வெளிநாடுவாழ் இந்தியர் நாள்
Appearance
வெளிநாடுவாழ் இந்தியர் நாள், 2003 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 9 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்தியாவைத் தவிர்த்த பிற நாடுகளில் வாழும் இந்தியர்களின் நினைவாகக் கொண்டாடப்படுகிறது. மகாத்மா காந்தி, தென்னாப்பிரிக்காவிலிருந்து மும்பை வந்து சேர்ந்த நாளின் (ஜனவரி 9, 1915) நினைவாக இந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது.[1][2] இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒவ்வொரு இந்திய நகரத்தில் இவ்விழா கொண்டாடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழாவின்போது, வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கும் விருதுகள் வழங்கப்படுகின்றன.[3]
இடங்கள்
[தொகு]ஆண்டுதோறும் இந்நாள் கொண்டாடப்பட்ட இடங்கள்:
- 2003 - புது தில்லி
- 2004 - புது தில்லி
- 2005 - மும்பை
- 2006 - ஐதராபாத்
- 2007 - புது தில்லி
- 2008 - புது தில்லி
- 2009 - சென்னை
- 2010 - புது தில்லி
- 2011 - புது தில்லி
- 2012 - ஜெய்ப்பூர்
- 2013 - கொச்சி
- 2014 - புது தில்லி
- 2015 - மகாத்மா மந்திர், காந்தி நகர், குஜராத்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காந்தி சகாப்த உதயம்!". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 9 சனவரி 2015.
- ↑ "மாமனிதரின் மறுவருகை". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 9 சனவரி 2015.
- ↑ "வெளிநாடு வாழ் இந்தியர் மாநாட்டில் மத்திய திட்டங்களுக்கு ஆதரவு கேட்போம்: சுஷ்மா ஸ்வராஜ்". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 9 சனவரி 2015.