உள்ளடக்கத்துக்குச் செல்

அப்துல் லத்தீப் (அரசியல்வாதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அப்துல் லத்தீப்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1971–1976
முன்னையவர்ராஜமன்னார்
தொகுதிவாணியம்பாடி
பதவியில்
1977–1980
பின்னவர்என். குலசேகர பாண்டியன்
பதவியில்
1989–1991
முன்னையவர்இரகுமான்கான்
பின்னவர்ஜீனத் ஷர்புதின்
தொகுதிசேப்பாக்கம்
பதவியில்
1996–2001
தொகுதிவாணியம்பாடி
பதவியில்
2001–2006
தொகுதிவாணியம்பாடி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசூலை 1, 1936
மஞ்சவல்லி, பள்ளப்பட்டி, கரூர்
இறப்பு17 திசம்பர் 2001(2001-12-17) (அகவை 65)
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்தியன் யூனியன் முஸ்லிம்லீக்

அப்துல் லத்தீப் (பிறப்பு:-சூலை 1, 1936 இறப்பு:- திசம்பர் 17, 2001) தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி மஞ்சவல்லியில் பிறந்தார். இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக்கில் இணைந்து தனது அரசியல் பணியை துவக்கினார். நான்கு முறை வாணியம்பாடி (சட்டமன்றத் தொகுதி) உறுப்பினராகவும், ஒருமுறை சேப்பாக்கம் (சட்டமன்றத் தொகுதி) உறுப்பினராகவும்,[1][2][3][4][5] ஒருமுறை தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராகவும் மக்கள் பணியாற்றி உள்ளார். இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக் தமிழ்நாடு பொதுச் செயலாளராகவும், பின்னர் இந்திய தேசிய லீக் அகில இந்திய பொதுச் செயலாளராகவும் தமது இறுதிகாலம் வரை பணியாற்றினார்.

1980 ஆம் ஆண்டு நடைப்பெற்ற சட்டமன்ற தேர்தலில் வாணியம்பாடி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு 47.64% வாக்குகளைப் பெற்று தோல்வியை தழுவினார்.2001ல் தற்காலிக சபாநாயகராக பணியற்றினார்.

சட்டமன்ற உறுப்பினராக

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
1971 வாணியம்பாடி சுயேட்சை 27899 56.13[6]
1977 வாணியம்பாடி சுயேட்சை 26,620 42.86[7]
1989 சேப்பாக்கம் திமுக 33,104 50.21[8]
1996 வாணியம்பாடி திமுக 74,223 67.36
2001 வாணியம்பாடி சுயேட்சை 54,218 48.26

மேற்கோள்கள்

[தொகு]
  1. "1971 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. Retrieved 2019-10-03.
  2. "1977 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. Retrieved 2013-06-29.
  3. "1980 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-07-13. Retrieved 2013-06-29.
  4. 1989 Tamil Nadu Election Results, Election Commission of India
  5. "1996 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. Retrieved 2013-06-29.
  6. Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1971. Madras-9: Tamil Nadu Legislative Assembly Secretariat. January 1972. p. 182-183.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
  7. Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1977. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. November 1977. p. 27-28.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
  8. Tamil Nadu Legislative Assembly” Who's Who 1989. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. December 1989. p. 15.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)