கடம்பூர் ராஜு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கடம்பூர் ராஜு (Kadambur Raju பிறப்பு: ஆகஸ்டு 20, 1959 ) என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதியாவார். இவர் தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் அருகே உள்ள சிதம்பராபுரத்தில் பிறந்தவர். பி.யூ.சி. படிப்பை முடித்து, பின்னர் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றார். பின் அவரது சொந்த ஊரில் உள்ள இந்து தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார். இவருக்கு இந்திரா காந்தி என்ற மனைவியும், அருண்குமார் என்ற மகனும், காயத்ரி என்ற மகளும் உள்ளனர். ஆசிரியர் வேலையை விட்டு விலகிய இவர் அதிமுகவில் சேர்ந்தார்.[1] 2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மீண்டும் 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வென்று தமிழக அமைச்சரவையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். [2]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கடம்பூர்_ராஜு&oldid=2573155" இருந்து மீள்விக்கப்பட்டது