தே. மதியழகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தே. மதியழகன்
சட்டமன்ற உறுப்பினர் தமிழ்நாடு
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
12 மே 2021
முன்னவர் ஏ. கிருஷ்ணன்
தொகுதி பர்கூர்
தனிநபர் தகவல்
அரசியல் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்

தே. மதியழகன் (D. MATHIAZHAGAN) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினரும் ஆவார். இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரைச் சேர்ந்தவர். மதியழகன் திருப்பத்தூரில் உள்ள திரு இருதய கல்லூரியில் இளநிலை அறிவியல் கல்வியும், ஐதராபாத்தில் உணவக தொழில்நுட்பத்தில் பட்டயப்படிப்பினையும் முடித்துள்ளார். மதியழகன் திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் ஆவார். இவர் 2021 மே மாதம் நடைபெற்ற தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பர்கூர் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்று தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Mathiazhagan D(DMK):Constituency- BARGUR(KRISHNAGIRI) - Affidavit Information of Candidate:". myneta.info. 2021-11-10 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தே._மதியழகன்&oldid=3495529" இருந்து மீள்விக்கப்பட்டது