விஸ்வகர்மா (சாதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

விஸ்வகர்மா என்று இந்த இனம் , அல்லது சாதி என்றும் வைத்துக்கொள்ளாம். இவர்களை கருமார், கன்னார், தச்சர், சிற்பி, தட்டார் என்றும், மேலும் கம்மாளர்,கம்சாலா பத்தர், ஆசாரி, என்றும் கூறுவர். சரியாக சொல்வது என்றால், ஐந்து விதமான தொழில் செய்பவர்கள் இவர்கள். இரும்புத்தொழில் - கொல்லர், பாத்திரவேலை - கன்னார், மரவேலை - தச்சர், சிற்பவேலை - சிற்பி, தங்கநகைத் தொழில் - பொற்கொல்லர், தட்டார், எனவும் குறிப்பிடுவார்கள். தொழில் அடிப்படையில்தான் இந்த ஜாதிப் பெயர் வந்தது என்று சொல்லலாம். மேலும் விஸ்வகர்மா என்றால், விஸ்வம் என்றால் உலகம் , கர்மா என்றால் செயல்,தொழில் அல்லது வினை என்று அர்த்தம். எனவே விஸ்வகர்மா என்றால் உலகில் செயல் புரிபவர்கள் என்று அர்த்தமாகும்.விஸ்வகர்மா என்றும் விஸ்வகர்மாலா என்றும் அழைத்துக்கொள்கின்றனர்.[மேற்கோள் தேவை] தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் பிற்படுத்தப்பட்டோரில் பிரிவு எண் 65, வரிசை எண் 42 ஆகியவற்றில் உள்ளனர்.[1] தமிழ்நாட்டில் இவர்கள் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பேசக்கூடிய இருபிரிவினர்களாக உள்ளனர்.

  1. http://www.tnpsc.gov.in/communities-list.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஸ்வகர்மா_(சாதி)&oldid=2803828" இருந்து மீள்விக்கப்பட்டது