உள்ளடக்கத்துக்குச் செல்

சி. விஜயபாஸ்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி. விஜயபாஸ்கர்
முன்னாள் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அமைச்சா்,
தமிழ்நாடு அரசு
பதவியில்
1 நவம்பர் 2013 – 7 மே 2021
ஆளுநர்கொனியேட்டி ரோசையா
சி. வித்தியாசாகர் ராவ்
(கூடுதல் பொறுப்பு)
பன்வாரிலால் புரோகித்
முன்னையவர்கே. சி. வீரமணி
பின்னவர்மா. சுப்பிரமணியம்
தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
16 மே 2011
முன்னையவர்தொகுதி உருவாக்கப்பட்டது
தொகுதிவிராலிமலை
பதவியில்
14 மே 2001 – 12 மே 2006
முன்னையவர்பி. மாரி அய்யா
பின்னவர்ஆர். நெடுஞ்செழியன்
தொகுதிபுதுக்கோட்டை
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு8 ஏப்ரல் 1974 (1974-04-08) (அகவை 50)
இலுப்பூர், புதுக்கோட்டை, தமிழ்நாடு
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
துணைவர்ரம்யா
பிள்ளைகள்2 மகள்கள்
வேலைஎம்.பி.பி.எஸ்
தொழில்
இணையத்தளம்https://drcvijayabaskar.com/

சி. விஜயபாஸ்கர் (C. Vijayabaskar) (பிறப்பு: ஏப்ரல் 8,1974) அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் (அதிமுக) சேர்ந்த தமிழக அரசியல்வாதி ஆவார். 2011 முதல் 2021 வரை தமிழ்நாட்டின் சுகாதார அமைச்சராகவும் இருந்தார்.[1][2][3] இவர் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதே தொகுதியில் 2011,2016 மற்றும் 2021 சட்டமன்ற பொதுத் தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளார். இதற்கு முன்பு 2001-ல் புதுக்கோட்டை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

சி.விஜயபாஸ்கர் 1974 ஆம் ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதி தமிழ்நாடு மாநிலத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இலுப்பூரில் ஆர்.சின்னதம்பி என்பவருக்கு மகனாகப் பிறந்தார். சிதம்பரம், இராசா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் தனது மருத்துவ கல்வியை முடித்தார். [4] இவர் ரம்யா என்பவரை மணந்தார். .ந்த தம்பதியருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.[5]

சர்ச்சைகள்

[தொகு]

ஏப்ரல் 2017 இல் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் இவரது வீட்டில் வருமான வரி சோதனை நடத்திய அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்பட்டதால், அவரது சக அமைச்சர்களான ஆர். காமராஜ் மற்றும் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. இருப்பினும் தகுந்த ஆதாரங்கள் இல்லாததால் அவை ரத்து செய்யப்பட்டன.[6] இவர் 2018 ஆம் ஆண்டில் மத்திய புலனாய்வுப் பிரிவின் மேலதிக விசாரணையை எதிர்கொண்டார். [7]

விஜயபாஸ்கர் ஏப்ரல் 2017 இல் மாநில சுகாதார அமைச்சராக இருந்த போது அவரது வீட்டில் மேற்கொள்ளப்பட்ட வருமான வரி சோதனையில், சென்னையின் ஆர். கே. நகர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலின் போது தனது கட்சி வேட்பாளரான டி. டி. வி தினகரன் சார்பாக வாக்காளர்களுக்கு தலா 4,000 வீதம் ரூ 89 கோடியை லஞ்சம் கொடுப்பதற்கான நோக்கத்தை வெளிப்படுத்தும் தெளிவான ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக வருமான வரித்துறை அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.[8]

அ. தி. மு. க தலைமையிலான தமிழக அரசில் தனது ஐந்தாண்டு காலப்பகுதியில் சட்டவிரோதமாக 27 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை வாங்கியதாக விஜயபாஸ்கர் மீது கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநரகம் (டிவிஏசி) வழக்கு பதிவு செய்தது. அவரது மனைவியையும் இவ்வழக்கில் சேர்க்ப்பட்டுள்ளார். மேலும் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் சொந்தமானதாகக் கூறப்படும் பல்வேறு இடங்களில் 2021 அக்டோபர் 18 அன்று மேலும் சோதனைகள் நடத்தப்பட்டன.[9]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Govt. of Tamil Nadu. Archived from the original (PDF) on 2012-03-20.
  2. "Vijayabaskar is new Health Minister". newindianexpress.com. Archived from the original on 23 April 2016. பார்க்கப்பட்ட நாள் 12 April 2016.
  3. "Health minister of Tamil Nadu". assembly.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 12 April 2016.
  4. "Dr C Vijayabaskar Official (Visiting his alma mater during COVID crisis)". 5 September 2020.
  5. "CVB Personal - Dr.C.Vijayabaskar Biography Native". Dr.C.Vijayabaskar (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-11.
  6. Madhav, Pramod (14 April 2017). "FIRs against 3 AIADMK ministers for obstructing I-T raids". http://indiatoday.intoday.in/story/chennai-firs-aiadmk-ministers-obstructing-it-raids/1/929457.html. பார்த்த நாள்: 2017-05-04. 
  7. Sundar Singh, C (2018-09-06). "Vijayabaskar First Tamil Nadu Minister to Come Under CBI and IT Scanner, Stalin Demands Resignation". https://www.news18.com/news/politics/vijayabaskar-first-tamil-nadu-minister-to-come-under-cbi-and-it-scanner-stalin-demands-resignation-1868895.html. பார்த்த நாள்: 2018-09-06. 
  8. . https://tamil.oneindia.com/news/tamilnadu/rk-nagar-bypoll-rs-4000-per-vote-document-leaks-from-it-office-279206.html. 
  9. "'Amassed Rs 27 crore as Health Min': DVAC books AIADMK's C Vijayabhaskar". The News Minute (in ஆங்கிலம்). 2021-10-18. பார்க்கப்பட்ட நாள் 2021-10-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._விஜயபாஸ்கர்&oldid=4146861" இலிருந்து மீள்விக்கப்பட்டது