தவனூர்

ஆள்கூறுகள்: 10°51′5″N 75°59′14″E / 10.85139°N 75.98722°E / 10.85139; 75.98722
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
—  கிராமம்  —
தவனூர்
இருப்பிடம்: தவனூர்

,

அமைவிடம் 10°51′5″N 75°59′14″E / 10.85139°N 75.98722°E / 10.85139; 75.98722
மாவட்டம் மலப்புறம்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


தவனூர் என்னும் ஊர், கேரளத்தின் மலப்புறம் மாவட்டத்தில்‍, பொன்னானி வட்டத்தில்‍, உள்ளது. இது பொன்னானி மண்டலத்திற்கு உட்பட்டது. இந்த ஊராட்சி தவனூர், காலடி ஆகிய ஊர்களையும், 15 வார்டுகளையும் கொண்டது. இது 42.37 ச.கி.மீ. பரப்பளவைக் கொண்டது.

இது வடக்கிலும் மேற்கிலும் பாரதப்புழை ஆற்றையும், கிழக்கில் ஆனக்கரை, வட்டங்குளம் ஊராட்சிகளையும், தெற்கில் எடப்பாள், இழுவத்துருத்தி ஊராட்சிகளையும் கொண்டுள்ளது. முற்காலத்தில் தாபசனூர் என்று அழைத்தனர். இங்கு நெல்லும், பயற்றம், எள், காய்கறி, வாழை, மரவள்ளி, மிளகு, கமுகு, ரப்பர் ஆகியவற்றையும் பயிரிடுகின்றனர்.

இங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் குற்றிப்புறம் தொடருந்து நிலையம் அமைந்துள்ளது. திருச்சூர்-குற்றிப்புறம் நெடுஞ்சாலையும், 17-வது தேசிய நெடுஞ்சாலையும் இந்த ஊரின் வழியாக கடந்து செல்கின்றன.

சான்றுகள்[தொகு]


வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தவனூர்&oldid=3247483" இலிருந்து மீள்விக்கப்பட்டது