கே. ஏ. செங்கோட்டையன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கே. ஏ. செங்கோட்டையன் ஓர் தமிழக அரசியல்வாதி. கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியிலிருந்து தமிழக சட்டபேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[1]

கோபிச்செட்டிப்பாளையம் அருகேயுள்ள குள்ளம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியை சார்ந்த இவர் 6 முறை கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியிலிருந்து வெற்றிபெற்றுள்ளார், 1996 ல் திமுக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். தமிழ்நாட்டின் பத்தாவது சட்டமன்றத்தில் வனத்துறை அமைச்சராகவும் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார்[2]. தமிழ்நாட்டின் பதினான்காவது சட்டமன்றத்தில் விவசாயத் துறை அமைச்சராகவும், பின்னர் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராகவும், அதையடுத்து வருவாய்த் துறை அமைச்சராகவும் பணியாற்றி வ‌ந்தா‌ர் செ‌ங்கோ‌ட்டைய‌ன்.[3][4]

தமிழக அமைச்சரவையில் வருவாய்த்துறை அமைச்சராக பணிபுரிந்து வந்த இவர் 2012 சூலை 18 அன்று நீக்கப்பட்டார். அதிமுக கட்சியின் தலைமை நிலையச் செயலர் பதவியிலிருந்தும் அவர் விடுவிக்கப்பட்டார்.[5][6]

இவரின் தந்தை அர்த்தனாரிக்கவுண்டர், மனைவி ஈசுவரி, மகன் கதிர் ஆவார்கள் [7].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._ஏ._செங்கோட்டையன்&oldid=2013942" இருந்து மீள்விக்கப்பட்டது