|
பிறப்பு | 15 ஏப்ரல் 1953 கல்பாக்கஞ்சேரி, கேரளம், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | |
பணி | மருத்துவர், முதலீட்டாளர், வர்த்தகர் |
சொத்து மதிப்பு | 1 பில்லியன் அமெரிக்க டாலர் |
விருதுகள் |
|
வலைத்தளம் | |
asterdmhealthcare |
ஆசாத் மூப்பன் (Azad Moopen பிறப்பு: ஏப்ரல் 15, 1953, கல்பகஞ்சேரி - கேரளா) ஒரு இந்திய சுகாதார தொழில்முனைவோர், மருத்துவர் மற்றும் தொழிலதிபர் ஆவார். இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் 1987 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டு நடத்தப்படும் அஸ்தர் டி.எம். சுகாதார நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராகவும் உள்ளார்.[1] ஆசியா-பசிபிக் பகுதியில் பல சுகாதார வசதிகளை உருவாக்க்கி வருபவர்.[2]
2010 ஆம் ஆண்டு அவருக்கு பிரவாசி பாரதீய சம்மான் விருதும், 2011 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது..[3] போர்ப்ஸ் பத்திரிக்கையானது ஐக்கிய அரபு அமீரகத்தின் சிறந்த 100 இந்தியத் தலைவர்கள்" பட்டியலில் 6 வது இடத்தை தந்துள்ளது.[4] மேலும் அரேபிய பிசினஸ் பத்திர்க்கையின்படி "மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள 50 பணக்கார இந்தியர்களில்" 29 வது இடத்தைப் தந்துள்ளது [5].
பிறப்பு
[தொகு]ஆசாத் மூப்பன் ஏப்ரல் 15, 1953 அன்று கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தில் உள்ள கல்பகஞ்சேரி என்ற கிராமத்தில் பிறந்தார். இவரின் தந்தை எம்.ஏ.மூப்பன் சுதந்திர போராட்ட வீரர் மற்றும் சமூகத் தலைவர் ஆவார்.
கல்வி
[தொகு]ஆசாத் மூப்பன் எம்.பி.பி.எஸ் படிப்பில் தங்கப் பதக்கம் வென்றவர் மற்றும் கேரளாவின் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் பொது மருத்துவத்தில் முதுகலை பட்டமும் மற்றும் தில்லி பல்கலைக்கழகத்தில் மார்பு நோய் (Chest Diseases) குறித்த பட்டையப்படிப்பும் படித்தவர்[6][7].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Jagwani, Lohit (12 February 2014). "We are looking at a turnover of $1B by 2017: Azad Moopen, chairman of Aster DM Healthcare". VC Circle. Archived from the original on 5 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 5 May 2014.
- ↑ "Governing Board". Indian Business and Professional Council (IBPC) Dubai.
- ↑ Padma Awards Announced Ministry of Home Affairs, 25 January 2011
- ↑ "Top 100 Indian Leaders in UAE". Forbes. Archived from the original on 5 May 2014. பார்க்கப்பட்ட நாள் 5 May 2014.
- ↑ "50 Richest Indians in the GCC". Arabian Business. பார்க்கப்பட்ட நாள் 5 May 2014.
- ↑ "Sky is the Limit". The Financial Express. பார்க்கப்பட்ட நாள் 8 July 2014.
- ↑ "UAE-based Indian entrepreneur offers jobs to rescued nurses". 7 July 2014. பார்க்கப்பட்ட நாள் 8 July 2014.