எஸ். எம். முகம்மது செரிப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எஸ்.எம். முஹம்மது ஷரிப் ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். 1967 ஆம் ஆண்டு இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டும், 1971 தேர்தலில் பெரியகுளம் மக்களவைத் தொகுதியிலிருந்து,இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் சார்பாக வேட்பாளராக போட்டியிட்டு மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

பிறப்பு[தொகு]

15 ஜூலை 1924 ஆம் ஆண்டு முஹம்மது மதார் இராவுத்தருக்கு மகனாக மதுரையில் கரீம்ஷா பள்ளி தெருவில் பிறந்தார்.

கல்வி[தொகு]

மதுரை அமெரிக்கன் கல்லூரியிலும், பீகார் ராஞ்சி கல்லூரியிலும் கல்வி பயின்றார்.

பொறுப்புகள்[தொகு]

 • 1961-1963 மதுரை நகர முஸ்லிம் லீக் தலைவர்
 • 1963 மதுரை மாவட்ட முஸ்லீம் லீக் செயலாளர் மற்றும் இந்திய ஒன்ரிய முஸ்லிம் லீக் தமிழ்நாடு பிரிவின் மாநில துணை செயலாளர்
 • 1964-1969 மதுரை நகராட்சி முனிசிபல் கவுன்சிலர்
 • 1967-1970 இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்
 • 1967-1968-1969 தென்மண்டல இரயில்வே ஆலோசனை குழு மற்றும் பயணர்கள் குழு உறுப்பினர்
 • 1968-1969 வெளிநாட்டு வர்த்தக மற்றும் வழங்கல் குழு
 • 1970 சுகாதாரம் மற்றும் குடும்ப திட்டமிடல்
 • 1953-1967 மதுரை மத்திய சிறைச்சாலையில் மத மற்றும் ஒழுக்கவியல் சீர்திருத்தம்
 • 1968-1970 மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு பரிவர்த்தனை குழு
 • 1970 மதுரை மண்டல தொலை தொடர்புத்துறை ஆலோசனை குழு
 • 1970 இராமநாதபுரம் மாவட்ட சிரிய ரக தொழிற்சாலைகள் ஆலோசனை குழு
 • 1971 பெரியகுளம் மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் [2]

மேற்கோள்கள்[தொகு]