உள்ளடக்கத்துக்குச் செல்

எஸ். பி. சண்முகநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எஸ். பி. சண்முகநாதன் என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதி மற்றும் முன்னாள் அமைச்சராவார். இவர் தூத்துக்குடி மாவட்டம் பண்டாராவிளையைச் சேர்ந்தவர் இவர் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு 1996-ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் ஜவுளி மற்றும் கைத்தறி துறை மந்திரியாக பதவி வகித்தார். பின்பு 2011-ம் ஆண்டு இதே தொகுதியில் அதிமுக சார்பில் வெற்றி பெற்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பணிபுரிந்து இருக்கிறார்.

  • அடுத்த நடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் இதே தொகுதியில் வெற்றி பெற்று பால்வளத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[1]
  • பின்பு அவ்வாண்டே முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அதிமுகவில் இருந்து விலகினார். தமிழக அமைச்சரவையில் 2016 ஆகத்து 29 அன்று நடந்த மாற்றத்தில் சண்முகநாதன் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "புதிய அமைச்சர்கள் வாழ்க்கைக் குறிப்பு". தினத்தந்தி. 29 மே 2016. Retrieved 29 மே 2016.
  2. "தமிழக அமைச்சரவையில் மாற்றம்: புதிய அமைச்சராகிறார் மாஃபா பாண்டியராஜன் - இன்று மாலை பதவியேற்பு விழா". செய்தி. தி இந்து. 30 ஆகத்து 2016. Retrieved 31 ஆகத்து 2016.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._பி._சண்முகநாதன்&oldid=4500386" இலிருந்து மீள்விக்கப்பட்டது