ஜெகன்மூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மு. ஜெகன்மூர்த்தி
Dr.M.Jagan Moorthy.png
தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2 மே 2021
முன்னவர் G.லோகநாதன்
தொகுதி கீழ்வைத்தியனான்குப்பம் (சட்டமன்றத் தொகுதி)
பதவியில்
13 மே 2006 – 13 மே 2011
முதல்வர் மு. கருணாநிதி
முன்னவர் K.பவானி கருணாகரன்
பின்வந்தவர் S.ரவி
தொகுதி அரக்கோணம் (சட்டமன்றத் தொகுதி)
தனிநபர் தகவல்
பிறப்பு 10 மே 1966 (1966-05-10) (அகவை 56)
ஆன்டர்சன்பேட்டை, நேமம்
தேசியம் இந்தியன்
அரசியல் கட்சி புரட்சி பாரதம் கட்சி
பெற்றோர் முனுசாமி (தந்தை)

ருக்மணிஅம்மாள் (தாய்)

இருப்பிடம் ஆண்டரசன்பேட்டை, நேமம், தமிழ்நாடு, இந்தியா

பூவை ஜெகன் மூர்த்தி (பிறப்பு: மே 10, 1966) என்று அழைக்கப்படும் டாக்டர் பூவை மு. ஜெகன் மூர்த்தி ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழ்நாட்டின் சமூக ஆர்வலர் ஆவார். இவர் தமிழ்நாட்டின் சேர்ந்த கே.வி.குப்பம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் புரட்சிபாரதம் கட்சியின் தற்போதைய தலைவராக உள்ளார் .

புரட்சிபாரதம் கட்சியின் நிறுவனர் டாக்டர் பூவை எம்.மூர்த்தி அவர்கள் செப்டம்பர் 2, 2002 அன்று மாரடைப்பால் இறந்த பிறகு, பூவை மு. ஜெகன் மூர்த்தி செப்டம்பர் 7, 2002 அன்று பல மூத்த கட்சி நிர்வாகிகளின் ஏகமனதான ஆதரவுடன் புரட்சிபாரதம் கட்சியின் தலைவரானார்.

அவர் தமிழ்நாட்டின் பட்டியல் சாதியினரிடையே ஒரு சக்திவாய்ந்த புரட்சிகர தலைவராக உயர்ந்தார். சமூகத்தில் சாதி மற்றும் மத பாகுபாட்டை அகற்றுவதே இவரது அரசியல் கொள்கையும், அடித்தளமும் ஆகும். அவரது அரசியல் தளம் கல்வி ஒன்றே சமூக மாற்றம் என்ற கட்டமைப்பின் மூலமாகவே அறிவூட்ட முடியும் என்று தன் மக்களை அறிவூட்டுகின்றார்.

2006ல் , அவர் திமுக கூட்டணி வைத்து, அரக்கோணம் தொகுதிக்கான தமிழக சட்டமன்றத்தில் போட்டியிட்டு 2006 தேர்தலில் வெற்றி பெற்றார். அவரும் அவரது கட்சியும் 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவை ஆதரித்தன. 2021 தமிழ்நாடு தேர்தல்களில் அவர் அதிமுகவுடன் கூட்டணியைத் தொடர்ந்தார், மேலும் அவர் தமிழ்நாட்டின் கே. வி. குப்பம் தொகுதியில் போட்டியிட்டு 2021 தேர்தலில் வெற்றி பெற்றார்.

இவர் ஒரு சமத்துவத் தலைவர், பட்டியல் சாதியினருக்காக மட்டுமல்ல, தமிழ் மக்களின் நலனுக்காகவும் தொடர்ந்து போராடி வருகின்றார். தமிழ்நாட்டின் ஒடுக்கப்பட்டவர்கள், சிறுபாண்மையினர், மாணவர்கள், மற்றும் தமிழ் மக்களின் நலனுக்காக அவர் பல போராட்டங்களை நடத்தினார்.

வகித்த பதவிகள்[தொகு]

சட்டமன்ற உறுப்பினராக[தொகு]

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
2006 அரக்கோணம் புரட்சி பாரதம் கட்சி (திமுக சின்னம்)
2021 கீழ்வைத்தினான்குப்பம் புரட்சி பாரதம் கட்சி (அதிமுக சின்னம்) 48.57%

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெகன்மூர்த்தி&oldid=3324047" இருந்து மீள்விக்கப்பட்டது