பிரவாசி பாரதீய சம்மான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பிரவாசி பாரதீய சம்மான் (Pravasi Bharatiya Samman) என்பது வெளிநாடுவாழ் இந்தியருக்கான விருது. இது மகாத்மா காந்தி அடிகள் 1915 இல் தென்னாபிரிக்காவிலிருந்து இந்தியா வந்தடைந்த தினமான ஜனவரி ஒன்பதாம் நாளை நினைவுபடுத்தும் வகையில், வெளிநாட்டு இந்தியருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.[1]

வெளிநாடுவாழ் இந்தியர் நாள் (பிரவாசி பாரதிய திவாஸ்) ஆண்டுதோறும் ஜனவரி 7-9ம் திகதிகளில் கொண்டாடப்படுகின்றது.

நோக்கம்[தொகு]

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் ஒன்று கூடி தமக்குள்ளும் இந்திய மத்திய அரசுடனும் மாநில அரசுடனும் கலந்துரையாடவும் இடைத்தொடர்புகளை மேற்கொள்ளவும், இந்திய நாட்டில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் எவை என்பதை எடுத்துக் காட்டவும் இவ்விழாக்கள் உதவும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Pravasi Bharatiya Samman Award". Ministry of Overseas Indian Affairs. பார்த்த நாள் 8 சனவரி 2015.

வெளி இணைப்புகள்[தொகு]