பி. தங்கமணி
Jump to navigation
Jump to search
பி. தங்கமணி ஒரு தமிழக அரசியல்வாதி ஆவார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த ஒரு அரசியல் தலைவர்.[1] இவரின் சொந்த ஊர் பள்ளிபாளையம் அருகேயுள்ள ஆலம்பாளையம் ஆகும். 2011 ஆண்டு குமாரபாளையம் சட்ட மன்றத் தொகுதியில் வெற்றி பெற்று சட்ட மன்ற உறுப்பினர் ஆன இவர் 2011 தமிழக அமைச்சரவையில் தொழில்துறை அமைச்சராக பதவி வகித்தார். 2006இல் நடந்த தேர்தலில் திருச்செங்கோடு சட்ட மன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார். 2016ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் குமாரபாளையம் சட்ட மன்றத் தொகுதியில் வெற்றி பெற்று மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.[2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "திரு பி.தங்கமணி". தமிழ்நாடு அரசு (திருத்தப்பட்ட நாள் ஏப்ரல், 6, 2016). பார்த்த நாள் 7 ஏப்ரல் 2016.
- ↑ "புதிய அமைச்சர்கள் வாழ்க்கை குறிப்பு". தினத்தந்தி (2016 மே 29). பார்த்த நாள் 29 மே 2016.